Saturday, April 21, 2012

இலங்கையில் கோழி "பிரசவித்தது'!!வழக்கத்திற்கு மாறாக முட்டைக்குப் பதிலாக கோழி குஞ்சு பொரித்த அதிசயம்

வழக்கத்திற்கு மாறாக முட்டைக்குப் பதிலாக கோழி குஞ்சு பொரித்த அதிசயம் இலங்கையில் நடந்துள்ளது. உலகில் இன்னமும் விடை காணப்பட முடியாமல் பல்வேறு பட்டிமன்றங்கள் உட்பட விவாத மேடைகளில் முக்கிய தலைப்பாக இருந்து வருவது "கோழி முதலா அல்லது முட்டை முதலா' என்பது தான். பொதுவாக முட்டையிட்டதும் கோழி அதன் மீதமர்ந்து அடை காக்கும். கோழியின் உடல் வெப்பத்தால் முட்டையில் இருந்து சில நாட்களுக்குப் பின் கோழிக் குஞ்சு வெளிவரும். இது தான் வழக்கம். ஆனால் இலங்கையில் கோழியொன்று முட்டையிடாமல் நேரடியாக குஞ்சை பிரசவித்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து கொழும்புவில் உள்ள கால்நடை மருத்துவர் பி.ஆர்.யாப்பா என்பவர் கூறுகையில் "இந்த கோழியின் கருப்பையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக கோழியின் வயிற்றிலேயே முட்டை தங்கிவிட்டது. கோழிக்குள்ளேயே இருந்த முட்டையிலிருந்து 21 நாட்கள் கழித்து குஞ்சு வெளிவந்துள்ளது. குஞ்சை பிரசவித்த கோழி அடுத்த சில நிமிடங்களில் இறந்து விட்டது. கோழி இறந்ததற்கான காரணம் குறித்து நடத்தப்பட்ட பரிசோதனையில் உள்காயங்கள் காரணமாகத் தான் கோழி இறக்க நேரிட்டது என்பது தெரியவந்தது.

Friday, April 20, 2012

தமிழீழம் குறித்து பேசும் கருணாநிதி பயங்கரவாதி: கோத்தபாய பாய்ச்சல்

தமீழீழம் குறித்து பேசுபவர்களை பயங்கரவாதிகளாக கருதுவதாகவும் தமீழீழத்தை இந்தியாவில் வைத்துக் கொள்ளும் படியும் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச தம்பி கோத்தபாய ஆவேசமாக கூறியுள்ளார்.
தனித் தமிழீழம் அமைக்க ஐ.நாவின் கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தும் யோசனைக்கு திமுக தலைவர் மு.கருணாநிதி ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்தே அவரைக் கடுமையாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விமர்சித்துள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்களை விட மிகவும் அதிகமான தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்கின்றனர். அவரால் இலங்கையில் ஈழத்தை உருவாக்க முடியாது. இது ஒரு இறைமையுள்ள நாடு.

ஈழம் பற்றி யார் பேசுகிறார்களோ அவர்களை நாம் பயங்கரவாதிகளாகவே கருதுகிறோம். இலங்கையில் இப்போது போர் இல்லை. இன இணக்கப்பாடு உள்ளது.

எல்லோருடைய வாழ்வும் அமைதியாக உள்ளது. இலங்கையில் உள்ள தமிழ் மக்களை கருணாநிதி தூண்டிவிடக் கூடாது.

சர்ச்சைக்குரிய அறிக்கைகளின் மூலம் எமது நாட்டை அழிக்கும் இந்திய அரசியல்வாதிகளில் கருணாநிதியும் ஒருவர். இது அரசியல் ஆதாயத்துக்கான தரம்குறைந்த தந்திரோபாயம்.

எமது நாடு சுதந்திரமான ஒரு நாடு என்பதை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தை உருவாக்க அவர் முயற்சிக்கக் கூடாது.

அவருக்கு ஈழத்தை அமைக்கும் விருப்பம் இருந்தால் அதை பெருமளவு தமிழர்கள் வசிக்கும் தமிழ்நாட்டில் உருவாக்கட்டும் என கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்

சுவிஸ்சில் புலம்பெயர்ந்து வருவோருக்கான புதிய திட்டம்

எட்டு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்து ஸ்விட்சர்லாந்து வருவதற்கு மீண்டும் ஒதுக்கீடு கொண்டுவரும் அரசின் திட்டம் குறித்து பல பத்திரிகைகள் தங்களின் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகளான போலந்து வங்கேரி செக் குடியரசு ஸ்லோவேனியா சுலோவேகியா மற்றும் லித்துவேனியா பால்டிக் நாடுகள் லாத்வியா எஸ்டோனியா போன்றவற்றிலிருந்து 2000பேர் வரை ஸ்விட்சர்லாந்திற்கு புலம்பெயர்ந்து வர புதிய ஒதுக்கீட்டுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் 12 மாதம் வரை இங்கு தங்கலாம். இந்தத் திட்டம் குறித்து பத்திரிகைகள் தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளன. அவற்றில் சில ஆதரவும் சில எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய யூனியனுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கும் இடையிலான இரு தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மக்கள் எவ்விதக் கட்டுப்பாட்டுமின்றி ஐரோப்பாவிற்குப் போய் வர இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மே முதல் நாளிலிருந்து அறிமுகமாகும் இத்திட்டம் மறு ஆய்வுக்கு உட்பத்தப்படும்.

ஸ்விட்சர்லாந்துக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான நல்லுறவு இதனால் மேம்படும் என்றாலும் இத்திட்டத்தினை செம்மையாக நிறைவேற்றுவது குறித்தும் இதன் விளைவுகள் குறித்தும் பல பத்திரிகைகள் தலையங்கம் தீட்டியுள்ளன.


ஜேர்மனியில் கார் ஓட்டுவதற்கு உரிமம் பெறும் வயதை 16ஆக அறிவிக்க முடிவு

ஜேர்மனியில் கார் ஓட்டுவதற்கு உரிமம் பெறும் வயதை 16ஆக அறிவிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பல்வேறு புதிய விதிமுறைகளும் அறிமுகமாக உள்ளது.
தற்போதைய சட்டப்படி ஜேர்மனியில் 17 வயதினர் பெற்றோர்களின் மேற்பார்வையுடன் கார் ஓட்டலாம்.
நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகத்தின் நாடாளுமன்ற அரசுச் செயலரான பீட்டர் பிளெசர் கார் ஓட்டுவதற்கு உரிமம் பெறும் வயதை 18ஆக அறிவிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் இளைஞர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர் என்றார்.

இவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தொழிற் பயிற்சிக்கு செல்லும் கிராமப்புற இளைஞர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகுகின்றனர் இவர்களை 16 வயதிலேயே கார் ஓட்ட அனுமதித்தால் கிராமங்களில் தங்குவதையும் விரும்புவர். இவர்கள் கார் ஓட்டுவதற்கு பெற்றோரின் அனுமதியையும் பெறும் படி வலியுறுத்த வேண்டும் என்றார்.

ஜேர்மனியின் விபத்துக் காப்பீடு ஆய்வுக் குழு 16 வயதினர் கார் ஓட்டுவதால் விபத்துகள் அதிகரிக்கும் என்ற கருதுகிறது. வயதான நபர்களை விட 18 முதல் 24 வயதினர் அதிகமாக விபத்துகளில் சிக்குகின்றனர் என்பதால் இக்குழு 16 வயதில் கார் ஓட்ட அனுமதி வழங்குவது ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கண்டனம் தெரிவிக்கின்றது.

தினமும் 1 பாக்கெட் சிகரெட் பிடிக்கும் 8 வயது சிறுவன்

இந்தோனோஷியாவை சேர்ந்தவன் இப்ராகிம். 8 வயது சிறுவனான இவன் தினமும் 1 பாக்கெட் சிகரெட் பிடிக்கிறான்.
ஒரு வயது குழந்தையாக இருந்த போது இவனுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. தற்போதுஇ 4 வயதில் இருந்து 1 பாக்கெட் சிகரெட் பிடித்து வருகிறான். இதை அறிந்த அந்நாட்டு குழந்தைகள் நலவாழ்வு துறை அவனது சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை கைவிட தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம் (மார்ச்) முதல் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Wednesday, April 18, 2012

செசன்யாவில் டைனோசர் முட்டைகள்

செசன்யா நாட்டில் டைனோசர் நாற்பதுக்கும் மேற்பட்ட முட்டை படிமங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. ரஷியாவைச் சேர்ந்த புவியியல் ஆய்வாளர்கள் இதனை கண்டு பிடித்துள்ளனர்.
60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் வாழ்ந்தவை டைனோசர்கள். பூமியில் வாழ்ந்த விலங்குகளிலே மிகவும் பிரம்மாண்டமானவை அவை. புவியியல் மாற்றங்களினால் காலப்போக்கில் அவை அழிந்து விட்டாலும் அவற்றின் எலும்புகள் முட்டைகள் மட்டும் படிமங்களாக உலகம் முழுவதும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

செசன்யா நாட்டில் ஆய்வு செய்ய புவியியல் ஆய்வாளர்கள் அங்கு ஒரு பாறையில் இருந்த 40 டைனோசர் முட்டை படிமங்களை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து செசன் மாநில பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் கூறியதாவது

முன்னாள் சோவியத் ஜார்ஜியாவின் எல்லைப் பகுதியில் இருந்த மலையை சாலைப் பகுதிக்காக உடைத்து எடுத்த போது அந்த மலையில் ஓவல் வடிவ படிமங்கள் அதிகம் இருந்தன. அவற்றை புவியியல் நிபுணர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்த போது அவை டைனோசர் முட்டை படிமங்கள் என்பது தெரியவந்தது.

அந்த பாறையை மென்மையாக உடைத்து தனியாக சேகரித்ததில் 40 முட்டை படிமங்கள் கிடைத்தன. அவை 25 செமீ முதல் 1 மீ வரை உள்ளன என்றார். டைனோசர் முட்டை உள்ள பகுதியை சுற்றுலா தலமாக செசன்யா அரசு முடிவு செய்துள்ளது.

செசன்யா நாட்டில் 1994 முதல் 2001 வரை போர் நடைபெற்றது. ரஷ்யாவின் நிலப்பகுதி என்று ரஷ்யாநாட்டினரும் நாங்கள் சுதந்திர நாட்டை சேர்ந்தவர்கள் என்று செசன்யா நாட்டினரும் தெரிவித்து வருகின்றனர். தற்போது போர் முடிவுக்கு வந்ததை அடுத்து செசன்யாவை புணரமைக்க பல மில்லியன் டாலர் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் செசன்யாவிற்கு சுற்றுலா பயணிகள் வருவதை ஊக்குவிக்கும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செசன்யா நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகில் மிகவும் அசிங்கமான பறவை

பிறந்த உடனே இறக்கைகள் ஏதும் இல்லாமல் வினோதமாக தோற்றமளித்ததால் நெல்சன் என்ற இந்த பறவை தனது பெற்றோர்களால் கைவிடப்பட்டது.
ஜேர்மனியில் உள்ள Bergzooவில் நெல்சன் கடந்த மாதம் பிறந்தது.
பிறந்த உடனேயே இதன் பெற்றோரால் நிராகரிக்கப்பட்டதால் நான்கு வாரங்கள் ஐnஉரடியவழச-ல் வைத்து பராமரிக்கப்பட்டது. இருப்பினும் தனக்கு என்றாவது ஒருநாள் இறக்கை முளைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பறவை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

டிஸ்கவரி விண்கலம் ஓய்வுபெற்றது!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா 1984 இல் உருவாக்கிய விண்கலம் டிஸ்கவரி. 18ம் நூற்றாண்டை சேர்ந்த இங்கிலாந்து ஆராய்ச்சி கப்பலின் பெயரை நினைவு கூர்ந்து இப்பெயர் வைக்கப்பட்டது. 1984ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி பயணம் தொடங்கிய டிஸ்கவரி 27 ஆண்டுகளில் 39 முறை வெற்றிகரமாக பறந்து தனது கடைசி பயணத்தை கடந்த ஆண்டு மார்ச் 9ம் தேதி நிறைவு செய்தது.
மொத்தத்தில் 365 நாட்கள் (ஒரு ஆண்டு) விண்ணில் இருந்து சாதனை படைத்திருக்கிறது. இதையடுத்து பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டது. வர்ஜீனியா மாநிலம் சான்டிலி நகரில் உள்ள தேசிய விண்வெளி அருங்காட்சியகத்துக்கு நாசா 747 விண்கலம்தாங்கி விமானம் மூலம் நேற்று எடுத்து செல்லப்பட்டது. முன்னதாக தலைநகர் வாஷிங்டன் பகுதியில் முக்கால் மணி நேரம் வட்டமடித்த டிஸ்கவரிக்கு மக்கள் பிரியாவிடை கொடுத்தனர்.

காந்தி ரத்தம் படிந்த புல் ரூ.8 லட்சத்துக்கு ஏலம்: கண்ணாடி ரூ.28 லட்சத்துக்கு ஏலம் போனது

லண்டனை சேர்ந்த பிரபல ஏல நிறுவனமான முல்லாக் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை ஏலம் விடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டது. இந்த ஏலத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதையும் மீறி காந்தி பயன்படுத்திய பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன.
இந்த ஏலத்தின்போது காந்தியின் ரத்தம் படிந்த புல் மண் ஆகியவை ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த ரத்தம் படிந்த புல் 1948-ம் ஆண்டில் காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது அந்த இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரத்தம் தோய்ந்த புல்லும் மண்ணும் கண்ணாடியால் ஆன மேல்புறத்தை கொண்ட ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் உண்மை தன்மையை உறுதி செய்வதற்கான கடிதமும் அதில் வைக்கப்பட்டிருந்தது.

இதேபோல காந்தி பயன்படுத்திய கண்ணாடி ராட்டை போன்றவை எதிர்பார்த்ததை விட 2 மடங்கு தொகைக்கு ஏலம் கேட்டகப்பட்டன. கண்ணாடி ரூ.28 லட்சத்துக்கும் ராட்டை ரூ.21 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டன. ஏலம் விடப்பட்ட கண்ணாடி 1890-ம் ஆண்டு கால கட்டத்தில் காந்தி லண்டனில் வாங்கியதாகும். காந்தி எழுதிய கடிதங்கள் ஆன்மீக தகவல்கள் அடங்கிய பழங்கால இசைத்தட்டு மற்றும் ஆவணங்கள் போன்றவையும் ஏலம் விடப்பட்டன. 

கொட்டும் பனியால் ஏற்பட்ட கொடூரங்கள்

சுவிட்சர்லாந்தில் முன்பு இல்லாத அளவிற்கு போன ஆண்டு குளிரும் பனியும் அதிகமாக இருந்தது. பனிச்சரிவால் பலர் உயிரிழந்தனர். டேவோஸில் உள்ள பனி மற்றும் பனிச் சரிவு ஆய்வு நிறுவனம் செவ்வாயன்று ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.
இதில் 2012 ஏப்ரல் 15க்குள் பனிச்சரிவால் 26 பேர் இறந்துள்ளனர். சராசரியாக ஒரு ஆண்டிற்கு 25 பேர் உயிரிழப்பதுண்டு. இந்த எண்ணிக்கை வெளிவந்த அன்றே மேலும் இருவர் பனிச்சரிவில் பலியாயினர்.
பேசெல் நாட்டைச் சேர்ந்த ஐவர் குழு உச்சிப் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது ஒருவர் உயிரிழந்தார் இன்னொருவர் காயமடைந்தார்.

மற்றொரு சம்பவத்தில் ஒரு டச்சுக்காரர் வலாய்ஸ் மாநிலத்தில் உச்சிப் பனிச்சறுக்கு விளையாடிய போது பனிச்சரிவில் சிக்கிக் கொண்டார். அவர் நண்பர் எச்சரிக்கை மணியை ஒலித்து பனிமூடிய உடலை மீட்டெடுத்தார்.

இந்தப் பனிக்காலம் ஏற்ற இறக்கத்துடன் இருந்ததாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. 1953 முதல் டிசம்பர் மாதத் தொடக்கம் வரை பனி குறைவாக இருக்கும். டிசம்பர் ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு அதிகரிக்கும். பாதி இடங்களுக்கும் மேலாக இந்தப் பனிப்பொழிவு இந்த ஆண்டு 23 மடங்கு அதிகரித்தது வலாய்ஸ் மாநிலத்தில் சமேதனிலும் பனிப்பொழிவு சாதனையை ஏற்படுத்தியது.

அறுபதாண்டுக்கு முன்பிலிருந்து பனிபடர்ந்த உயரத்தை அளந்து வருகின்றனர். இந்த ஆண்டு டேவோஸில் உள்ள வீஸ் ஃபளுஜோக் என்ற இடத்தில் 270 செ. மீட்டர் உயரத்திற்கு பனி படர்ந்திருந்தது. 1951 இல் படர்ந்த பனியைக் காட்டிலும் தற்போது 20 செ.மீ அதிக உயரத்திற்கு பனி பொழிந்துள்ளது.

மிகப்பெரிய மலைக்கணவாய்கள் எல்லாம் பனிச்சரிவு ஆபத்து காரணமாக மூடப்பட்டுவிட்டன. இந்த ஆண்டில் மே மாதக் கணவாய்கள் மூடப்பட்டிருக்கும் சென்ற ஆண்டு இதை விடச் சீக்கிரமாக திறந்து விடப்பட்டது.

தூய கோத்தார்டு கனவாய் மே 23ம் நாள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போன வருடம் ஏப்ரல் கடைசியிலேயே இந்தக் கனவாய் திறக்கப்பட்டது. பெர்ன் மற்றும் ஊரிக்கு இடையில் உள்ள சூஸ்டென் கனவாய் ஜுன் 22 வரை மூடப்பட்டிருக்கும். சென்ற ஆண்டு இந்தக்கணவாய் மே கடைசி வரை மட்டுமே மூடப்பட்டிருந்தது.

ஊரி மாநிலத்தில் உள்ள ஆண்டர்மட் மற்றும் கிராவு பூண்டென் மாநிலத்தில் உள்ள சேட்ரூனை இணைக்கும் ஓபர் ஆல்ப் மலைக்கணவாய் தான் சீக்கிரமாகத்த திறக்கப்படுகிறது.

 ஃபுலூயெலா ஸ்புலூன் மற்றும் ஸான் பெர்னாடினோ போன்றவை மே மாதத் தொடக்கத்தில் மக்களின் போக்குவரத்துக்குத் திறந்துவிடப் படலாம். இந்தக் கணவாய்களும் கிராவு பூண்டென் மாநிலத்தில் காணப்படுகின்றன.

ஒபாமா தலைக்கு விலை அறிவித்த இங்கிலாந்து கோடீஸ்வரர்!

மும்பையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதியான ஹபிஸ் சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு தொகையை அறிவித்தது. இதற்கு போட்டியாக இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியான அகமது என்பவர் ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஆகியோரை பிடித்து கொடுத்தால் ரூ.80 கோடி (10 மில்லியன் பவுண்ட்) பரிசு தொகை வழங்குவேன் என அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு தொகை அறிவித்து இருப்பதால் நானும் இந்த ரூ.80 கோடி பரிசை அறிவிக்கிறேன் என்று கூறினார். இவர் இங்கிலாந்தில் வசிக்கும் கோடீசுவரர் ஆவார்.

முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர். இந்த பரிசு தொகை அறிவிப்பை தொடர்ந்து கோடீசுவரர் அகமதுவை கட்சியில் இருந்து நீக்கதொழிலாளர் கட்சி நடவடிக்கை எடுத்தது.

அகமதுவின் செயல் கண்டனத்துக்குரியது. இது குறித்து விசாரணை நடைபெறுகிறது. அதுவரையில் அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் என கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

Tuesday, April 17, 2012

கனடாவில் அதிகரித்து வரும் வீடு வாங்குவோரின் எண்ணிக்கை

கனடாவில் கடந்த இரண்டு ஆண்டை விட இந்த ஆண்டு வீடு வாங்குவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் சென்ற மாதம் வீட்டின் விலை சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவலை கனடாவின் வீட்டு மனை முகமையின் விற்பனைக்குழு தெரிவித்துள்ளது.
இது பற்றி வீட்டு முகமையின் தலைமைப் பொருளாதார அதிகாரி கிரிகோரி கலும்ப் கூறுகையில், சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வீட்டின் சராசரி மதிப்பு சற்று சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இது பற்றி கூறுகையில், நகரப்பகுதியில் வீட்டின் விலை அதிகரித்திருந்தது, ஆனால்(வுழசழவெழ ரூ ஏயnஉழரஎநச'ள) றொராண்டோ மற்றும் வான்கூவர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வியாபார போட்டியின் காரணமாக வீட்டு மனையின் விலை இந்தப் பகுதியில் அதிக அளவு குறைய தொடங்கியது.

வீட்டின் விலை வான்கூவரில் சென்ற ஆண்டு தேசிய சராசரி மதிப்பில் உயர்ந்தது போல இந்த ஆண்டு உயர வாய்ப்பில்லை. பிப்ரவரியில் 373000 டொலராக இருந்த வீடு மார்ச்சில் 369677 ஆக குறைந்துள்ளது.

கனடாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் வேகமாக உயர்ந்து வந்த வீட்டின் விலை தற்போது எதிர்பாராத அளவிற்கு குறைந்துள்ளது வீட்டு மனை வியாபாரிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Sunday, April 15, 2012

ஆல்ப்ஸ் மலையின் அழகை மலையிலிருந்து ரசிக்க அரசு அனுமதி வழங்கியது

சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைகளின் அழகை மலையிலிருந்து பார்ப்பதற்காக ஒரு பார்வையாளர் மாடம் கட்டுவது குறித்து சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களால் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இப்போது சில மாற்றங்களுடன் இந்த மாடத்தைக் கட்டுவதற்கு அனுமதி தெரிவித்துள்ளனர். பெர்ன் மாநில அரசு வியாழக்கிழமை அன்று மாடம் அமைப்பதற்கான திருத்தப்பட்ட திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்தப் பார்வையாளர் மாடம் பெர்னீஸ் ஓபெர்லாந்தில் உள்ள ஸ்டாக்ஹார்ன் மலையின் உச்சியில் அமைக்கப்படும். முதலில் இங்கு கண்ணாடிக் கூண்டு மாதிரி பார்வையாளர்கள் சுற்றிலும் பார்ப்பதற்கு ஏற்ப வசதியாக அமைக்கப்படும்.

இந்த கூண்டில் விலங்கு பறவைகள் வெயில் பனியிலிருந்து காத்துக் கொள்ள பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாண்டுகளுக்கு முன்பு இத்திட்டம் அறிமுகமான போது சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் மலையுச்சிக்கு மனிதர்கள் செல்வதால் அங்கு வாழும் உயிரினங்களின் அமைதி கெட்டுப் போகும் என்று வாதிட்டனர்.

இப்போது ஒரு உள்ளூர் கேபிள் கார் நிறுவனம் பெரியதாக இந்தப் பார்வையாளர் மாடத்தை அமைக்காமல் மூன்று சதுர மீற்றர் பரப்பில் மிகச் சிறியதாக கட்டுவதற்கு அரசிடமிருந்து அனுமதி பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு இந்தப் பணி நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டைட்டானிக் கப்பல் மூழ்கியதை நேரில் பார்த்தவரின் கடிதம் கண்டுபிடிப்பு

ஜுரிச் நகரத்தைச் சேர்ந்த ஆண்டோன் கிங்க் இவர் மூன்றாம் வகுப்புப் பயணியாக டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர்.
டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொண்டிருப்பதை அறியாத இவர் தன் அறையை விட்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்பொழுது பலரும் பெரிய பெரிய ஐஸ் கட்டிகளை கொண்டு கால்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர்.
விசாரித்ததில் இவர்கள் பயணிக்கும் டைட்டானிக் கப்பல் மீது பனிப் பாறை மோதிய தகவல் கிடைத்தது. அந்தப் பாறையின் துகள்களைக் கொண்டு தான் கால்பந்து விளையாடியதும் கிங்கிற்கு தெரியவந்தது.

பலரும் கிங்கிடம் டைட்டானிக் மூழ்கவே மூழ்காது என்று திட்டவட்டமாகக் கூறினர். இச்சம்பவம் நடந்தது (14.4.1912) நூறாண்டுகளில். கிங்க் தன் மனைவி மற்றும் நான்கு வயது மகனுடன் இந்தக் கப்பலில் பயணம் செய்தார். கப்பல் மூழ்கினாலும் இம்மூவரும் பிழைத்துவிட்டனர். பின்பு இவர் தான் பயணச் சீட்டு வாங்கிய முகமைக்கு 20 பக்கக் கடிதம் ஒன்றை எழுதினார்.

கிங்கின் கடிதத்தை அண்மையில்தான் சுவிஸ் டைட்டானிக் நிபுணர் கூண்டெர் பாப்லெர் கண்டுபிடித்துள்ளார். அந்தக் கடிதத்தின் சில பகுதிகள் சுவிஸ் செய்தித்தாள் ஒன்றில் வெளிவந்துள்ளன.

கிங்க் தான் எழுதிய கடிதத்தில் தனக்கு இழப்பீடு கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார். டைட்டானிக்கை அனுப்பிய ஒயிட் ஸ்டார் லைன் நிறுவனம் பயணச்சுமை காப்பீடு வழங்குமா என்றும் இறந்து போன தன் சகோதர சகோதரியின் சட்ட வாரிச்சுரிமை பற்றியும் கேட்டு எழுதியிருக்கிறார்.

இவருடைய கேள்விகளுக்குப் பதில் கிடைத்ததா இல்லையா என்பது தெரியவில்லை மேலும் இது போன்று எத்தனைக் கடிதங்கள் கண்டிறியப்படாமல் இருக்கின்றன என்பதும் கேள்விக் குறியாக உள்ளன.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls