Monday, January 2, 2012

காதலுக்கும் புத்துயிர் ஊட்டிய ஷாஜஹான்

  
அகில உலக புகழ் தாஜ்மஹால் நீண்ட நெடிய வரலாற்றுச் சரித்திரம் கொண்டது. ஆசியாவில் இற்றைக்கு 350 வருடம் முன்பு மிகப்பலமும் செழிப்புமுள்ள சாம்ராஜ்யமுடன் இதன் கதை பின்னியுள்ளது. நினைவு மண்டபத்தின் பிரமாண்ட வரலாற்று பின்னணியும் அற்புதமான கட்டிடக்கலையும் விபரிக்கமுடியாத அழகும் பின்வருமாறு (மிக சுருக்கமாக ) அமைகின்றது.தாஜ் மஹால் முஹல சாம்ராஜ்யத்தின் பேரரசன் "ஷாஜஹான்"  தனது காதலி , மனைவி, அரசி " மும்தாஜ் மஹால "  இன் ஞாபகார்த்தமாக நிறுவிய நினைவாலயம்.இது இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றான உத்தர் பிரதேஷ்(Uttar Pradesh) மாநிலத்தின் அக்ராநகரில் அமைந்துள்ளது.
தாஜ் மஹால் 42 ஏக்கர் நிலப் பகுதியில் மிகவும் அரிதான வெள்ளை மாஃபிள்கல்களால் 1631 ம்-1653ம் ஆண்டிற்கு இடைப்பட்ட 22 வருட காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது.கட்டிடம் கட்டப்பட்ட காலப்பகுதியில் அதி நுட்பமுடைய சுமைகாவிகள் , பொறிகள் இவற்றுடன் 22,000 வேலையாட்கள் , ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் , பல நிபுணர்களும் இரவுபகலாக பயன்படுத்தப்பட்டார்கள் .
இந்த மாபெரும் கட்டிடத்தின் அடித்தளம் 186 அடி சதுரமான பரப்பிலும் நிலத்தில் இருந்து 22 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மையான கோபுரம் 186 அடியும் மற்றயநான்கு மூலைகளிலுமுள்ள கோபுரங்கள் 137 அடி உயரமும் உள்ளது.முதன்மையான மேல் தூபி 10 மாடி கட்டிட உயரத்திற்கு சமமாகவும் பல சிறிய கற்களை கொண்டும் உருவாக்கியுள்ளனர். மேலும் இதன் மொத்த எடை 13,000 தொன் (2,000 யானைகள் எடை) என்பதுடன் எந்தவிதமான தூண் கட்டுமானத்திலும் தாங்கி இல்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும் .தாஜ் மஹால் வெளிப்பகுதி முழுமையாக வெள்ளை மாஃபிள் கற்களாலும் உட்பகுதி 30 வித்தியாசமான நிறங்கள் கொண்ட கற்களின் கலை வேலப்பாட்டுடனும் அமைக்கப்பட்டுள்ளது .

அகில புகழ் பலவற்றிற்கு காரணமான இந்த கட்டிடம் பல ஆச்சரியமான கட்டிட நுணுக்கங்களையும் , கலைகளையும் , வடிவத்தினையும் கொண்டுள்ளது. இஸ்லாமிய மதத்தின் கட்டிட அமைப்புடன் பேரரசன் விருப்பின் படியான சமச்சீர் அமைப்பும் , வெள்ளை மாஃபிள் கட்டிடமும் , நீர்நிலையில் அதன் கறுப்பு வடிவான நிழல் தெறிப்பும் , கட்டிடத்தை சுற்றிவர நந்தவனம் என்பன நேர்த்தியாக கையாளப் பட்டுள்ளது. ஆற்றம் கரையோரமாக கட்டப்பட்டுள்ள இந்த மகாகட்டிடம் நிலத்தின் அடியிலான பாதிப்புக்களை எதிர்கொள்ளும் விதத்தில் அபாரமான கட்டிட பொறியியல் நுட்பம் பாவிக்கப் பட்டுள்ளது , அத்துடன் ஆரம்பத்தில் இருந்த திட்டவரைவு எந்த ஒரு மாற்றங்களும் செய்யப்படாது முழுமையாக நிறைவு செய்யப்பட்டது என்பது கட்டிடத்தின் முழு திட்டமிடலை நிரூபிக்கின்றது.தாஜ்மஹால் முகப்பில் "குறான்" வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. முகப்பில் உள்ள இந்த புனித வரிகள் சாதாரண கண்களுக்கு ஒரே அளவில் (அடியில் இருந்து 30 அடிமேலான உயரத்திலும்) புலனாகும் அற்புத கலை நுணுக்கம் கையாளப்பட்டுள்ளது.ஷாஜஹானுக்கு மூன்று மனைவியர் இருந்தபோதிலும் அதில் இரண்டாவது மனைவியாகிய முதாஜ் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தார். ஷாஜஹான் 16 பிள்ளைகளுக்கு தந்தையாகவும் அதில் 14 பிள்ளைகளுக்கு தாயாக முதாஜ் இருந்துள்ளார். அத்துடன் மும்தாஜ் தனது 14 வது பிள்ளையை பிரசவிக்கும் வேளையில் மரணத்தை தழுவிக்கொண்டாராம். மும்தாஜ் இறக்கும் முன்பதாக தனது இறுதி ஆசையாக ஷாஜ-ஹானிடம் கேட்டுக் கொண்டதுவே இந்த "தாஜ் மஹால்“.அக்காலத்தில் உலகில் மிகப்பெரிய செல்வந்தரும் பேரரசருமான ஷாஜஹான் வரலற்றுடன் இருண்ட கதையும் சொல்லப்படுகிறது. அதாவது தாஜ் மஹால் கட்டி நிறைவு பெற்றதும் அங்கு வேலைசெய்த அனைவர் கைகள் வெட்டப்பட்டதாகவும் முதன்மை கட்டிட கலைஞர் சிரச்சேதம் செய்து கொல்லப் பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. ஏனெனில், இது மாதிரியான ஓர் நினைவாலயம் வேறு யாராலும் கட்டப்படுவதை தடுப்பதற்கு ஷாஜ ஹான் இட்டகட்டளை இது எனவும் சொல்லப்படுகின்றது .ஷாஜஹான் கட்டளைப்படி அந்நாட்களில் தாஜ்மஹால் கட்டிட வரைபட உருவாக்கத்திலும் கட்டிட வேலைத்திட்டத்திலும் பல இந்துசமய நிபுணர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள். அத்துடன் இஸ்லாமிய சாயலும் இந்துக்கள் கைவண்ணமும் ஒன்றுசேர்ந்த இந்த அரிய கலைப்படைபின் பின்னால் பல கலைஞர்களின் பங்கு இருந்துள்ளது.1983ம் ஆண்டில் இருந்து ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான, கலாச்சார மையம் இதனை உலக கலாச்சார சின்னமாக அறிவித்துள்ளது.இந்த உலக அதிசையத்தினை பார்வையிட ஒவ்வொரு வருடமும் 3 மில்லியன் மேலான மக்கள் சென்று வருகின்றனர்.மேலும் பலபல பெருமையும், புகழும், கதைகளும் சொல்லும் யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ள தாஜ் மஹால் ஒரு உலக அதிசயமாகவும், காதல் சின்னமாகவும் , உலக கலாச்சார சின்னமாகவும் இருந்து வருகின்றது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls