Friday, February 3, 2012

மூழ்கிய டைட்டானிக் கப்பலில் கண்டெடுக்கப்பட்ட வயலின்

கடந்த 1997ம் ஆண்டு வெளிவந்து உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் டைட்டானிக். உலக புகழ் பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியனார்டோ டிகாப்ரியோ, கேத் வின்ஸ்லெட் உள்பட பலரும் நடித்த படம். இதில் ஒரு காட்சியில் கப்பல் உடைய தொடங்கிய பிறகு பயணிகள் பீதியுடன் இங்கும் அங்கும் ஓடுவார்கள். உயிர் பிழைப்பதற்காக மீட்பு படகுகளில் ஏறுவார்கள். அப்போதுகூட கப்பலின் பேண்ட் வாத்திய குழுவினர் பதற்றப்படாமல் வயலின் வாசிப்பார்கள்.

Wednesday, February 1, 2012

காதலில் விழுந்த பெண்களைக் கண்டறிய சில வழிகள்...

பெண்களின் மனதைக் கடலின் ஆழத்திற்கு ஒப்பிடுவார்கள். பெண்களின் மனதில் உள்ளதை அறியவே முடியாது என்பது அதற்கு அர்த்தம். ஆனால் அதையும் தாண்டி, காதலில் விழுந்த பெண்களைக் கண்டுபிடிக்கவும் சில வழிகள் உள்ளன. அந்தப் பெண்களே தங்களையும் அறியாமல் அதை வெளிப்படுத்துவார்கள். அதை வைத்து அவர்கள் என்ன மன நிலையில் உள்ளனர் என்பதை அறியலாம். இதோ காதலில் விழுந்த பெண்களைக் கண்டறிய சில வழிகள்... ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த பெண், பெர்ஃப்யூமைஉபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால், அதுவும் அந்த பெர்ஃப்யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூமை தேடிப் பிடித்து வாங்குவதாக இருந்தால் புரிந்து கொள்ள வேண்டியதுதான்.

Tuesday, January 31, 2012

நமக்காக படைக்கப்பட்ட இயற்கை யார் இல்லாவிட்டாலும் நல்ல நண்பன் நீ தான்

வாழ்க்கையில இன்பமும் துன்பமும் கலந்திருக்கும். நமக்கு இந்த உலகத்தில யாரும் சிரிக்க வைக்கா விட்டாலும் நமக்காக இந்த உலகமே இருக்கு என்பதை மறந்து விடாதீங்க. துன்பம் வரும் போது நமக்காக அழுவதும் சந்தோஷம் வரும் போது நம்மோடு சேர்ந்து சிரிப்பதும் இயற்கையே. நாம் டிம்மோட கவலைகளை யாருக்கு சொல்லாவிட்டாலும் அமைதிக்காக வானத்தை பார்த்து கடலை பார்த்து சொல்லனும் அது மனதுக்கு திருப்தி தரும் அப்படி இயற்கை சிரிக்கும் போதும் அழும்போதும் ரொம்ப அழகாய் தெரியும் அந்த அழகை பார்த்திருப்பீங்க ஆனால் புகைப்படங்கள் அந்த சந்தோஷமான நினைவுகளை மீட்டித்தரும் பொக்கிஷங்களே

அழியும் நிலையில் மன்னாரின் அல்லிராணிக் கோட்டை

மன்னார் மாவட்டத்தில் அரிப்புக் கிராமத்தில் அமைந்துள்ள அல்லிராணிக் கோட்டை பராமரிப்பின்றியும், கடலரிப்பாலும் அழியும் நிலையில் காணப்படுவதாகக் கவலை தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் விதத்தில் அமைந்ததுமான கிராமங்களுள் அரிப்புக் கிராமமும் ஒன்று. இந்த அரிப்புக் கிராமத்தில் பழமை வாய்ந்த அல்லிராணிக் கோட்டை காணப்படுகிறது. கடந்த யுத்த காலத்தின் போது இந்தப் பிரதேசத்துக்குச் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இதனால் அல்லிராணிக் கோட்டை என்ற பெயரை மட்டும்தான் மக்கள் கேட்டிருப்பார்களே தவிர அதனைப் பார்க்க முடியாத நிலையில் இருந்தனர்.

Sunday, January 29, 2012

ஜேர்மனியில் உள்ள வினோத காதல் பாலம்

ஜேர்மனியில் உள்ள Hohenzollernbruecke பாலத்தை காதல் பாலமாக மாற்றியுள்ளனர். பொது இடத்தில் அமைந்துள்ள இப்பாலத்தில் காதலர்கள் தங்களது பெயர்களை ஒரு பூட்டில் எழுதி அதை பூட்டி இந்த பாலத்தில் தொங்க விடுகின்றனர். மேலும் பொது இடங்களில் இவ்வாறு பூட்டை தொங்கவிடுவதனால் தங்களது காதல் வெற்றியடையும் என்பது காதலர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை ஐரோப்பா நாடுகளில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கடைபிடிக்கப்பட்டது என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிகாகோவில் மேகத்தினைப் பிரதிபலிக்கும் அழகிய நுழைவாயில்

சிகாகோவில் உள்ள மில்லினியம் பூங்காவில் அமைந்துள்ளது. இந்த மேக நுழைவாயில். இந் நுழைவாயிலை இந்தியாவில் பிறந்த பிரிட்டன் கலைஞர் அனிஷ் கபூர் வடிவமைத்துள்ளார்.
மேகத்தை பிரதிபலிக்கும் இந்நுழைவாயில், கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளதால் இதில் சிகாகோ நகரமே அழகாக காட்சியளிக்கிறது. மேலும் அனைவரின் கண்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மேக நுழைவாயிலைப் படங்களில் காணலாம்.

மனிதருக்கும், நாய்களுக்குமிடையே உள்ள நட்புறவு 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானது

மனிதனுடன்வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணியான நாய்கள் மிகுந்த நன்றியுள்ள ஜீவனாக நினைப்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆதிகாலத்து மனிதன் வேட்டைக்கு செல்லும் போது நாயை தன்னுடன் அழைத்துச் செல்வான்.மனிதன், நாய்கள் இடையிலான நட்புறவு சில நூறு ஆண்டுகளாக நீடிப்பது அல்ல. இந்த உறவு சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருப்பதாக அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து அறிவித்து இருக்கிறார்கள்.சைபிரியா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கிடைத்த சுமார் 33 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததாக கருதப்படும் நாய்களின் மண்டை ஓடுகளை தீவிரமாக ஆய்வு செய்து இந்த தகவலை தெரிவித்துள்ளார்கள்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls