Monday, April 30, 2012

யாழ் மக்களின் மனங்களுக்கு கொண்டாட்டங்கள் தீணி போடுமா?

நிகழ்வுகளும் சடங்குகளும் ஏன் வருகின்றன என்ற மன விரக்த்தியோடு வாழும் யாழ் மக்களின் மனங்களுக்கு விருந்தளிக்க பொங்கலிற்கு வருடப்பிறப்பிற்கு அரங்கேற்றப்படும் கலை நிகழ்வுகளும் பாரம்பரிய விளையாட்டுக்களும் தீணி போடுவதாய் அமைகின்றனவா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது.
நிம்மதியற்ற மனங்களும் தொடர் இழப்புக்களையும் மரணப்பீதியையும் கடந்து வந்த மக்களின் மனங்கள் கொண்டாட்டங்களை சம்பிரதாயத்தின் அங்கமாக பார்க்கின்றனர். நாள் பார்த்து ஆரவாரத்துடன் அரங்கேற்றப்படும் கொண்டாட்ட  நிகழ்வுகள் யாழை திருவிழாக்கோலம் போல அலங்கரித்திருக்கின்றன. இந்த கொண்டாட்டங்கள் ஏன் நடத்தப்படுகின்றன எதற்காக நடத்தப்படுகின்றன? என்ன எதிர்பார்ப்புடன் நடத்தப்படுகின்றன யார் நடத்துகின்றார்கள் என்ற விடைதெரியாத கேள்விகள் பல.

பசித்தோடிய வயிறுகளை மரணக்குழிகளில் வீழ்ந்து கொண்டிருந்த கணங்கைளை முடிவேயற்றிருந்த சாவோலத்தை பார்த்துக்கொண்டிருந்த 
போதே வீழ்ந்து கொண்டிருந்த உயிர்களை நம்பிக்கை ஊட்டுவதற்கு எந்த நிலையுமே இல்லாத கையறு நிலையை அழிக்க முடியாத அந்த நினைவுகளை
 எப்படி மறப்பது ஓடிக்கொண்டிருந்த செங்குருதியில் வெற்றிக்கழிப்பை கொண்டாடியதை யாரும் மறந்து விடமாட்டார்கள். மரணத்தை ஒரு பொறியாக பசியை சுருக்கு கயிறாக பயன்படுத்திய தந்தோரபாயத்தை எந்த மக்களும் மறந்து விடமாட்டரார்கள். இந்த கொடிய நிகழ்வுகளை அனுபவித்த மக்களுக்கு கொண்டாட்டங்கள் வெறும் கண்துடைப்பே.

நடத்தப்படும் களியாட்டத்திற்கும் விளையாட்டிற்கும் அன்றைய கோவில் திருவிழாக்கள் தான் நினைவுக்கு வரும் கூட்டம் பட்டைய கிளப்பும். கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வருபவர்கள் இந்த யுத்தத்தை அனுபவிக்காதவர்களா? எல்லாம் கட்டாயம் தான். நாங்கள் நடத்துகின்றோம் நீங்கள் கலந்து கொள்ளுங்கள் என்று திட்டமிட்டு திணிக்கப்படும் சர்வாதிகாரம். அரசின் கையில் கிடைத்த கைப்பொம்மைகளாக சொல் பேச்சு கெட்ட பிள்ளை பொல நடத்தப்படுகின்றார்கள். இந்த கொண்டாட்டங்கள் யாரை திருப்திப்படுத்த நடத்தப்படுகின்றன? மக்களின் மனதில் இருக்கும் ஈறாத்துயருக்கு இந்த கொண்டாட்டங்கள் தீணி போடுமா? அல்லது மக்களின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறியவா? இல்லை அரசியல் நாடகமா என்று எண்ணத் தோன்றுகின்றது.

திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த மண்ணில் அடக்குமுறையினை ஜனநாயகத்தின் திறவுகோல்களாக காட்டும் அற்புத நிகழ்வு. ஒரு அரசு தனது குடிமக்களின் குருதியின் மீது வெற்றிதுழக்கம் செய்ததை இந்த உலகத்தின் அத்தனை கண்களும் அன்று பார்த்துக்கொண்டிருந்தது. இன்று எல்லாரும் ஒற்றுமையாகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றோம் என்பதை எடுத்துக்காட்டுவதே இந்த கொண்டாட்டங்களின் நோக்கம்.

மண்முட்டைகளால் அமைக்கப்பட்ட காவலரண்களும் மக்களிற்று பாதுகாப்பு கொடுப்பதற்காய் அரசின் பாதுகாப்பு படைகளுமே விழாக் கொண்டாட்டத்தின் முக்கிய புள்ளிகள். வானுயர்ந்த பாட்டுக்ளும் கலை நடனங்களும் ஆட்டம் பாட்டம் என்று ஒற்றுமையுடன் வாழும் சமுதாயம் என்று வெளியுலகிற்கு காட்டும் நிகழ்வில் மீண்டும் பலிகளாய் போகின்றது ஒரு சமுதாயம். 

எல்லாமே ஓய்ந்து விட்டன குண்டுமழையின் பீதியும் சுடுகலனின் வேட்டுச்சத்தங்களும் அதிரவைக்கும் துப்பாக்கிச்சத்தமும் இப்போது   மக்களின் காதுகளுக்கு எட்டவி்ல்லை. நடந்த போர் ஓய்ந்து விட்டது. ஆனால் புதிய போர் ஆரம்பித்து விட்டது. கொலையும் கொள்ளையும்  கற்பளிப்பும் நிம்மதியான தூக்கத்தை கலைத்து விட்டன.

மரணத்தையும் விட மரணபயம் கொடியது. அதையும் விடக்கொடியது மரணத்தை விட அஞ்சுவோரை தேற்றுவது. அதையும் விடக்கொடியது 
மரணத்தினால் அலைக்களிக்கப்பட்ட நாட்களை கடப்பது தம் மீதும் குண்டு விழாதா என்று மரணத்திற்காய் ஏங்கியவர்களின் மனதை ஆற்றுவதற்கு விரும்புகின்றார்கள். அடிமேல் விழும் அடியை தடுப்பதற்கோ அதற்கு அணை போட யாரும் இல்லை . ஆறுதல் படுத்த முயற்சிக்கின்றார்கள். இவர்கள். 
கடந்த காலங்களில் பெருவிழாக்கள் என்றால் ஊரே விழாக்கோளம் தான் லீவு போட்டு ஓன்றாக ஒற்றுமையாக நம் பண்பாட்டுக்கும் கலைக்கும் முன்னுரிமையும் மரியாதையும் கொடுத்து நடாத்துவார்கள். விளையாட்டுக்களும் கலைகளும் அரங்கேற்றப்படும் இரவைிரவாக ஆண்கள் பெண்கள் எல்லோரும் கலந்து கொள்வார்கள். இன்று கட்டாயம் என்ற நிர்ப்பத்தற்திற்காக நாங்கள் நடத்துகின்றோம் நீங்கள் கலந்து கொள்ளுங்கள் எனற ஆதிகாரத்தின் பயத்திறகாகவும் கலந்து கொள்கின்றார்கள். 

கழகங்களும் சங்கங்களும் சோலையிழந்த பிரதேசத்தில் கொண்டாட்டம் ஒரு கேடா என்று ஓய்ந்து விட்டன கழகங்களையும் சங்கங்களையும் நடாத்துவதற்று இளைய தலமுறையின்றி தத்தளித்துக்கொண்டிருக்கின்றது.
எவை நடற்தாலும் எமக்கென்ன என்று வாழும் சுறனையற்ற மனிதர்களாய் நடமாடும் நிலை. கடந்த காலங்கள் போனால் போனவை தான் துக்கத்தின் நினைவுகளை கடந்து செல்வது கடினம். மீள மீள வரும் அழியாத நினைவுகள். 
மீண்டும் இப்படியொரு யுத்தமும் மனிதப்படுகொலைகளையும் ஏற்க மறுக்கும் மனித மனங்கள். பாதுகாப்பிற்றி தமக்கு தாமே பாதுகாப்பு என்று தினம் தினம் பயத்துடன் வாழும் மக்கள்.

மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமும் உறுதியும் இல்லாத போது களியாட்டங்களும் விளையாட்டுக்களும் எதற்கு யார் கேட்டார்கள் நிம்மதியற்ற மக்கள் நிம்மதியுடன் இதை பார்ப்பார்களா ? பாதுகாப்பிற்கு ஓர் உத்தரவாதம் கொடுங்கள் அப்புறம் நடத்துங்கள் இந்த களியாட்டத்தை.
மக்கள் மனங்களுக்கு தீணி போடாவிட்டாலும் மனங்களை புண்புடுத்தாமல் இருக்கும். 

கதைகள் சொல்லும் வயல்வெளி விளையாட்டு. சுவாரஸ்யமான அனுபவங்கள்

மனிதனுக்கு அடையாளங்கள் தவிர்க்க முடியாதவை. நினைவுகளும் அடையாளங்களும் இல்லை என்றால் நீங்கள் உங்களுடைய வீட்டிற்கே திரும்பிச்செல்ல முடியாது. காலத்தின் மாற்றமும் எம் எதிர்கால சந்ததிக்கு நினைவுகளை மட்டுமே கடத்திச்செல்ல முடிகின்றது. எம் பாட்டன் முப்பாட்டன் ஓடியாடி விளையாடிய வயல் வெளிகளையும் குச்சொழுங்கை களையும் கேட்டுப் பாருங்கள் சுவாரஸ்யமான கதைகளை சொல்லும்.
தோட்டத்து வயல் வெளிகளில் மாலை நேர கூட்டமும் இரவு நேர குச்சொழுங்கை மகிழ்வுகளுமே அன்றைய நாட்களின் தினப் பொழுதுகள். சின்னச் சின்ன குடிசை வீடுகளும் சொந்த பந்தங்களின் கலகலப்பும் ஊர் முழுதும் தினக் கொண்டாட்டம் தான். 
கிராமத்தவர்களின் தொழிலாகவும் சொத்தாகவும் இருந்தது விவசாயம். காலை எழுந்து தோட்டத்திற்கு சென்றால் இரவு தான் வீடு திரும்புவார்கள் மாலை நேரம் தோட்டத்து வெளியில் ஊர் முழுதும் ஒன்று திரண்டிருக்கும். தோட்டத்து வெளியில் இளவட்டம் விளையாடும் விளையாட்டினை பார்க்க கிளடுகள் முதல் குஞ்சு குருமன் வரை ஒன்று கூடியிருக்கும். 

 அருவி வெட்டிய வயல்வெளியில் வரம்பு நேருக்கு பெட்டியடித்து கிளித்தட்டு விளையாடுவார்கள். இந்த விளையாட்டில் எத்தனை பேரும் விளையாடல்லாம் ஊர் இளவட்டம் எல்லாம் இரண்டு கன்னையாய் பிரித்து களத்தில இறங்குவார்கள். அதற்கு ஏற்ப பெட்டிகள் அமைக்கப்படும். இந்த கிளித்தட்டு விளையாட்டு யாழ்ப்பாணத்தில் 1990 முன்னரே பிரபல்யமாகப் பேசப்பட்டது. இளவட்டத்தினர் கூட்டம் ஊர்களில் நிரம்பியிருந்தது இந்த காலத்தில் தான். பகல் முழுதும் இளவட்டத்தை ஊரில் காண முடியாது. ஆனால் மாலை நேரம் வயல் வெளியின் கதாநாயகர்கள் இவர்கள் தான். 

காலை முழுதும் வீட்டில வேலை செய்துவிட்டு மாலை நேரத்தில்; பெண்களும் இந்த இடத்துக்கு வருவார்கள். வுந்தவர்கள் சும்மா இருப்பார்களா. அந்த வீட்டுக்கதை இந்த வீட்டுக்கதை என்று தங்கள் சோகங்களை பகிர்ந்து கொள்வார்கள் . இதுவே சில வேளை அடிபாடாகவும் வந்து விடும் ஆண்களும் பெண்களும் இணைந்தே கிளித்தட்டு விளையாடுவார்கள். அவளவு ஒற்றுமை இருந்தது அந்த காலத்தில. 

 தோட்டத்து வெளிகளில் உணவிற்காக வரும் கிளிகளை தோட்டத்துக்காரர்கள் வரம்புகளில் நின்று தம் இரு கைகளையும் நீட்டிக் கலைப்பார்கள.; இந்த வழக்கமே பின் விளையாட்டாக தோற்றம் பெற்றது. 

மதியம் சாப்பாடு முடிந்ததும் கொஞ்ச நேர நித்திரைக்கு பின் வயதான பாட்டன் பாட்டிகள் பொல்லுகளை ஊன்றியபடி வயல் வெளி நோக்கி நடக்க ஆரம்பிப்பார்கள். ஏதோ அவர்களும் விளையாடுறவர்களை போல. ஆங்க விளையாட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது தம் பழைய நினைவுகளை கொஞ்சம் மீட்டுப்பார்கள். களத்தில நிற்கின்ற இளவட்டத்திடம்  ஏய் அடிடா ? ஏன்டா விட்டாய் நான் என்டா  எட்டி அடிச்சிப்புடுவன் என்று வெறுப்பேத்திரது மட்டும் தான் இவங்க வேலை  

மாலை  நேரத் தென்றலும் வயலுக்கு வரும் பறவைகளின் சந்தமும் கிளித்தட்டு விளையாடுபர்களை விட பார்ப்பவர்களின் சந்தமும் ஊரைத் தாண்டியும் கேட்கும். வயலுக்கு நீர் இ;றைக்கும் தோட்டக்காரனுக்கும் கண் இங்க தான் இருக்கும். ஒழுங்கா நீர் இறைக்கிறானோ இல்லையா கிளித்தட்டு மட்டும் ஒழுங்காப் பார்ப்பான். பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு மாலை நேரப்பொழுது இங்க தான் போகும். பள்ளிக்கூடம் முடிந்ததும் மேலதிக வகுப்புக்கு சென்று விட்டு நாழு மணிக்கெல்லாம் தோட்டத்து வெளிக்கு ஆயராகி விடுவார்கள். தோட்டத்து வரம்பு வெளிகளில் புத்தக்கப் பைகளை போட்டுவிட்டு அமர்ந்திருந்து விளையாட்டை பார்ப்பார்கள். பெரிய அண்ணமார் வர முன்னர் இந்த சின்னஞ் சிறுசுகளின் அணி கிளித்தட்டு விளையாட களத்தில இறங்கிடும். அதுக்காகவே  வேளைக்கு வந்திடுவாங்க. அண்ணமார் வந்ததும் கவலை  தோய்ந்த முகத்துடன் வந்து உற்காருவார்கள். சில வேளை ஆட்கானாது போனால் ஒருவரை விளையாட்டில சேர்ப்பாங்க அவன் பொது. இரண்டு கண்னைக்கும் விளையாடுவான். ஆவன ஒருத்தனும் கண்டுக்கவே மாட்டாங்க ஆனா தானும் விளையாடுறதா நினைச்சு விளையாடுவான் சிறுகளின் மனங்களை தேத்துவது தான் பாட்டன் பாட்டி வேலையாக இருக்கும். அப்பு தங்கம் அடுத்த வருசம் நீ விளையாடலாம் என்று ஏமாத்துவாங்க. 

இந்த விளையாட்ட பார்க்க வறவங்க சும்மா வர மாட்டாங்க. புலுக்கொடியல் மாங்காய் சீவல் பலகாரம் என்று வீட்டில இருக்கிறதை எல்லாம் கொண்டு வருவாங்க. சொந்த பந்தங்கள் நண்பர்கள் எல்லாரும் குடுத்து சாப்பிடுவாங்க இதை விடவிளையாடுற ரீமுக்கு தண்ணி எல்லாம் பார்வையாளர்கள் எடுத்து வருவாங்க. இந்த களம் தான் சிலரது காதலுக்கு அத்திவாரம் போட்ட இடம். கிளித்தட்டு விளையாடும் இளவட்டத்தினர் தான்  கதாநாயகர்கள். கிளித்தட்டு விளையாடும் சாட்டில் தம் காதல் கதைகளையும் பேசி விடுவார்கள். பின்னர் கதை வெளியில் வரும் போது வயல் வெளி போர்க்களமாய் மாறி வரும். சில நேரம் மறுநாள் விளையாட்டு நடை பெறாது. ஆனாலும் எல்லாரும் வயல் வெளிக்கு வந்துவிடுவார்கள்;. நம் கதைகளை பேசி விட்டுசெல்வார்கள். எப்படியும் திரும்பவும் விளையாட்டு நடைபெறவேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் இருக்கும். ஒருவளியாக காதலுக்கு ஒளியேற்றி வைத்து விடுவார்கள் பாட்டன் பாட்டிகள். அப்புறம் என்ன மறுநாளே வயல் வெளி களை கட்ட ஆரம்பித்து விடும். 
.
இப்படி எல்லாம் கதைகளையும் சந்தோஸங்களையும் தந்த இந்த வயல் வெளி விளையாட்டு பின் வந்த கால இடப் பெயர்வுகளில் கானாமல் போய்விட்டது. துக்கத்தின் நினைவுகளை மறக்க முடியாததே. வலி அடங்காத வரையில் வேதனை தீராது. வேதனையோ காயங்களையும் வடுக்களையும் பற்றிப் பேசச் சொல்லும். தொடர் காயங்களை சுமந்து வந்ததால் சந்தோஸங்களை நினைத்துப்பார்கவோ அனுபவிக்கவோ முடியவில்லை. தொடர் இடப்பெயர்வுகளும் உயிர்ப்பலிகளும் காணாமல் போதலும் வீட்டுக்குள்ளேயே கட்டிப் போட்டது. 

ஒன்றாய் திரிந்து ஒன்றாய் விளையாடிய நன்பனின் உயிற்ற  உடல் திடீர் திடீர் என காணமல் போனவர்கள் பெற்றோர்களின் தவிப்புகள் இளவட்டத்தினரை இரவில் கூட காண முடியாதிருக்கும். பொழதுகள் எல்லாம் மரண பயத்துடனே கழிய ஆரம்பித்தன. வயதான பாட்டன் பாட்டிகள் இந்த நிலையை பபார்த்து ஏங்கியே சிலர் இல்லாமலே போய்விட்டனர். இருந்தவர்களும் மனம் விட்டு சந்தோஸமாய் பேசியதில்லை தம் உறவுகளை எப்படி பாதுகாப்பது என்றே நாட்கள் கடந்தன. 




சோகங்களுக்கும் வலிகளுக்கும் பின்னர் பழக்கப்பட்டு விட்டனர் விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் அறிவியல் எழிச்சியும்  போட்டிகளையும் தேடல்களையும்  அதிகரித்தன. தொலைந்து போன சொந்தங்களும் உறவுகளின் இழப்புக்களும் இறுக்கமான மனம் கொண்ட சமுதாயமாக மாற்றியது. ஓய்வற்ற வேலை படிப்பு என்று இளவட்டத்தினர் பின்னர் சந்தோச உலகத்தை மறந்து விட்டனர். மேலைத்தேய விளையாட்டு அறிமுகமும் பாடசாலையில் போட்டிமுறை விளையாட்டுக்களும் எம்மில் தோற்றம் பெற்ற விளையாட்டு பின்வந்தவர்களுக்கு தெரியாமலே போய்விட்டது. கிரிக்கெட் வொலிபோல் போன்றன பின்னர் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. ஊர்களை கிரிக்கெட் மைதானமும் வொலிபோல் மைதானமும் இருக்கும். பக்கத்து ஊர் காரனும் நன்பர்களும் ஒன்றாய் விளையாடுவார்கள் யார் விளையாடுறார்கள் என்று அடையாளம் தெரியாததாலும் விளையாட்டு பற்றி தெரியாதாலும் வயதானர்கள் கூட இதை பார்ப்பதில்லை. உற்சாகப்படுத்த கூடயாரும் இல்லாமல் இந்த விளையாட்டு நடைபெறும். 


கிழமைக்கு கிழமை கிரிக்கெட் போட்டி நடைபெறுது. போட்டியில வெல்லனும் என்று நினைத்து விளையாடுவாங்க. சந்தோசமோ பன்பலோ எதுவுமே இல்லப்பா ஆனா அன்னைக்கு நாங்க விளையாடின கிளித்தட்டில இருந்த சந்தோசம் தெரியுமா.? வயல் வெளிய விட்டு வீட்டுக்கு பொறது என்டாலே விருப்பம் இருக்காது. என்று வயதானவர் கூறும் போது ஒரு நிமிடம் மெய் சிலிர்க்கின்றது. அவளவு சந்தோசமா அந்த விளையாட்டில என்று நினைக்க தோன்றுகின்றது.

பொங்கல் வருசம் வந்தாமட்டும் பாரம் பரிய நிகழ்சிகளில் இந்த கிளித்தட்டும் அரங்கேறும் எங்காவது ஒரிரு கழகங்கள் அதை அரங்கேற்றும். வென்றால் பரிசு என்று தான் விளையாடுறாங்க ஆனால் அதைபார்க்க ஒரு கூட்டம் வரும் அப்போது பார்ப்பவர்களின் நக்கல் பேச்சும் பன்பல்களும் விளையாட்டுபவர்களுக்கு எரிச்சல் ஊட்டுதாக இருந்தாலும் சந்தோசமாய் இருக்கின்றது. தொலைக்காட்சியின் ஊடாக பாரம் பரிய நிகழ்ச்சிகள் ஒலிபரப்பு செய்யப்படும் போது அனைவரும் கண்டு கிளித்தட்டையும் கண்டு கொள்ள கூடியதாக உள்ளது. அப்போது பாட்டன் பாட்டிகள் தம் இளவட்ட நினைவுகளை மீட்டிப்பார்ப்பார்கள். தம் பேரன் பேத்திகளுக்கு சொல்லி தம் ஆதங்கத்தை தீர்த்துக்கொள்கிறார்கள் 

விஞ்ஞானம் வள்ர்ந்தாலும் அறிவியல் வள்ர்ந்தாலும் எம் பாரம் பரியத்தின் தனித்துவமும் சந்தோசமும் கிடைக்குமா. கால மாற்றம் சந்தோஸங்களையும் மாற்றி விடுகின்றன. இன்றைய இளைஞர்களின் சந்தோஸங்களும் தேவைகளும் வேறுபட்டவை. அவர்கள் புதிய புதிய விடயங்களை தேடிப்பார்க்கவே விரும்புவார்கள். பழயன கழித்தலும் புதியன புகதலும் வழமையான ஒன்று என்று மனதை தேற்றிக்கொள்ள மட்டும்தான் முடியும்.  

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls