Saturday, March 31, 2012

சென்னையை சேர்ந்த மாணவி உள்ளிட்ட முவர் - மிஸ் இந்தியா பட்டம் வென்றனர்!

சென்னையை சேர்ந்த 23 வயது இளம்பெண் ரோச்சல் மரியராவ் உள்பட 3 பெண்கள் 'மிஸ் இந்தியா' பட்டம் வென்றனர். 'மிஸ் இந்தியா-2012' அழகி போட்டியை பேன்டலூன்ஸ் யஅp பெமினா இணைந்து நடத்தின. இதில் நாடு முழுவதும் இருந்து அழகிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக போட்டிகள் நடத்தப்பட்டன.
அவர்களில் இருந்து இறுதிச் சுற்றுக்கு 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

டி20 உலகக் கிண்ண போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது

இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியுள்ளது.
நான்காவது டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் வருகிற செப்ரெம்பர் மாதம் நடைபெற உள்ளது. போட்டிக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான டிக்கெட்டை சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி) இணையதளம் மூலமாக பெறலாம். டிக்கெட் விலை மற்ற போட்டிகளை விட மிகவும் குறைவாக உள்ளது.

இந்தியாவில் கேள்விக்குறியாகிவிட்ட பாம்பாட்டிகளின் வாழ்க்கை

பாம்பாட்டிகளின் நாடு என்று வெளிநாட்டவரால் ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்தியாவில் இப்போது பாம்பாட்டிகளை வனத்துறையினர் தண்டிக்கும் நிலை உருவாகியுள்ளது.
தலைநகர் புதுடெல்லியை விட்டு ஒரு மணி தூரப் பயணத்தில் ஃபரிதாபாத் என்ற கிராமம் உள்ளது.
அங்கு புத் நாத்(வயது 65) என்பவர் பாரம்பரியமாக பாம்பு பிடித்து வித்தை காட்டி வாழ்பவர். இவர் பாம்பு பிடிக்கும் பேடியா இனத்தை சேர்ந்தவர் ஆவார்.

மனித நோய்களை கண்டுபிடிக்கும் ரோபோ

பலவிதமான ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் தற்போது மனிதர்களின் நோயை கண்டறியும் ரோபோக்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை ஒரு உயிரினம் போன்று தாங்கள் பணியை செய்ய முடியும்.
இதை இங்கிலாந்தில் உள்ள நியூகேஸ்டில் பல் கலைக்கழகத்தின் சர்வதேச நிபுணர்கள் குழு வடிவமைத்துள்ளது. மைக்ரோ ரோபோ என அழைக்கப்படும் இவற்றில் மைக்ரோ எலெக்ட் ரானிசுடன் சைபர் பிளாசம் கலக்கப்பட்டுள்ளது. இது அட்லாண்டிக் கடலில் ஆழ் பகுதியில் வாழும் 'லேம்பிரே' என்ற உயிரினத்தின் செயல்பாடு போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் ஊனமுற்ற ராணுவ வீரர்கள்

எவரெஸ்ட் சிகரத்தில் ஊனமுற்ற ராணுவ வீரர்கள் ஏறுகின்றனர். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் இமய மலையில் உள்ளது. கடந்த 1953-ம் ஆண்டில் எட்மண்ட் ஹிலாரி டென்சிங் நார்கே ஷெர்பா ஆகியோர் முதன் முதலாக ஏறி உலக சாதனை படைத்தனர்.
அவர்களை தொடர்ந்து தற்போது பனி படர்ந்த எவரெஸ்ட் சிகரத்தில் பலர் ஏறி முத்திரை பதிக்கின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்து வீரர்கள் 3 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற இமயமலையில் முகாமிட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் போரின் போது உடல் ஊனமுற்ற ராணுவ வீரர்கள்.

Friday, March 30, 2012

உலகின் பிரம்மாண்டமான நதிகள். நதிகளை நம்பி வாழ்க்கை.........

நைல் நதி.
வட ஆப்பிரிக்காவில் உள்ளது.இதன்  நீளம் 6650கிமீ. ஆப்பிரிக்காவின் நீளமான நதி.எகிப்தில் உருவாகும் நைல் நதி சூடான்  புருண்டி  ருவாண்டா  காங்கோ  தன்சானியா  கென்யா  உகண்டா எத்தியோப்பியா நாடுகள் வழியாக பாய்கிறது.வட ஆபிரிக்காவிற்கு  கடவுள் கொடுத்த கொடை தான் இந்த நைல் நதி. நைல் நதியினை நம்பி எத்தனையோ உற்பத்திகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மக்களின் தோற்றம் நைல் நதிக்கரையை அண்டியே தோற்றம் பெற்றதாக கூறப்படுகின்றது.

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்......

 மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்
ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.
அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.
முதல் விருப்பமாக "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

வரலாற்றை நினைவுபடுத்தியதால் மீளப் பெறப்பட்ட முத்திரை

1956இல் 'விஜயனின் வருகை' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை(முத்திரை) ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும் கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இத் தபால் தலை அமைந்திருந்தது.
தபால் தலையைப் பார்த்த பெரும்பான்மையினத் தலைவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

நியூசிலாந்தின் பெயர் கூறும் கிவி பழமும் கிவி பறவையும்

கிவி பழம் நியூசிலாந்தில் அதிகளவு விளைகிறது. 'சீனத்து நெல்லிக்கனி' என்றும் அழைக்கப்படுகிறது. சீனா இத்தாலி ஸ்பெயின் அவுஸ்திரேலியா ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பயிரிடப்படுகிறது. விற்றமின் சி அதிகமுள்ளது. நீரிழிவு மாரடைப்பு மற்றும் பல நோய்களை நீக்க வல்லது.
கிவி பறவை நியூஸிலாந்தின் தேசியப் பறவை. இவற்றில் 5 வகைகள் உள்ளன. சாதாரண கோழியின் அளவை ஒத்தது. கோழியை விட 6 மடங்கு பெரிய முட்டையை இடுகின்றது.

ரஷிய ஏவுகணைகளால் இலங்கை போர் விமானங்களை விடுதலைப்புலிகள் அழித்தனர்: விசாரணையில் தகவல்

இலங்கையில் கடந்த 27 ஆண்டுகளாக தனிஈழம் கேட்டு விடுதலைப்புலிகள் போராடினர். ராணுவத்துடன் கடும் போரிட்டனர். அப்போது ராணுவத்துக்கு சொந்தமான 8 விமானங்களை விடுதலைப்புலிகள் சுட்டு வீழ்த்தி அழித்துள்ளனர். எனினும் விடுதலைப்புலிகளின் தாக்குதலால் விழுந்து நொறுங்கிய பல விமானங்கள் எந்திர கோளாறு காரணமாகவே வீழ்ந்ததாக விமானப்படையினர் கருதினர்.
போர் முடிந்த பின்னர் விடுதலைப்புலிகளின் பதுங்கு குழிகளில் இருந்து மீட்கப்பட்ட ஏவு கணைகளில் இருந்து வெற்று தோட்டாக்கள் கண் டெடுக்கப்பட்டன. அதன் மூலம் தாக்குதல் நடத்தியே விமானங்கள் வீழ்த்தப்பட்டதை ராணுவம் உறுதி செய்தது.

ஸ்பெயினில் சவுதி அரேபியா இளவரசர் மீது கற்பழிப்பு வழக்கு விசாரணை

சவுதி அரேபியா இளவரசர் அல்வால்ட் பின் தலால். உலக கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஸ்பெயினில் உள்ள யாசிட் நகரில் உள்ள இபிஷா என்ற இடத்தில் சிறிது காலம் தங்கி இருந்தார். அப்போது 20 வயது மாடல் அழகியை கற்பழித்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது. இதை அவர் மறுத்தார்.
இதுகுறித்து ஸ்பெயின் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசர் தலால் மீது கற்பழிப்பு வழக்கு தொடரலாம் என தீர்ப்பு கூறியது. அதை தொடர்ந்து அவர் மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரிடம் விரைவில் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

கனடாவில் பள்ளிப்பேருந்து விபத்தில் 36 பேர் காயம்

கனடாவில் டொரொண்டோவில் நின்றுகொண்டிருந்த பள்ளிப்பேருந்து மீது மற்றொரு பள்ளிப் பேருந்து மோதியதால் 36 மாணவர்கள் காயமடைந்தனர்.
37 மாணவர்களை ஏற்றி வந்த பள்ளிப்பேருந்து ஒன்று புதன்கிழமை காலை நியூ டெக்யூம்செத் என்ற இடத்தில் தொடர்வண்டி கடக்கும் பகுதியில் நின்றுகொண்டிருந்தது.
அப்போது அதற்குப் பின்னால் வந்த பேருந்து ஒன்று இந்தப் பேருந்து நிறுத்தப்பட்டது தெரியாமல் மோதிவிட்டது. அந்தப் பேருந்தில் 22 மாணவர்கள் இருந்தனர். பேருந்து வேகமாக வந்து மோதியதால் மாணவர்கள் பலர் பலத்த காயமுற்றனர்.

நடைமுறை கல்வி அறிவு இல்லாத இங்கிலாந்து மாணவர்கள்

இங்கிலாந்தில் உள்ள மாணவ மாணவியர்களில் ஐந்து பேரில் ஒரு மாணவ மாணவியருக்கு நடைமுறை கல்வி அறிவு குறைந்து காணப்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவலை வேர்ல்டு லிட்டர்ஸி பவுண்டேசனின் தலைமை அதிகாரி வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த ஆய்வில் இங்கிலாந்தில் வசிக்கும் மக்களில் எட்டு மில்லியன் மக்களுக்கு அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் சிரமப்படுவதாக தெரியவந்துள்ளது.

Thursday, March 29, 2012

சிவப்புக் கலர் உடை ஆண்களை சிலிர்க்க வைக்குமாம்..!

சிவப்பு நிற ஆடை அணிந்துள்ள பெண்களைக் கண்டதும் ஆண்களுக்கு காதல் உணர்வு கிளர்ச்சி அதிகரிக்கிறதாம். எனவே பெண்களே தனியாக எங்காவது சென்றாலோ காதலரை சந்திக்க சென்றாலோ சிவப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்க்கலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
அதேசமயம் கணவருக்கு மூடு வரவழைக்க நினைக்கும் பெண்கள் சிவப்பு நிற ஆடைகளை அணிவதற்கு தடை ஏதும் இல்லை என்கின்றனர் அவர்கள். முடிந்தால் சிவப்பு நிற உடைகளை மட்டுமே அணியலாம்.

சிதைந்த முகத்திற்கு பதில் புதிய முகம்: அமெரிக்காவில் சாதனை

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் துப்பாக்கி குண்டு விபத்தில் பாதிக்கப்பட்டு முகம் சிதைந்த விர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு தற்பொழுது அறுவை சிகிச்சை மூலம் புதிய முகம் கிடைத்துள்ளது. 15 ஆண்டுகளாக தன்னுடைய முகத்தை வெளியில் காட்டவே பயந்த அந்த இளைஞர் தற்போது தனது புதிய முகத்தைக் கண்டு மகிழ்சியடைந்துள்ளார்.
தெற்கு அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியா மாகாணம் ஹில்ஸ் வில்லி பகுதியை சேர்ந்தவர் ரிச்சாட் லீ நாரிஸ்.15 வருடங்களுக்கு முன் ஒரு துப்பாக்கி குண்டு விபத்தில் தாக்கப்பட்டார். இதில் அவரது முகத்தில் மூக்கு மற்றும் வாய் பகுதி முற்றிலும் சிதைந்தது.

உலகின் கண்டங்கள் அனைத்தும் இணைந்து புதிய அமேசியா கண்டம் உருவாகும் - விஞ்ஞானிகள் தகவல்

உலகில் உள்ள கண்டங்கள் அனைத்தும் இணைந்து அமேசியா என்ற புதிய பெரிய கண்டம் உருவாகும் என புவி யியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் அமெரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களின் வடக்கு பகுதி நீர் மற்றும் காற்றுப்போக்கினால் இணையும். இதனுடன் ஆர்டிக் கடலும் கரீபியன் கடலும் ஒன்றாக சேரும். இதன் மூலம் மிகப்பெரிய புதிய கண்டம் உருவாகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, March 28, 2012

டோங்கா நாட்டின் 5வது மன்னரின் உடல் அடக்கம்டோங்கா நாட்டின் 5வது மன்னர் ஜார்ஜ் துபூ மார்ச் 18ம் திகதி காலமானார்.
இதையடுத்து அவரது உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் டோங்கா நாட்டின் அரசபிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஜார்ஜ் துபூ: இவர் கடந்த 1948ம் ஆண்டு மே 4ம் திகதி பிறந்தார். டோங்கா நாட்டின் இளவரசராக 1966ம் ஆண்டு மே 4ம் திகதி நியமிக்கப்பட்டார்.
2006ம் ஆண்டு செப்ரெம்பர் 11ம் திகதி டோங்கா நாட்டின் மன்னராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
தனது அறிவாற்றலாலும் சீரான செயற்பாட்டாலும் டோங்கா நாட்டிற்கு பல்வேறு நலஉதவிகளை செய்துள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆஸி.க்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் கடற்படை தளம் அமைக்கிறது அமெரிக்கா

இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலி யாவுக்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் ஆளில்லா வேவு விமான தளத்துடன் கூடிய பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமைக்க அந்நாடு அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆஸ்திரேலியா பயணத்தின் போது இருநாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன் ஆஸ்திரேலியாவின் டார்வின் தீவில் அமெரிக்க படைகளை நிலைநிறுத்தவும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

உங்கள் காதல் எப்படி… கண்டுபிடிக்கலாம் இப்படி..

காதல் புனிதமானது. புதிரானதும் கூட. ஆனால் என்றும் புதிதானது. காதலிப்பவர்களுக்கு இடையில் உள்ள உறவு எப்படி இருக்கிறது என்பதை அளவிட இங்கு ஒரு சுயபரிசோதனை கேள்வி-பதில் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் காதலின் ஆழத்தை அளவிட்டுக் கொள்ளலாம். புதிதாக காதலிக்கத் தொடங்கினால் உங்கள் துணையை எப்படி கவர்ந்திழுக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
 

தமிழ் சினிமாவின் சூப்பர் 10 காதல் ஜோடிகள்........பந்தங்களாய் தொடரும் இன்பம்

திரையில் என்னதான் கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் பயாலஜியோடு நடித்தாலும் காதல் சில ஜோடிகளுக்கு இடையில் மட்டுமே தன் மாய வித்தையை காட்டி இருக்கிறது. பிரகாஷ்ராஜ் பாஷையில் சொன்னால் சிலரை பார்த்தவுடன் மட்டும் மனசுக்குள் பலப் எரிந்து காதுக்குள் மணி ஒலித்து வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறக்கத் தொடங்குகிறது. அது சரி ஆனால் காதல் வந்த எல்லாரும் மணம் முடிப்பது இல்லையே..மணம் முடித்த அனைவரும் சேர்ந்து வாழ்வதும் இல்லை. திரையில் ஆயிரம் ஜோடிகள் டிஜிட்டல் வண்ணங்களில் ட்யூலிப் தோட்டத்துக்கு நடுவில் அஸ்கு லஸ்கா பாடினாலும் ஒன்றாக வாழும் வாழ்க்கை சில ஜோடிகளுக்கு மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் ஆரம்பகட்ட கிசு கிசுக்களை தாண்டி போராட்டம் குழப்பம் எல்லாவற்றையும் கடந்து  நிஜத்திலும் ஒன்று சேர்ந்த சூப்பர் ஜோடிகளின் பட்டியல் இது.

Tuesday, March 27, 2012

லண்டன் ஒலிம்பிக்கில் சயனைட் மூலம் வீரர்கள், பார்வையாளரைக் கொல்ல அல்கய்தா திட்டம்!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வரும் ஜூலை 27ம் தேதி ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் போது வீரர்கள் பார்வையாளர்களை சயனைடு மூலம் கொல்ல அல் கய்தா தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக தி சன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன.
ஏற்கனவே தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் இங்கிலாந்து பாதுகாப்புப் படையினர் போலீசார் கமாண்டோக்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு வரும் வீரர்கள் பார்வையாளர்களை சயனைடு மூலம் கொல்ல அல் கய்தா தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக தி சன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது-

உலகின் மிகப் பெரிய மலர்?

ரஃப்லீசியா (Rafflesia) எனப்படுவது உலகிலேயே மிகப் பெரிய மலராகும். இம்மலரைத் தமிழில் பிணவல்லி என்று கூறுவர். இதற்குக் காரணம் இம்மலரிலிருந்து வரும் ஒருவகை துர்நாற்றமாகக் கூட இருக்கலாம்.
பிணவல்லி மலேசியா தாய்லாந்து சுமத்ரா தீவுகள் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் காணப்படும்.

தீர்மானத்தை பின்பற்ற முடியாது : இலங்கை திட்டவட்டம்

ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முதலே கடுமையாக பேசி வருகிறது இலங்கை. இதன் தொடர்ச்சியாக தற்போது தீர்மானத்தை பின்பற்ற முடியாது என இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் கடந்த வாரம் ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டது
அந்த தீர்மானத்தில் இறுதிக்கட்ட போர் குறித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசு முறையாக பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

வடகொரியாவின் ரொக்கெட் சுட்டு வீழ்த்தப்படலாம் தென்கொரியா எச்சரிக்கை

தென்கொரியப் பிராந்தியத்தை மீறும் வடகொரியாவின் ரொக்கெட் சுட்டு வீழ்த்தப்படும் என தென்கொரியா எச்சரித்துள்ளது. சர்வதேச அணு சக்திப் பாதுகாப்பு மாநாட்டிற்காக சுமார் 60 தலைவர்கள் சியோலில் ஒன்று கூடியிருக்கும் வேளையிலயே இவ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட தூர ஏவுகணை யொன்றின் உதவியுடன் செய்மதியொன்றை விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக இம்மாத முற்பகுதியில் வடகொரியா அறிவித்ததை தொடர்ந்து அந்நாட்டின் மீதே அனைவரது கவனமும் குவிந்துள்ளது.
இத்திட்டம் அமைதியை நோக்காகக் கொண்டதென தெரிவித்திருக்கும் வடகொரியா புதிய மார்க்கமூடாக இவ் ஏவுகணைகள் ஏவப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இவ் ஏவுகணை தமது பிராந்தியத்தை மீறும் பட்சத்தில் அல்லது பிராந்தியத்தின் பக்கம் வரும் பட்சத்தில் அதனை சுட்டு வீழ்த்துவது குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ள தென் கொரியப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஆத்திரமூட்டுவதும் அசட்டுத்தனமானதுமான இவ்வாறான  நடவடிக்கைகளுக்கு எம்மால் உதவ முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் ஹிட்லர் ஷாம்பூ விற்கும் விளம்பர படத்துக்கு எதிர்ப்பு

ஜெர்மனியின் சர்வாதிகாரியாக திகழ்ந்தவர் அடால்ப் ஹிட்லர். இவரது வீடியோ காட்சிகள் மூலம் துருக்கியை சேர்ந்த ஒரு ஷாம்பூ நிறுவனம் விளம்பர படம் தயாரித்துள்ளது. அதில் ஹிட்லர் தலைமையில் பேரணி நடக்கிறது. அதில் பங்கேற்றுள்ளவர்களிடம் பெண்கள் பயன்படுத்தும் ஷாம்பூவை ஆண்கள் கட்டாயம் பயன்படுத்தகூடாது. இந்த விளம்பரம் தயாரித்த ஷாம்பூவை தான் அவர்கள் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடுவது போன்று உள்ளது.

காதல் திருமணத்தை ஏன் ஒத்துக்க மாட்டேங்கிறாங்க...?

வீட்டைக் கட்டிப்பார் திருமணம் செய்துபார் என்பார்கள். திருமணம் செய்வது அந்த அளவிற்கு கடினமாக விசயம். ஆனால் மனதிற்கு பிடித்த துணையை பார்த்து காதலிப்பதும் திருமணம் செய்துகொள்வதும் இன்றைய இளைய தலைமுறைக்கு எளிதான காரியமாக உள்ளது.
பெரும்பாலான பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பதில்லை. தங்கள் குழந்தைகளுக்கு தாங்களாக பார்த்து முடிவு செய்து துணையை தேடித்தருவதைத்தான் விரும்புகின்றனர். இதற்கு காரணம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்க்கையில் எழும் பல சிக்கல்கள்தான்.

புதிய கண்டுபிடிப்பு - சூரிய சக்தியையுடைய புல்லட் ரயில்

இது ஒரு மிகச்சிறந்த தொழில் நுட்பத்தாலான சூரிய சக்தியையுடைய புல்லட் ரயில் ஆகும். இது அரிசோனாவின் சூரிய சக்தியில் இயங்கும் புல்லட் ரயில்.
இதை செய்ய தேவையான அனைத்து தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள் ஐரோப்பா ஆசியா மற்றும் அரிசோனாவிலிருந்து பெறப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவின் அதி வேக இரயில் மணிக்கு 220 மயில் வேகத்தில் செல்லக்கூடியது. இத் திட்டம் ஆரம்ப கட்டங்களில் உள்ளது மற்றும் இதன் செலவு 28 பில்லியன் டொலர்கள் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜேர்மனிக்கு இனி வசந்த காலம் ஆரம்பம்.........

ஜேர்மனியில் இந்த வார இறுதியில் வெயில் குறைந்து விடும் என்று வானிலை அறிவிப்பு மையம் (DWD) நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
விண்கல் ஆய்வாளரான டா ரதியா பேட்ஸோல்டு ஜேர்மனி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அண்மையில் வெகு வேகமாகப் பரவி வந்த காட்டுத்தீக்கு ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக கூறி நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
இனி வெப்பம் குறிப்பிட்ட அளவுடையதாகவே இருக்கும் என்றும் கூறினார். உயர் அழுத்தம் காரணமாக வெப்பம் அதிகமாக இருந்தது. இனி அட்லாண்டிக் கடலில் இருந்து குளிர்காற்று புறப்பட்டு ஸ்காண்டிநேவியா வழியாக ஜேர்மனிக்குள் வரத் தொடங்கும். புதன்கிழமை வீசத் தொடங்கும் இந்தக் காற்று வார இறுதியில் ஜேர்மனியை வந்து குளிர்விக்கும்.

பூமியின் மிக ஆழமான கடலில் தனியாகப் பயணித்து ஜேம்ஸ் கேமரூன் சாதனை!!

பூமியின்மிக ஆழமான கடல் பகுதியில் 11 கிமீ தூரம் பயணத்து மூன்று மணி நேரம் தங்கியிருந்து சாதனைப் படைத்துள்ளார் ஹாலிவுட்டின் நம்பர் ஒன் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.
டெர்மினேட்டர் டைடானிக் அவதார் என மெகா வெற்றிப் படங்களின் இயக்குநர் கேமரூன்.
தற்போது இவர் அமெரிக்காவில் பசிபிக் கடலில் உள்ள குலாம் தீவில் மரியானா டிரெஞ்ச் என்ற இடத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இங்கிருந்து 200 கிமீ தூரத்திலுள்ள குவாம் தீவுப் பகுதியில்தான் அவர் இந்த சாகஸத்தை நிகழ்த்தினார்.

Monday, March 26, 2012

மடகஸ்கார் தீவில் புதிய காட்டு நாரை கண்டுபிடிப்பு

மடகஸ்கார் தீவில் புதிய காட்டு நாரை ஒன்றை பறவையியல் அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
மடகஸ்கார் தீவு ஆப்ரிக்க கண்டத்தின் தென்கிழக்கே இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள பெரிய தீவாகும்.
இத்தீவில் வாழும் விலங்குகளும் தாவரங்களும் மிகவும் அரியவை. உலகில் வேறெங்கும் காண இயலாதவை.
இந்நிலையில் இத்தீவில் வாழ்கின்ற புதிய காட்டு நாரை பறவையினத்தை முனைவர் ஸ்டீவன் குட்மன் தலைமையிலான பறவையியல் அறிஞர் கண்டுபிடித்து இதற்கு  No.69 Mentocrex beankaens என்று பெயர் சூட்டியுள்ளனர்.

ஜப்பான் சுனாமியால் அலைக்கழிக்கப்பட்ட படகு கனடாவில் கரை ஒதுங்கியது

ஜப்பானில் கடந்தாண்டு மார்ச் மாதம் 11ம் திகதி ஏற்பட்ட சுனாமியால் அலைக்கழிக்கப்பட்ட படகு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கரை ஒதுங்கியது.
சார்லட் அரசியார் தீவு என்றழைக்கப்பட்ட ஹைதா கிவாயி தீவின் தென்முனையில் 140 மைல் தொலைவில் இந்த படகை மத்திய அரசின் விமானப்படை கண்டுபிடித்தது.
இந்தப்படகு ஜப்பான் நாட்டின் ஹொக்கைதோ தீவைச் சேர்ந்ததாகும். இது மெல்ல மெல்ல அசைந்து காற்றின் போக்கில் கனடா வந்து சேர்ந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரிட்டனை சுட்டெரிக்கும் வரலாறு காணாத வெயில்

ஸ்காட்லாந்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான வெயிலால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அபெர்டீன்ஷயரில் உள்ள ஃபைவ் கேஸலில்(குலஎநை ஊயளவடந in யுடிநசனநநளொசைந) அதிகபட்ச வெப்பமாகப் 22.8 டிகரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 1965ம் ஆண்டு மார்ச் மாதம் அதிகபட்சமாக 22.2 டிகிரி செல்சியஸ் வெயில் இருந்தது. அதை விட அதிக பட்சமாக இந்த வருட வெயில் ஸ்காட்லாந்தை மிகவும் சிரமப்படுத்தியுள்ளது.
பிரிட்டன் முழுவதும் வெயிலில் கடுமையாக உள்ளது. ஐரோப்பாவின் தென்பகுதியில் உள்ள பார்சிலோனா நைஸ் மஜோர்கர் போர்ச்சுக்கல்லில் உள்ள ஃபாரோ(Barcelona, Nice, Majorca and Faro in Portuga) ஆகிய பகுதிகளை காட்டிலும் பிரிட்டனில் மட்டும் தற்போது 20 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

அண்டார்டிகா கடல் நீர் வற்றிக் கொண்டிருக்கும் மர்மம்...........

அண்டார்டிகாவின் ஆழ் கடல் நீர் மர்மமான முறையில் வற்றி வருகிறது. உலகில் உள்ள ஆழ்கடல்களில் இருந்து வெப்பத்தின் மூலம் வெளியேறும் தண்ணீர் பூமியின் மேற்பரப்பை சென்றடைந்து மேகமாக மாறி மழையாக பொழிகிறது. இதன் மூலம் பூமியின் பருவ நிலை மாற்றம் சமநிலை படுத்தப்படுகிறது.
ஆனால் பனிக்கட்டிகளால் ஆன அண்டார்டிகா கடலின் தென் பகுதியில் உள்ள ஆழ்கடல் நீர் வற்றி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் வினாடிக்கு 8 மில்லியன் மெட்ரிக் டன் தண்ணீர் வற்றி மாயமானதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரியாவில் இராணுவ சூனியப் பகுதியில் ஒபாமா!

வட கொரியா அண்மையில் அறிவித்த ராக்கெட் ஏவும் திட்டத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு மத்தியில் இரண்டு வடக்கு மற்றும் தென் கொரியாக்களைப் பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ள 'இராணுவ சூனியப் பகுதிக்கு' அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று பயணம் செய்துள்ளார். அங்கு எல்லைக் கண்காணிப்புச் சாவடி ஒன்றில் அமெரிக்கத் துருப்பினரிடம் பேசிய ஒபாமா அவர்களை 'சுதந்திர உலகின் எல்லையில் இருப்பவர்கள்' என்று வர்ணித்தார்.
ஒபாமா முதற்தடவையாக சென்றுள்ள 4 கிலோமீட்டர் அகலமான இந்த இராணுவ சூனியப் பிரதேசம் உலகில் கடுமையாகக் கண்காணிக்கப்படும் எல்லைப் பகுதிகளில் ஒன்றாகும்.

இலங்கை மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும்? அமெரிக்கா!

அணு ஆயுத பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் ஈரானிடம் இருந்து தொடர்ந்து எரிபொருள் இறக்குமதி செய்யக்கூடாது என உலக நாடுகளை எச்சரித்துள்ளது. இருந்தும் இந்தோனேசியா மலேசியா பாகிஸ்தான் பிலிப்பைன்ஸ் சிங்கப்பூர் இலங்கை தைவான் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் கச்சா எண்னை மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்து வருகின்றன.

இலங்கைக்கு இந்தியா ஆதரவளித்திருந்தால் முடிவு மாறியிருக்கும்: அமைச்சர்கள் தினேஷ் சம்பிக்க விமல் லக்ஷ்மன் யாப்பா கருத்து

 ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால் அல்லது வாக்களிப்பில் கலந்துகொள்ளாது தவிர்த்திருந்தால் இறுதி முடிவு வித்தியாசமாக அமைந்திருக்கும் என அமைச்சர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எமது வெற்றிகரமான இராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் ஜெனீவாவில் உள்ள பல்வேறு இராஜதந்திரிகள் எமக்கு வரவேற்பளித்தனர். எனினும் பலம்மிக்க நாடுகளின் அழுத்தம் காரணமாக எமக்கு முன்னர் ஆதரவளித்த நாடுகள் இறுதியில் ஆதரவு வழங்கவில்லையென்றும் அமைச்சர்கள் கூறினார்கள்.

செனல்4 ஆவணப்படம் போலியானது என்பதனை ஐ.நாவினால் நிரூபிக்க முடியும் - கோதபாய ராஜபக்ஷ!

பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட ஆவணப்படம் போலியானது என்பதனை ஐக்கிய நாடுகள் அமைப்பினால் நிரூபிக்க முடியும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான உண்மை நிலைமைகளை வெளிப்படுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
குறிப்பாக இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை எவ்வாறு மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது தொண்டு நிறுவனங்களுக்கு நன்கு தெரியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகளின் கட்டுப்பாட்டில் சிக்கியிருந்த தமது நிறுவன பணியாளர்களை மீட்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பு புலிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் இயக்கத் மகளீர் அணி தலைவி தழிழினி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கும் படி கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட மா அதிபரின் ஆலோசனைக் கிடைக்காததால் சிறை வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு அரசியல் தலைவியாக கடமையாற்றிய தமிழினியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுப்ரமணியம் சிவகாமி என அழைக்கப்படும் தமிழினி இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தமிழினி தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையின் முழு ஆவணமும் சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டனர்.

Sunday, March 25, 2012

சீனாவில் பல ஆண்டு பழமை வாய்ந்த மம்மி கண்டுபிடிப்​பு

130 வருடங்கள் பழமை வாய்ந்த மம்மி ஒன்று சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டிருந்த சிலர் நிலத்தை தோண்டும் போது இந்த மம்மி கிடைத்துள்ளது.
பெண் ஒருவரின் தோற்றத்தில் காணப்படும் இந்த மம்மியின் உடலில் தோல் காணப்படுவதுடன் பற்களும் பெருமளவில் சிதைவடையாமல் காணப்படுகின்றது.
பியூயியான் மாநிலத்திலுள்ள நின்ங்டே எனும் இடத்தில் காணப்பட்ட இந்த மம்மிக்கு அருகில் கல்வெட்டு ஒன்றும் காணப்பட்டுள்ளது. அதில் கடந்த 1882ம் ஆண்டு இந்த மம்மி புதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

தங்கத்தின் விலையை முந்திய சீனத் தேயிலை!

சீனாவில் விளையும் ‌தேயிலை வகைகளில் முக்‌கியமானதாகக் கருதப்படும் லோங்ஜிங் அல்லது ட்ரகன் வெல் தேயிலையின் ஒரு கிலோப விலை ரூபாய் 57024 டொலராக நிர்ணயிக்‌‌கப் பட்டுள்ளது. இது தற்போதைய தங்கத்தின் கிலோ5 ஒன்றிற்கான விலையை விட அதிகமாகும். தங்கம் ஒரு கிலோவின் தற்பாதைய விலை 53000 டொலர் மட்டும் தான். ஆனால் சீனத் தேயிலையின் விலையே அதைவிட சுமார் 4000 டொலர் அதிகம்.

உலக வியாபாரிகளால் அதிகமாக விரும்பி வாங்கப்படும் தேயிலை வகைகளில் இது முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த வகை தேயிலை சீனாவின் பாரம்பரிய திருவிழாவான கிங்மிங் விழா கொண்டாடப்படும் மாதமான ஏப்ரல் மாதத்தில் அறு‌வடை செய்யப்படு்கிறது. ஸேஜியாங் மாகாணத்தி்ல் உள்ள ஹாங்க்ஜோவ் பகுதியில் விளைவி்க்கப்படுகிறது.

ஒபாமாவின் உரையைக் குழப்பிய நபர்!

அமெரிக்காவின் ஒஹயோ மாகாணத்தின் கொலம்பஸ் நகரில் நடந்த கூட்டத்தில் அதிபர் பராக் ஒபாமா பேசியபோது கையில் புத்தகம் வைத்திருந்த ஒருவர் அடிக்கடி உரத்து கூச்சலிட்டுக் கொண்டே இருந்தார். இந்தப் புத்தகத்தைப் படியுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஒபாமா தன்னுடைய பேச்சை நிறுத்திவிட்டு குறுக்கிட்ட நபரைப் பார்த்துப் பேசினார்.
"ஐயா நான் இங்கே இவர்களிடம் பேசுவதற்காக வந்திருக்கிறேன்; நீங்கள் வேண்டுமானால் தனியாகக் கூட்டம் போட்டு இவர்களை அழைத்துப் பேசுங்கள். ஏன் இவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறீர்கள்?" என்று கேட்டார்.

அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால் விடுத்த ஜனநாயகம்!

சர்வதேச ரீதியாக தான் மட்டுமே ஹீரோவாக இருக்க நினைக்கும் அமெரிக்கா புலிகளின் அழிப்பின் பின்னர் இலங்கை அரசு மீது கொலை வெறியாகவே இருந்துள்ளது!
இலங்கைக்கு எதிராக போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுப் பிரேரணையை ஜெனீவாவில் முன்வைத்த அமெரிக்கா அதில் எதிர்பார்த்த வெற் றியைப் பெற முடியாது முதற் தடவையாக சர்வதேச அரங்கில் பாரிய தலைகுனி வைக் கண்டுள்ளது. உலக நாடுகளுக்கெல்லாம் தானே தலைவன் என்றும் எந்த நாட்டில் எது நடந்தாலும் அதனைக் கண்காணிப்பது மட்டுமல்லாது கட்டுப்படுத்தும் உரிமையும் தனக்குள்ளதாக மார்தட்டி வந்த அமெரிக்கா இலங்கை விவகாரத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இலங்கைத் தூதரகங்களை மூடுகிறது அரசாங்கம்? - வாரஇதழ் தகவல்!!

ஐரோப்பிய நாடுகளில் செயற்படும் சில இலங்கைத் தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரபல வாராந்த பத்திரிகையொன்று செய்திவெளியிட்டுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரினை அடுத்து வெளிநாட்டு சேவைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை உரிய முறையில் முன்னெடுக்காத நாடுகளிலுள்ள தூதரகங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. தீர்மானம் எதிரொலி அமெரிக்க பொருட்களுக்கு இலங்கையில் எதிர்ப்பு!

இலங்கை::ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த மனித உரிமை மீறல் தீர்மானம் நிறைவேறியதால் இலங்கை கடும் கோபத்தில் உள்ளது. இதனால் அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும்படி இலங்கை அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இலங்கையில் புலிகளுடன் உச்ச கட்ட போர் நடந்த போது மனித உரிமைகள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி ஐ.நா.வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் கடந்த 22ம் தேதி நிறைவேறியது. இதையடுத்து அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பு உள்பட பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. கொழும்பு ரயில் நிலையத்தில் நேற்று நடந்த போராட்டத்தின் போது கோதுமை மாவு கோக கோலா பெப்சி போன்ற எந்த அமெரிக்க பொருளையும் பயன்படுத்த வேண்டாம்.

இலங்கையின் கொலைக்களங்கள் - கிராமம் கிராமமாக நாம் தமிழர் கட்சியினர் தொலைக்காட்சி மூலம் திரையிடல்!

இலங்கையின் கொலைக்களங்கள் - கிராமம் கிராமமாக  நாம் தமிழர் கட்சியினர் தொலைக்காட்சி மூலம் திரையிடல்:-
 சேனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற
கொலைக்களங்கள் என்ற ஆவணப்படம் கிராமங்கள் தோறும் பல்வேறு அமைப்புகள் திரையிட்டுவருகின்றன.
நாம் தமிழர் கட்சியினர் கிராமங்களில் தொலைக்காட்சி மூலம் திரையிட்ட காட்சிகள்... 

சைபீரிய மக்கள் பீதி விண்ணில் இருந்து விழுந்த 200 கிலோ மர்ம பொருள்!

விண்ணில் இருந்து 200 கிலோ எடை கொண்ட மர்ம பொருள் சைபீரியாவில் விழுந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சைபீரியாவில் உள்ள ஓட்ராட்நெஸ்கி என்ற கிராமத்தின் அடர்ந்த காட்டு பகுதியில் விண்ணில் இருந்து திடீரென மர்ம பொருள் சமீபத்தில் விழுந்தது. அதை பகுதியில் இருந்த கிராமவாசிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்று பார்த்தனர். முதலில் அது இறந்த பறவையாக இருக்கலாம் என்று எண்ணினர். ஆனால் பறவை எதுவும் இல்லை என்று தெரிந்ததும் போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls