Thursday, April 26, 2012

பிரிட்டிஷ் பொருளாதாரம் நெருக்கடியில்!

பிரிட்டிஷ் பொருளாதாரம் பொருளாதார நிபுணர்களின் எதிர்வுகூறல்களுக்கு மாறாக மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பிரிட்டனின் பொருளாதாரம் 0.2 வீத வீழ்ச்சியைக் காட்டுகிறது. இதே போன்று இதற்கு முந்தைய காலாண்டிலும் பிரிட்டிஷ் பொருளாதாரம் வீழ்ச்சியை கண்டது.
டபுள் டிப் ரிஸஷன் எனப்படும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்த மாத்திரத்திலேயே இன்னொரு சடுதியான வீழ்ச்சிக்குள் செல்லும் இரண்டாவது தடவை நெருக்கடியை 1970களுக்குப் பின்னர் பிரிட்டன் முதற்தடவையாக சந்திக்கிறது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை காட்டும் புள்ளிவிபரங்கள் மிக மிக ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் டேவிட் கேமரன் கூறியுள்ளார்.

இப்பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதமரும் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்பர்ணுமே பொறுப்பு என்று எதிர்கட்சித் தலைவர் எட் மிலிபாண்ட் குற்றஞ்சாட்டியுள்ளார். அழிவை ஏற்படுத்தக் கூடிய பொருளாதார கொள்கைகளே இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் மிலிபாண்ட் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திங்களன்று தானும் பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்துவிட்டதாக ஸ்பெயின் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Wednesday, April 25, 2012

சீனாவில் மலசலகூடத்துக்குள் வசிக்கும் குடும்பம்

சீன குடும்பம் ஒன்று மலசலகூடத்தை வீடாக்கி வாழ்ந்து வருகின்றது. வடகிழக்கு சீனாவில் உள்ள   Jilin மாகாணத்தில் உள்ள குட்டிக் கிராமம் ஒன்றில் பிறந்தவர்  Zeng Lingjun.  ஆயினும் வீட்டு வறுமை காரணமாக பாடசாலைக்கு சென்று படிக்க இவரால் முடியவில்லை.
வளர்ந்து பெரியவர் ஆன பிற்பாடு கிராமத்தை விட்டு வெளியேறினார். அவரது மாகாணத்தின் மிக பெரிய நகரமான ளூநலெயபெ இற்கு வந்து சேர்ந்தார். இவர் மிகுந்த பிரயாசைக்காரர். திறமையாக செருப்பு தைப்பார். இதனால் இப்பெரிய நகரத்தில் மாதாந்தம் ஓரளவு நல்ல வருமானத்தை விரைவாகவே சம்பாதிக்க தொடங்கினார். ஆயினும் சொந்த வீடு ஒன்றை வாங்குகின்ற அளவுக்கு வசதி கிடைக்கவில்லை. நண்பர் ஒருவரிடம் இருந்து ஆறு வருடங்களுக்கு முன்னர் இவருக்கு ஒரு தகவல் கிடைத்தது.

கைவிடப்பட்ட ஹோட்டல் ஒன்றின் மலசலகூடம் ஒன்று மிக குறைந்த வாடகைக்கு கொடுக்கப்பட இருக்கின்றது என்பதுதான் தகவல். தேவையான பணத்தை இவர் கடனாக பெற்றுக் கொண்டார். மலசலகூடத்தை வாடகைக்கு பெற்றார். அதை வீடாக ஆக்கிக் கொண்டார்.

2008 ஆம் ஆண்டு இவர் ஒரு பெண்ணிடம் மனதை பறி கொடுத்தார். பெண்ணும் ஒரு பாட்டாளிதான். 2010 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். விரைவிலேயே ஒரு குழந்தைக்கு பெற்றோர் ஆயினர். தற்போது வரை இம்மலசலகூட வீட்டில்தான் வசிக்கின்றார்கள்.


உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன்தான்!?

உலகிலேயே மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான் என்று ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய விஞ்ஞானியாக நாம் அனைவரும் ஐன்ஸ்டீனை நினைத்துக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு குண்டைப் போட்டுள்ளார் வால்டர் ஐசக்சன். இவர் எழுதிய 'நுiளெவநin: ர்ளை டுகைந யனெ ருniஎநசளந' என்ற நூலில்தான் உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐன்ஸ்டீன் தொழில் ரீதியாக எத்தனையோ பெரிய சாதனைகளைப் படைத்திருந்தாலும் அற்புதங்களை நிகழ்த்தியிருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதையும் சாதிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தன்னுடன் பணியாற்றிய விஞ்ஞானி மிலவா மாரிக்கைத்தான் கல்யாணம் செய்து கொண்டு வாழ்ககை நடத்தினார் ஐன்ஸ்டீன். இவர்களது திருமண வாழ்க்கை 11 ஆண்டு காலமே நீடித்தது. இந்த 11 ஆண்டு காலமும் அவரிடமிருந்து எந்தவிதமான காதல் அணுகுமுறையும் இருந்ததில்லையாம். இருவரும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்காக சம்பிரதாயத்திற்காக சேர்ந்து வாழ்க்கை நடத்தினார்களாம்.

தனது மனைவியை வேலைக்காரி போல நடத்தி வந்தாராம் ஐன்ஸ்டீன். அன்பையும் பரிவையும் அவர் தனது மனைவியிடம் காட்டியதில்லையாம். 11 ஆண்டு கால வாழ்க்கைக்குப் பின்னர்தான் தனது திருமண வாழ்க்கை தோல்வியடைந்த ஒன்று என்று அவருக்குப் புரிய வந்ததாம். ஐன்ஸ்டீனின் மனைவி மாரிக் ஐரோப்பாவிலேயே முதல் முறையாக கணிதம் மற்றும் இயற்பியல் படித்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் ஐன்ஸ்டீனை விழுந்து விழுந்து கவனத்திவர் மாரிக் என்பது குறிப்பிடத்தக்கது. ஐன்ஸ்டீனின் அறையை மிகச் சிறப்பாக அவர் பராமரித்து வந்தார். அவருக்கு மூன்று வேளை உணவை தவறாமல் அவரது அறைக்கே கொண்டு வந்து கொடுத்தார். உடைகளை சுத்தமாக துவைத்து தேய்த்துக் கொடுத்தார். படுக்கை அறையை சுத்தமாக வைத்திருந்தார். ஆனால் பதிலுக்கு மனைவிக்கு எந்த கைமாறும் செய்ததில்லையாம் ஐன்ஸ்டீன்.

மாறாகஇ மனைவிக்கு பல நிபந்தனைகளைப் போட்டு வைத்திருந்தாராம அவர். அதாவது அருகில் வந்து உட்காரக் கூடாது வெளியில் கூட்டிச் செல்லுமாறு வற்புறுத்தக் கூடாது. தேவையில்லாமல் தன்னுடன் பேசக் கூடாது வெளியுலக தொடர்புகளை அதிகம் வைத்துக் கொள்ளக் கூடாது.. இப்படிப் போகிறது ஐன்ஸ்டீனின் நிபந்தனை லிஸ்ட்.

அதை விட கொடுமை தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று தனது மனைவி எதிர்பார்க்கக் கூடாது என்றும் கூறியிருந்தாராம் ஐன்ஸ்டீன். எந்த வகையிலும் தன்னைக் கவர முயற்சிக்க் கூடாது. அனுமதி இல்லாமல் பேசக் கூடாது என்பதும் அந்த நிபந்தனைகளில் ஒன்று.

11 ஆண்டு கால வேதனை வாழ்க்கைக்குப் பின்னர் ஐன்ஸ்டீனை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றார். கூடவே தனது பிள்ளைகளையும் அழைத்துச் சென்று விட்டார்.

ஐன்ஸ்டீன் நடத்திய இந்த லட்சணமா இல்லறத்தில் பிறந்த குழந்தைகள் இருவர். ஒருவர் ஹான்ஸ் ஆல்பர்ட். இன்னொருவர் எட்வர்ட். 1902ம் ஆண்டு லிசரல் என்ற மகள் பிறந்தார். பின்னர் அவரைத் தத்துக் கொடுத்து விட்டனர். பிள்ளைகளோடு ஜூரிச் சென்ற மாரிக் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 1919ம் ஆண்டு விவாகரத்து கோரினார். அது பின்னர் கிடைத்தது.

அதன் பின்னர் ஐன்ஸ்டீன் 1919ம் ஆண்டே எல்சா என்பவரை மணந்தார். பி்ன்னர் அவரது செயலாளர் பெட்டி நியூமன்னுடனும் உறவு ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் வேறு ஒரு பெண்ணுடனும் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

ரிலேட்டிவிட்டி தியரியை உலகுக்கு அறிவித்த ஐன்ஸ்டீனால் ரிலேஷன்ஷிப்பை பராமரிக்க முடியாமல் போனது வியப்புக்குரியதுதான்...

Monday, April 23, 2012

கனடாவில் ஆரம்பமாகும் பனிப்புயல்: வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

கனடாவின் ஓண்டேரியோ பகுதியில் இதமான வெப்பம் குறைந்துள்ளது. இன்னும் சில தினங்களில் பனிப்புயல் வீசப்போவதாக என்விரான்மெண்ட் கனடா என்ற வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
மெக்ஸிகோ வளை குடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கி ஓண்டேரியோவுக்குள் வீசும்போது பனி பனிக்கட்டி மழை மற்றும் மழை எனப் பல பரிமாணங்களில் வெளிப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிகழ்வு ஞாயிறு இரவு தோன்றி திங்கள் முதல் செவ்வாய் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஓண்டோரியோவின் தென்மேற்கு மற்றும் மத்திய தென் பகுதிகளில் திங்கட்கிழமை வாடைக்காற்று மணிக்கு 70 கி.மீ வேகத்தில் வீசும். அன்று 7 டிகிரி–10 டிகிரி என்கிற சராசரி வெப்பத்தை விடக் குறைவாக இருக்கும் காற்றின் வேகம் செவ்வாய்க்கிழமை தணியக்கூடும்.

கொட்டும் பனியானது கிங்ஸ்டன் ஒட்டாவா பீட்டர்பரோ ஹேமில்டன் மற்றும் டொரொண்டோவில் ஆகிய பகுதிகளில் பரவலாக இருக்கும். ஹேலியர்டன் பீட பூமியில் உறைபனி 5 முதல் 10 செ.மீ வரை படர்ந்திருக்கும். ஒண்டேரியோவின் மத்திய தென் பகுதியில் ஒன்று அல்லது இரண்டு செ.மீ. வரை பனி உயர வாய்ப்புள்ளது.

கிழக்குப் பகுதியில் முதலில் சில செ.மீ வரை உயரும் பனி மழையானது பின்பு 25 மி.மீ. வரை உயர்ந்து அந்தப் பகுதி முழுவதையும் குளிர்விக்கும். எச்சரிக்கை விடும் அளவிற்கு இப்பனி ஆபத்தானது இல்லை என்றாலும் இந்தக் காலகட்டத்திற்கு தற்போதைய பனியின் அளவு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு மாலை லேக் தூய ஜீன் பகுதியில் 20 செ.மீ. உயரத்திற்கு பனி படரும். இந்தப்ப பனிப்புயலால் கார்இ வண்டி ஓட்டுவது கடினமாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

இறந்த பின் மனைவியை புதைப்பதற்காக குட்டி தீவை விலைக்கு வாங்கிய பள்ளி ஆசிரியர்

இறந்த பிறகு தனது உடலையும் மனைவியின் உடலையும் புதைப்பதற்காக இங்கிலாந்தில் குட்டி தீவை விலைக்கு வாங்கி உள்ளார் பள்ளி ஆசிரியர் கசிமிர் ரோசின்ஸ்கி இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட் ஷயர் கவுன்டியில் உள்ளது செயின்ட் ஆல்பன்ஸ் நகரம். இங்கு மெக்கன்சி என்ற பெயரில் குட்டி தீவு உள்ளது.
இங்கு தண்ணீர் சாலைகள் மின்சார வசதி எதுவும் இல்லை. இந்த குட்டி தீவு 18 மாதத்துக்கு முன்பு விலைக்கு வந்தது. ஆனால் யாரும் வாங்கவில்லை. இந்நிலையில் செயின்ட் ஆல்பன்ஸ் நகரில் உள்ள பீச்வுட் பார்க் பள்ளி ஆசிரியர் கசிமிர்  ரோசின்ஸ்கி குட்டி தீவை 46 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளார்.

கசிமிருக்கு தற்போது 50 வயதாகிறது. மனைவி பவுலின் மகன் மைல்ஸ்(12) மகள் லிடியாவுடன்(11) வாழ்ந்து வருகிறார்.

இதுகுறித்து கசிமிர் கூறியதாவது: மூன்று ஆண்டுக்கு முன்பு குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன். அது என்னை மிகவும் பாதித்தது. இறந்த பின் எனது உடலை அமைதியான இடத்தில் புதைக்க வேண்டும் என்று விரும்பினேன்.

அதற்காக இந்த தீவை வாங்கி உள்ளேன். தீவுக்கு செல்வது அவ்வளவு எளிதல்ல என்பது தெரியும். எனினும் உலகின் அழகிய இடங்களில் மெக்கன்சி தீவும் ஒன்று.

நானும் எனது மனைவியும் இறந்த பின் இருவரின் உடலையும் இந்த தீவில் தான் புதைக்க வேண்டும் என்று குழந்தைகளிடம் கூறியுள்ளேன். அதை அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

பார்வையை ஓட விடுவதில் ஆண்களை விட பெண்களே 'லீடிங்'!

அழகான பெண் எதிரே வந்தால் அவர்களை ஆண்கள் பார்ப்பது சகஜம்தான். அதேபோலத்தான் பெண்களும். ஆனால் தங்களது ஜோடிகளுடன் போகும்போது எதிர்பாலினர் மீது பார்வையை ஓட விடுவதில் பெண்கள்தான் லீடிங்கில் இருக்கிறார்களாம்.
இதை ஒரு ஆய்வு நடத்திக் கண்டுபிடித்துள்ளனர் - வேற யாரு வழக்கம் போல வெளிநாட்டுக்காரங்கதான். சுற்றுலாத் தலங்களுக்கு ஜாலியாக டிரிப் வந்த ஜோடிகளைப் பிடித்து கருத்துக் கேட்டுள்ளனர். அதில் 56 சதவீத ஆண்கள் தங்களை கிராஸ் செய்த தங்கள் கண்ணில் பட்ட அழகான பெண்களை சைட் அடித்ததாக ஒத்துக் கொண்டனராம்.

அதேசமயம் கிட்டத்தட்ட 74 சதவீத பெண்கள் ஆமா சைட் அடிச்சேன் என்று ஒத்துக் கொண்டார்களாம்.

இப்படி சைட் அடித்ததாக ஒத்துக் கொண்ட பெண்களில் 77 சதவீத பெண்கள் தாங்கள் அடுத்த ஆணை சைட் அடித்ததை கணவர் பார்த்து விடாதவாறு மறைக்க முயற்சி செய்ததாக கூறினராம். இவர்கள் இதற்காக கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு 'பாதுகாப்பாக' சைட் அடித்தார்களாம். அதேபோல கணவர் ஏதாவது பொருள் வாங்க 'அந்தாண்டை' நகர்ந்ததும் இவர்கள் 'இந்தாண்டை' சைட் அடித்தார்களாம்.

சில பெண்கள் தங்களை விட அழகாக இருந்த பெண்கள் மீது பார்வையை ஓட விட்டனராம். நம்ம ஆள் அவளைப் பார்த்தாரா என்றும் வேவு பார்த்துக் கொண்டார்களாம்.

இந்த கருத்துக் கணிப்பு குறித்து அதை நடத்தி நிறுவனத்தின் இணை உரிமையாளர் கிறிஸ் கிளார்க்சன் கூறுகையில் ஆணோ பெண்ணோ வெளியிடத்திற்குச் ஜோடியாக போகும்போது இருவருமே எதிர்பாலினரைப் பார்க்கத்தான் செய்கிறார்கள். இருப்பினும் இதில் பெண்களே முதலிடத்தில் இருப்பது வியப்பான ஒன்று என்றார்.

இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது. இரு பாலினருக்கும் உணர்வுகள் ஒன்றுதானே...!

தப்பி‌யோடிய 140 கைதிகள் சிறைக்குத் திரும்பினர்!

பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பி‌யோடிய 140 கைதிகள் நேற்று சிறைக்கு திரும்பினர். பாகிஸ்தான் பானூர் நகர் சிறையில் கடந்த 15-ம் தேதி தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 384 கைதிகள் தப்பியோடினர். இவர்களில் பயங்ரவாதிகளும் அடங்குவர்.
இந்நிலையில் நேற்று 140-க்கும் மேற்பட்டோர் சிறைக்கு திரும்பினர். இது குறித்த மாகாண உள்துறை செயலர் அசம்கான் கூறுகையில் மொத்தம் 384 பேர் தப்பியோடினர். இவர்களில் 108 பேர் தானாக வந்த சரணடைந்தனர். 35 பேர் கைது செய்யப்பட்டனர். என்றார்.

சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கற்றைகளை நாசா படம் பிடித்து வெளியிட்டுள்ளது.

சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கற்றைகளை நாசா படம் பிடித்து வெளியிட்டுள்ளது. சூரியனின் கிழக்குப் பகுதியில் இருந்து வெளியாகிய ஒளிக்கற்றைகளே இவ்வாறு படம் பிடிக்கப்பட்டுள்ளன. நாசாவின் செயற்கைக்கோள் ஒன்றே இதனை படம்பிடித்துள்ளது.
நாசா பல்வேறு ஆய்வுகளை செய்து வருகின்ற போதும் இவை மனித குலத்திற்கு சாதகமாதா ? அல்லது பாதகமானதா? என்பது குறித்தும் வாதங்கள் நடைபெற்று வருகின்றன இயற்கைக்கு முரனானதாக செய்யப்படும் இந்த ஆய்வுகள் மனிதனின் ஆபத்தை விளைவிற்குமா? நாசா வின்வெளி ஆய்வுகள் எதிர்கால சந்ததிக்கு ஒரு வளியை ஏற“படுத்தி விடும் முயற்சியில் இறங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. 

வரலாற்றுக்காலத்துக்கு முந்திய விலங்குகளின் படிமங்கள் கண்டுபிடிப்பு!

அர்ஜென்டினாவில் நடந்த புதைபொருள் ஆராய்ச்சியில் பிரமாண்ட எறும்பு தின்னி வகைகள் யானை போன்ற விலங்குகளின் படிமங்கள் கிடைத்துள்ளன. வழக்கொழிந்த விலங்குகள் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் இந்த ஆராய்ச்சியில் தெரியவரும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பகுதியில் உள்ள சுரங்கங்களில் அகழ்வாராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 300க்கும் அதிகமான விலங்குகளின் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்துமே வரலாற்று காலத்துக்கு முந்தையதாக இருக்கலாம் என்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பியூனஸ் அயர்ஸ் அருகில் உள்ள மார்க்கோஸ் பாஸ் என்ற பகுதியில் உள்ள சுரங்கத்தில் 1000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த படிமங்கள் அனைத்தும் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். லா பல்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் டேவிட் பியாசா தலைமையில் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இவை கண்டறியப்பட்டுள்ளது. இதில் பல அரிய மற்றும் வழக்கொழிந்த விலங்குகளின் படிமங்கள் ஏராளமாக உள்ளது என்றும் தொடர்ந்து நடைபெறும் ஆய்வில் இவை குறித்த விரிவான தகவல்கள் தெரியவரும் என்றும் தலைமை ஆராய்ச்சியாளர் டேவிட் பியாசா தெரிவித்துள்ளார்.

எறும்புத் தின்னிகள் போன்ற உருவ அமைப்பில் இருக்கும் கிளிப்டோடான் யானைகளின் மூதாதை விலங்காக கருதப்படும் மாஸ்டோடான் ஆகியவற்றின் படிமங்களும் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மேலும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. தற்போதுள்ள விலங்குகள் உருவான விதம் வழக்கொழிந்த விலங்குகள் பற்றிய பல தகவல்கள் ஆராய்ச்சியில் தெரியவரும் என்று நம்புகிறோம் என்றும் கூறினார்.

தினமும் ஒரு பாக்கெட் : சிகரெட் பழக்கத்தை கைவிட்டான் 8 வயது சிறுவன்!

இந்தோனேஷியாவில் பெற்றோ ருடன் வசிக்கும் 8 வயது சிறுவன் இல்ஹாம் தொடர் புகைப்பழக்கத்துக்கு அடிமைப் பட்டிருந்தான். அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த 4 வருடங்களாக குழந்தையின் இப்பழக்கத்தை நிறுத்த பல முயற்சிகளை மேற்கொண்டும் அவனால் புகைப்பதை நிறுத்த முடியவில்லை. சிகரெட் கொடுக்காவிட்டால் அழுது புரண்டு தான் நினைத்ததை சாதித்துக் கொள்வான். தினமும் குறைந்தது ஒரு பாக்கெட் சிகரெட்டை ஊதித் தள்ளுவது வழக்கமாக இருந்தது.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான பெற்றோர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டனர். இந்நிலையில் தனது 4 வருட இந்த பழக்கத்தை தற்போது சிறுவன் விட்டுவிட்டான். அந்நாட்டு குழந்தைகள் நலவாழ்வு மையம் கடந்த மார்ச் மாதம் முதல் இல்ஹாமுக்கு அளித்த தொடர் சிகிச்சையில் தற்போது அவன் இப்பழக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டுள்ளான் என்று குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls