Saturday, January 7, 2012

நினைவுகளை மீட்டிப்பார்க இன்றே பதிவு செய்யுங்கள்

அபிவிருத்திப் பாதையை நோக்கி பயனிக்கும் மக்கள் நவீனத்தை வேண்டிநிற்பதால் பண்டைய பொக்கிஷங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. அப் பொருட்களை மீண்டும் நினைவுக்கு கொண்டுவருபவை புகைப்படங்கள் தாங்க வார்த்தைகளை சொல்ல முடியாத விடயங்களை புகைப்படங்கள் பேசும் செய்திகளையும் மக்களுக்கு கூறுவதாய் அமைகின்றன. கிராம மக்களின் வாழ்வியலை புகைப்படங்களினுடாக பதிவு செய்து கொள்ளமுடியும் கிராம மக்களுக்கு விளிப்புனர்வை ஏற்படுத்த புகைப்படங்கள் உதவுவுகின்றன. கிராமிய பாரம்பரியங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் அழிவடைந்து வருகின்றது. பாரம்பரியமாக ஆடப்பட்டு வந்த கலைகளும் இல்லாமல் போய்விட்டன.

Thursday, January 5, 2012

ஈழத்து தழிழர் பிரச்சினையில் தோற்றுப்போன ஊடகங்கள்

கருத்துக்களையும் செய்திகளையும் பரப்புவதில் முக்கிய இடம் வகிப்பது ஊடகங்கள. கருத்துக்கள் சரியான முறையில் பரப்பட்டு அது எந்த அளவு மக்களை சென்றடைகின்றன என்பதிலேயேஊடக வளர்ச்சி தங்கியுள்ளது. போராட்டங்களும் புரட்சிகளும் ஊடகங்களினூடாகவே அதிக வளர்ச்சி கண்டு வெற்றி பெற்றன. இலங்கைத்தழிழர்களின் பிரச்சினைகள் ஆரம்ப காலத்தில் ஊடகங்களினுடாகவே பரப்பட்டன உண்மைகள் சரியான முறையில் பரப்பட்டு மக்களிடையே ஆதரவினை பெற்றன. அன்று கிட்லர் பாசிச ஆட்சிகயின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது ஊடகங்களே கிட்லர் கவர்சிகரமான பேச்சினுடாக மக்களின் ஆதரவினை திரட்டினான். கிட்லர் ஊடகத்தினை பற்றி நன்கறிந்து அதனுடாக மக்களின் ஆதரவினை பரப்பினான். அரசுகள் புரட்சி இயக்கங்களை செயலிழக்க செய்யவேண்டுமாயின் உடகங்களை தம் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும்

Tuesday, January 3, 2012

தொடர்கிறது காதலனை தேடிய அபியின் பயணம்

காதல் இல்லாத வாழ்க்கையே இல்லைங்க ஒவ்வொருவருக்கும் காதல் இருக்கும் சிலர் காதலிச்சு திருமணம் செய்வாங்க சிலர் திருமணம் செய்து காதலிப்பாங்க பதினாறு வயதிலிருந்து காதலிக்க ஆரம்பித்தாலும் எப்ப காதல் நிறைவடைகின்றது என்று யாருக்கும் தெரியாது. இன்றைக்கு எல்லோரும் காதல் திருமணத்தை தாங்க வரவேற்கிறாங்க ஏன்னா அறிமுகம் இல்லாத ஒருவரை எப்படிங்க கல்யானம் செய்ய முடியும் அது தாங்க நான் ஒரு முடிவ பண்ணியிருக்கேன் காதலிச்சு தான் தரிருமணம் செய்யனும் என்று 
என் வயது மட்டும் ஓடிட்டே இருக்கு என் காதலன் மட்டும் இன்னும் கிடைக்கவே இல்லைங்க. பதினெட்டு வயசிலை இரந்து தேடிட்டு தான் இருக்கேன் . இரண்டு வருஷமாயிட்டு இன்னும் மாட்டவே இல்லை எல்லோரும் சொல்றாங்க பார்த்தவுடன் காதல் வருமாம் நானும் பார்கிறேன் பார்க்கிறேன் காதல் வரலைங்க என்னோட காதலன் எப்படி இருக்கனும் என்று சொல்றன் கேக்கிறீங்களா.

Monday, January 2, 2012

காதலுக்கு மட்டுமல்ல கலைக்கும் புத்துயிர் ஊட்டிய முகலாயர்

  
காதலிற்கும் கட்டடக் கலைக்கும் அதிசயிக்கத்தக்க அழியாத சான்றாக இருந்துவரும் தாஜ் மஹால் என்ற அற்புதத்திற்கு அருகே யமுனை நதிக்கரையிலுள்ள மற்றுமொரு பிரம்மாண்ட மானுடப் படைப்பாக திகழ்கிறது லால் கீலா என்றழைக்கப்படும் ஆக்ரா செங்கோட்டை.தாஜ் மஹாலைப் போல இதுவும் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது முகலாயப் பேரரசர் ஷா ஜஹானின் கை வண்ணமே ஆக்ரா கோட்டையை இந்த நாட்டிலுள்ள மற்ற கோட்டைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது இக்கோட்டையிலுள்ள மூசாம்மன் புர்ஜ் காஸ் மஹால் ஆகிய பகுதிகள் கட்டக் கலைக்கும் சிற்ப வேலைப்பாடுகளுக்கும் அழியாத சான்றாகத் திகழ்கின்றன

கற்பனையால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள்

இயற்கையாகசே சில விடயங்கள் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத விடயமாக இருக்கும். சில விடயங்கள் இயற்கையை விஞ்சும் வகையில் நம்மைப் பிரமிக்க வைக்கும். சிலர் தம் கற்பனையில் தோன்றும் விடயங்களை ஓவியமாக வரைந்து வைப்பார்கள். சிலர் தம் கனவில் தோன்றியதை கெற்பனையில் உருவானதை இயற்கைக்கு எதிராக திரைப்படங்களாக தயாரிக்கின்றனர். கதைகளாய் நிரம்பிக்காணப்படும் புத்தகங்களில்
 அரைவாசிக்கு மேற்பட்டவை கற்பனையால்உருவாக்கப்பட்டவை முன்னைய கால அரசர்கள் தம் கற்பனையில் தோன்யதை ஓவியங்களாய வரைந்துவைத்தனர். சிற்பங்களாகவும் செதுக்கினர். ஆயினும் இன்று இயற்கைக்கு முற்றுமுழுதாக முரன்பட்டதாக வானத்தில் வீடுகட்டுவது நிலாவஜல் வசிப்பது போன்று தம் கற்பனையில் எட்டியதை கவிதைகளாக வரைகின்றனர். அப்படி கற்பனையால் உருவாகி இயற்கைக்கு முரனான ஜதார்த்தத்திற்கு சாத்தியமற்ற சில புகைப்படங்கள்

உலகப்போரில் ஹிட்லருடன் போரிட்ட நாய்ப்படை

  
  உலகையே உள்ளங்கையில் கொண்டுவர நினைத்த ஜேர்மனை ஆண்ட சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரின் வரலாறு முழுவதுமே நம்பமுடியாததாகவும், சுவையானதாகவும் அமைந்திருக்கிறது. ஹிட்லர் ஈவு இரக்கமற்ற கொடியவராக இருந்தாலும், ஆச்சரியப்படத்தக்க வகையில் சில நல்ல குணங்களும் இருந்தன. யூதர்களை நடு நடுங்க வைத்து ஆட்டிப்படைத்த சர்வாதிகாரியான ஹிட்லர், குழந்தைகளிடமும், பிராணிகளிடமும் அன்பு கொண்டவர். மது அருந்த மாட்டார். புகை பிடிக்க மாட்டார். சைவ உணவு மட்டுமே சாப்பிடுவார்.ஹிட்லர் வளர்த்த ப்ளாண்டி என்னும் ஜெர்மன் ஷெஃபர்ட் வகை நாய் அவரது பதுங்குழி காலம் வரை கூடவே இருந்துள்ளது. அவர் தனது காதலியுடன் தற்கொலை செய்து கொண்டு இறக்கும் தருவாயிலும் அந்த பாசமான நாய் ஹிட்லருடன் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துரோகியாக கணிக்கப்பட்ட அக்பர்

  
ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டில் தார்த்தாரியப் பெரு வெள்ளம் இந்திய பாக்கிஸ்தான துணைக் கண்டத்தைத் தவிர உள்ள ஏனைய அனைத்து இஸ்லாமிய உலகத்தையும் நாசப்படுத்தியது. இந்த நாட்டிலிருந்த சுகபோகவாசிகள் மற்ற நாட்டிலுள்ள சுகபோகவாசிகளைப் போல இந்த எச்சரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுக்காமல் தங்களின் தீயவர்களிலேயே நிலைத்திருந்தனர். குராஸான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் அரசர்களின் கட்டுப்பாடற்ற அதிகார பிரயோகம்ää ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆடம்பர வரம்பு மீறிய வாழ்க்கைகள் சட்ட விரோத முறையில் செல்வத்தை பதுக்கி வைத்து அவைகளை நீதியற்ற முறையில் செலவளித்தல் கொடுங்கோன்மை மற்றும் நிர்ப்பந்த ஆட்சிää இறைவனை மறுத்தல் மேலும் சத்திய வாழ்வை விட்டு விடல் போன்ற பலவீனங்களும் ஒழுக்கக் கேடுகளும் எங்கும் காணப்பட்டன. மார்க்கக் கண்ணோட்டத்தில் வரம்பு மீறலாக உள்ள இந்த அனைத்தும் அக்பரின் காலத்தில் அதனுடைய உச்ச நிலையை அடைந்தது. அப்போது வீழ்ச்சி அதனுடைய இறுதி எல்லையை தொட்டது.

கிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியட் வீரன் டான்கோ

  
தோழர் ஸ்டாலின் தலைமையில்இ ஹிட்லர் என்ற பாசிச மிருகத்திடமிருந்து உலகை காப்பாற்றிய சோவியத் வீரர்கள் பற்றிய உண்மைகதைகள் சிலவற்றை மாஸ்கோ நூலில் இருந்து தேர்தெடுத்து மொத்தமாக நமது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை (டிசம்பர் 21) முன்னிட்டு அக்கதைகள் ஒவ்வொன்றாக பிரித்து வெளியிட முடிவு செய்ததில் இரண்டாவது பதிவுவாக “சோவியத் வீரன் டான்கோ” வை வெளியிடுகிறோம். மாக்சிம் கோர்க்கியின் கதைகளில் ஒன்றில் வருகின்ற வியப்பைத் தரும் பாத்திரம் டான்கோ. ஒரு இருண்ட காட்டில் அகப்பட்டுக் கொண்ட சிலரைக் காப்பாற்றுவதற்காக டான்கோ தன்னுடைய மார்பிலிருந்து இருதயத்தைப் பிய்த்துக் கொடுத்தான். அந்த இருதயம் பிரகாசமான நெருப்பாக கொழுந்து விட்டெரிந்து காட்டை விட்டு வெளியே போகின்ற பாதையை அவர்களுக்குக் காட்டியது.

உலகில் மிகவும் அபாயகரமான சுற்றுளாத்தளம்

  
 விடுமுறைக்காலம் வந்ததும்  தமது மனங்களை இலகுவாக்கி கொள்வதறள்கும் புதிய அனுபவங்ளை பெற்று கொள்வதற்கும் சுற்றுளாத் தளங்களை நோக்கிப் பயனிப்பார்கள்.  சுற்றுளாப் பயனிகளை மகிழ்விக்கும் சில இடங்களுக்கு மத்தியில் மரண பயத்தை உண்டு பண்ணும் இடங்களும் உண்டு இந்த வகையில்   அந்த இடத்தைப் பார்த்தால் அம்மாடியோவ் என்ன ஒரு ஆழம் என்று ஒருகணம் தலை விறைத்துப் போய் நிற்பீர்கள். அந்த இடம் அவ்வளவு பிரமிப்பாக இருக்கும். ஆம் இது தான் உலகின் மிகவும் அபாயகரமான சுற்றுலாத்தலம். சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் இந்த இடத்தில் அவர்களுக்குத் தேவையான எந்தவித பாதுகாப்பு வசதிகளும் இல்லை.

காதலுக்கும் புத்துயிர் ஊட்டிய ஷாஜஹான்

  
அகில உலக புகழ் தாஜ்மஹால் நீண்ட நெடிய வரலாற்றுச் சரித்திரம் கொண்டது. ஆசியாவில் இற்றைக்கு 350 வருடம் முன்பு மிகப்பலமும் செழிப்புமுள்ள சாம்ராஜ்யமுடன் இதன் கதை பின்னியுள்ளது. நினைவு மண்டபத்தின் பிரமாண்ட வரலாற்று பின்னணியும் அற்புதமான கட்டிடக்கலையும் விபரிக்கமுடியாத அழகும் பின்வருமாறு (மிக சுருக்கமாக ) அமைகின்றது.தாஜ் மஹால் முஹல சாம்ராஜ்யத்தின் பேரரசன் "ஷாஜஹான்"  தனது காதலி , மனைவி, அரசி " மும்தாஜ் மஹால "  இன் ஞாபகார்த்தமாக நிறுவிய நினைவாலயம்.இது இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றான உத்தர் பிரதேஷ்(Uttar Pradesh) மாநிலத்தின் அக்ராநகரில் அமைந்துள்ளது.

1000 அடி உயரத்தில் பிரமாண்ட ஸ்டீல் கட்டிடம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் நோக்கில் தைவானின் தைசுங் நகரில் ஆயிரம் அடி உயரத்தில் பிரமாண்ட ஸ்டீல் கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு இதன் உச்சியில் பிரமாண்ட தோட்டம் உருவாக்கப்படுகிறது. ஜப்பானை சேர்ந்த சூ பியூஜிமோட்டோ என்ற வடிவமைப்பாளர் உருவாக்குகிறார். 6.59 பில்லியன் தைவான் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் இந்த கட்டிடத்தில் ஏறி சென்று தோட்டத்தையும் தைசுங் நகரின் அழகையும் ரசிக்கலாம். திறப்பு விழா அனேகமாக எதிர்வரும் 2017ஆம் ஆண்டில் நடக்கும் என்கிறார்கள். எதிர் காலத்தில் சுற்றுலாப்பயனிகளை அதிகம் கவரும் இடமாகவும் இது விளங்கும் என்பதில் ஜயமில்லை.சுற்று சூழலின் பாதுகாப்பையும் வலியுறுத்தி இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளமை எல்லோருடைய வரவேற்பையும் பெற்றுள்ளது..

2011 இல் 800,000 சுற்றுலாப் பிரயாணிகள் இலங்கை வருகை!:-Sri Lanka tourism achieves 800,000 arrivals in 2011

இலங்கை::இலங்கையின் சுற்றுலாக் கைத்தொழிலானது புதியதொரு மறுமலர்ச்சியை நோக்கி சென்றவண்ணம் உள்ளது. இதற்கு ஆதாரக 2011 ஆம் ஆண்டின் 800,000ஆவது சுற்றுலாப் பிரயாணி கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி பண்டபரநாயக சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். லண்டனில் இருந்து யூஎல் 501 இலங்கை எயாலைன் விமானத்தின் மூலம் வந்தடைந்த சுற்றுலா பிரயாணியை இலங்கை சுற்றுலாத்துறை தலைவரான டாக். நாலக கொடஹேவா, முகாமைத்துவ பணிப்பாளர் திரு. ருமி ஜபரூ மற்றும் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து வரவேற்றனர்.முன்பு ஒருகாலமும் இல்லாதவாறு இவ் ஆண்டு 800,000 சுற்றுலாப் பிரயாணிகள் இங்கு வருகைதந்துள்ளனர்

ராக்கெட் விடுறவங்களுக்கு கொடுக்கிற நோஸ்கட் என்பது இதுதானோ ?

 காதலை உலகம் எப்பிடியெல்லாம் கொண்டாடுகிறது.பலர் தம் காதலை வெளிப்படுத்த தெரியாமல் பெரும் அவஸ்தைப் படுகிறார்கள். சிலர் காதலை வெளிப்படுத்தி காதலில் வென்றும் இருக்கிறார்கள். சிலர் தோற்றும் இருக்கிறார்கள்.இங்கும் ஒருத்தன் எவ்வாறு தன் காதலை எவ்வாறு வெளிப்படுத்துகிறான் என்றுதான் பாருங்கள். இது ஒரு லெட்டர் வடிவிலான காதல் காமடி.கொஞ்சம் படிச்சுத்தான் பாருங்களேன்.
ஒரு மாணவன் லவ் லெட்டர் எழுதுகிறான்......
அன்பே abi
கீழே நான் கொடுத்திருக்கிற எல்லா கேள்விகளுக்கும் உனக்கு சரியென்று தோன்றும் பதிலை தெரிவு செய்.

உறுதியுடன் போராடிய மறக்கடிக்கப்பட்ட மாவீரன் திப்புசுல்தான்

  
திப்பு சுல்தான் 
1799 மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவு கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவு கூறுவதற்கு சமமாகும். கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ - திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர்தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தைக் கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.

யார் இந்த கிறிஸ்மஸ் தாத்தா

  

கிறிஸ்மஸ் என்றாலே முதலில் கண்ணுக்கு தெரிவது கிறிஸ்மஸ் தாத்தாதான்.யார் இந்த கிறிஸ்மஸ் தாத்தா குழந்தைகளக்கு பிரியமான இவரை சற்று ஆராய்வோம். துருக்கி நாட்டில் மிரா நகரில் 04ம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர் புனிதநிக்லஸ்   இவர் கிறிஸ்தவ ஆயராவார்.மனித நேயத்தின் சின்னமாக விளங்கிய இவர் ஏழை எளியவர்க்கு உதவுவதையே தன் குறிக்கோளாக கொண்டிருந்தார்.இவர் சிறு வயது முதலே தபத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினார்.புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் மாத்திரம் உணவு உண்டார்.வறுமையின் வீரியத்தையும் மக்கள் படும் துன்பத்தையும் நேரில் கண்ட அனுபவமே இவரை மனித நேயவாதியாக மாற்றியது.

ரஸ்யர்கள் எதற்காக ஒரு பெட்டைநாயை முதலில் விண்வெளிக்கு அனுப்பினார்கள்?

  அமெரிக்காவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையில் பனிப்போர் நடந்திட்டிருந்த காலமது. பொதுவாக ரஸ்யாவின் அரசவிடையங்கள் யாவும் மிகவும் ரகசியமாகப் பேணப்படும். ஆனால் அமெரிக்காவின் விடையங்கள் பகிரங்கமானது அல்ல எனினும் அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஓரளவு ஊகிக்கக் கூடியதாக இருந்தது.இந்தக் காலகட்டத்தில் தான் அமெரிக்காவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையில் (அப்போது சோவியத் ரஸ்யா) யார் முதலாவதாக விண்வெளிக்கு ரொக்கெட் அனுப்புவது என்ற கடும் போட்டி நிலவியது.இதில் முந்திக்கொண்ட ரஸ்யர்கள் முதன் முதலாக  1957 ஒக்டோபர் 4 ல் லைக்கா என்ற பெட்டை நாயை விண்வெளிக்கு அனுப்பி வெற்றிகண்டனர்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls