Thursday, March 15, 2012

மெக்சிக்கோவில் வாழும் இரத்தக் காட்டேறி!!

மெக்சிக்கோ குடலஜரா நகரத்தில் வசிக்கும் மரியா ஜோஸ் கிறிஸ்சினா 36 வயது. குடலஜரா நகரத்தில் சொந்தமாக ஒரு கடையை நடாத்தி வருகின்றார்.
நான்கு குழந்தைகளின் தாயான இவர் முன்னய கணவனால் நிராகரிக்கப்பட்ட நிலையில் உடல் முழுவதும் பச்சைகுத்தி துளையிட்டு வளையங்கள் மற்றும் பற்களை மாற்றி தன்னை ஒரு இரத்தம் குடிய்கும் பேய் போல் அலங்கரித்துக்கொள்ளும் இவர் தன்னை ஒரு இரத்தம் குடிக்கும் பேய்களின் மனைவி யெனவே கூறியும் கொள்கிறார்.

ஆம்புலன்ஸ் எப்படி வந்திச்சு ஏன் வந்திச்சு......?

உயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ் இன்று (ஜன.8) முதலுதவி சிகிச்சை உயிர் காக்கும் மருந்துகள் என “மினி மொபைல் ஆஸ்பத்திரி’யாக வலம் வருகிறது.
இந்த ஆம்புலன்ஸ் உருவான வரலாறு 17ம் நூற்றாண்டில் துவங்குகிறது. அந்த காலக்கட்டத்தில் காயம்பட்ட போர் வீரர்களை சிகிச்சை மையத்திற்கு எடுத்துச் செல்ல இரு மூங்கில் கம்புகளில் இணைக்கப்பட்ட துணியை (ஸ்டிரெச்சர்) பயன்படுத்தினர். இதுதான் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உருவாகுவதற்கான கரு எனலாம். பின் குதிரை வண்டி மோட்டார் வாகன வண்டி ஆம்புலன்ஸ் என பல பரிமாணங்களை பெற்றன. கி.பி. 18ம் நூற்றாண்டில் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது.

கடாபியிடம் 325 கோடி ரூபா வாங்கிய சார்கோசி!

கடந்த 2007ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது முன்னாள் லிபிய அதிபர் கடாபியிடம் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்கோசி ரூ. 325 கோடி பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லிபியாவில் கடாபியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்திற்கு நேட்டோ படையில் இருந்த பிரான்ஸ் உதவி செய்தது. இதையடுத்து கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் ஒரு திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்தார்.
பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்கோசி கடந்த 2007ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின்போது தனது தந்தையிடம் ரூ.325 கோடி பணம் பெற்றதாக பரபரப்பு புகார் தெரிவித்தார். மேலும் தங்களுக்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டத்தை ஆதரிக்கும் சார்கோசி உடனே அந்த பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஈராக்கில் ஜீன்ஸ் டி சர்ட் அணிந்த 14 இளைஞர்கள் கல்லால் அடித்துக்கொலை!

ஈராக்கில் மேற்கத்திய முறைப்படி இறுக்கமான ஜீன்ஸ் டி சர்ட் அணிந்து நீளமான முடி வைத்திருந்த 14 இளைஞர்களை ஷியா தீவிரவாதிகள் கல்லால் அடித்துக் கொன்றுள்ளனர். ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியதில் இருந்து அங்கு தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். அவர்கள் தங்கள் இஷ்டம் போல் பொதுமக்களை தாக்கியும் கொன்றும் வருகின்றனர்.
இந்நிலையில் எமோ என்ற மேற்கத்திய ஸ்டைல் ஈராக் இளைஞர்களை கவர்ந்து வருகிறது. எமோ என்பது அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட ஒருவகை இசை. அந்த இசை ரசிகர்கள் இறுக்கமான ஜீன்ஸ் லோகோவுள்ள டி சர்ட் அணிவதோடு நீளமான தலைமுடி அல்லது முள் மாதிரியான முடி வைத்திருப்பார்கள்.

Wednesday, March 14, 2012

201 பேரை படுகொலை செய்த படைவீரருக்கு 6060 ஆண்டுகள் சிறை!

கவுதமாலா நாட்டில் 1980களில் ஆயுதபுரட்சி ஏற்பட்டதால் அதை கட்டுப்படுத்த அந் தநாட்டுப் படைகள் குவிக்கப்பட்டன. 1982 டிசம்பரில் லாஸ் தோஸ் எரஸ் என்ற கிராமத்தில் ஆயுதங்களை தேடி 20 வீரர்கள் நுழைந்தனர். கண்ணில் பட்ட ஆண்களை சுட்டுத் தள்ளியும் சுத்தியலால் அடித்தும் கொன்றனர். பிணங்களை 50 அடி ஆழ கிணற்றில் தள்ளினர். பிறந்த குழந்தைகள் முதியோரையும் கொன்று கிணற்றில் வீசினர். பெண்களை கொல்வதற்கு முன் பலாத்காரம் செய்தனர். 201 பேரை கொன்று குவித்ததாக ராணுவம் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதுதொடர்பான வழக்கு கவுதமாலா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றத்தில் தொடர்புடைய கௌதமாலா இராணுவத்தின் சிறப்புப்படைப் படைப்பிரிவைச் சேர்ந்த பெட்ரோ பிரமென்டல் ரியோஸ் (இப்போது வயது 54) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்சில் வசித்து வந்தார்.

Sri Lanka's point unlikely to find takers in U.N.

R. K. Radhakrishnan
Sri Lanka's argument at the United Nations Human Rights Council is unlikely to win it many friends since it insists that for the purpose of fixing accountability, the clock started ticking only on December 16, 2011 - the day a committee that probed the root causes of the ethnic problem submitted its report to Parliament.
Sri Lankan forces had overwhelmed the Tamil Tigers on May 19, 2009.
Sri Lanka says following the Lessons Learnt and Reconciliation Committee's report, three committees were set up to oversee the implementation of the recommendations - the subcommittee, the Cabinet committee, and a court of inquiry by the Army. Hence, it questions the need for international pressure .
Explaining the viewpoint at the Lakshman Kadirgamar Institute for International Relations and Strategic Studies here, Foreign Minister and head of the delegation to the UNHRC's Geneva meet G.L. Peiris said hardly a month passed after the LLRC report was submitted before Sri Lanka had begun feeling the pressure from the Human Rights Council.

Channel 4 claims Sri Lanka footage "authentic"

Footage is part of documentary Sri Lanka's Killing Fields: War Crimes Unpunished Britain's Channel 4 on Tuesday insisted in comments to The Hindu that its footage purporting to show that the slain LTTE chief Velupillai Prabakaran's 12-year-old unarmed son Balachandran Prabakaran was "brutally executed" by Sri Lankan forces in May 2009 even as he was preparing to surrender was "authentic".
The footage is part of a documentary, Sri Lanka's Killing Fields: War Crimes Unpunished, to be screened on Wednesday.
The Sri Lankan government has questioned its authenticity, calling it "concocted", and protested to Channel 4.
However, Callum McCrae, director of the documentary, told The Hindu that the footage of Balachandran's bullet-ridden body lying besides his "slaughtered bodyguards" had been examined by a "respected forensic pathologist", Professor Derrick Pounder. Channel 4, he said, had also obtained "a series of high-resolution stills of the scene" which had also been examined by Professor Pounder.

லிப்ஸ்டிக் உருவான வரலாறு லிப்ஸ்டிக் பிறந்த கதை; உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தியவர்கள்

அனைவருக்கும் வணக்கம் மேலை நாட்டு நாகரீகம் என்று நம்மில் பலர் நம்பிக்  கொண்டிருக்கும் லிப்ஸ்டிக்கை கண்டு பிடித்தவர்களும் உலகிலேயே முதன் முதலில் தயாரித்து உபயோகித் தவர்களும் இந்தியர்கள் தான் என்று கூறினால் நம்புவீர்களா நண்பர்களே ஆம் உண்மைதான் பஞ்சாபிய மக்கள் தான் உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை தயாரித்து பயன் படுத்தியவர்கள் ஆவார். ஆச்சர்யமாக உள்ளதா வாருங்கள் அது பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.  மெசபடோமியா எகிப்து மற்றும் சீனா ஆகிய புகழ் பெற்ற நாகரீகங்களை போல சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய துணைக் கண்டத்தில் மிகவும் பிரசித்திபெற்று விளங்கிய நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் (கி.மு.3300 – கி.மு.1300) ஆகும். சிந்து சமவெளி பிரதேசம் என்பது இன்றைய பாகிஸ்தானின் பெரும்பான்மையான பகுதிகளையும் இந்தியாவின் குஜராத் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியது.

Tuesday, March 13, 2012

சிரியாவில் 47 பெண்கள் மற்றும் குழுந்தைகள் கழுத்து அறுத்துப் படுகொலை!

உள்நாட்டுப் போர் நடந்துவரும் சிரியாவில் 47 பெண்கள் மற்றும் குழுந்தைகள் மர்மமான முறையில் கழுத்து அறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 11 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. அதில் இதுவரை 8 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். எனவே உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அரபு நாடுகளின் கூட்டமைப்பு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் அரபுநாடுகள் கூட்டமைப்பு மற்றும் ஐ.நா. சபையின் தூதரான கோபி அன்னன் டமாஸ்கஸ் சென்றார். அரசுடனும் போராடும் மக்கள் பிரதிநிதிகளுடனும் சமரச பேச்சு நடத்தினார். ஆனால் அது தோல்வி அடைந்தது. இதற்கிடையே போராட்டம் கடுமையாக நடைபெற்று வரும் ஹோம்ஸ் நகரில் ராணுவத்தின் தாக்குதல் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் தீவிரம்!

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை நோக்கிய இஸ்ரேலின் தாக்குதல் உக்கிர மடைந்துள்ளது. காஸாவை நோக்கி முன்னேற தரைவழியிலான ராணுவ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பாலஸ்தீனியர்களின் காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலுக்குள்ளும் இஸ்ரேல் எல்லையிலிருந்து காஸா நோக்கியும் சராமரியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இருதரப்பு நடவடிக்கையால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. தற்போதைய நிலைமைகள் குறித்து ராணுவ வானொலியில் பேசிய இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் யோவ் மோர்டெக்சை எந்த ஒரு நிலைமையையும் எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராகவே உள்ளது. தரைவழியிலான ராணுவ நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றார்.

உப்பினால் ஓவியம் வரைந்து கின்னஸ் முயற்சி

கின்னஸ் சாதனைக்காக கல்லூரி மாணவர்கள் 4 மணி நேரத்தில் 600 ச.மீற்றரில் ஓவியம் வரைந்துள்ளனர். 7 ஆயிரத்து 50 கிலோ உப்பு மற்றும் 405 கிலோ கலர் பவுடரை பயன்படுத்தி ஓவியம் வரையப்பட்டுள்ளது.
இந்தியாவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த இடையர் நத்தம் ஏ.ஆர்.ஜே கல்வி நிறுவனங்களின் சார்பில் நேற்று முதல் வரும் 15ம் திகதி வரை 13 வகையான கின்னஸ் சாதனைகள் செய்யும் முயற்சியை மேற்கொண்டுவருகிறது.

20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரை: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

20 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ வைக்கும் மாத்திரையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களின் ஆயுளை நீட்டிக்க வகை செய்யும் ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.   பாலூட்டி இனங்களில் உள்ள ‘சிர்ட்6′ (எஸ்.ஐ.ஆர்.டி.6) என்ற மரபணு நோய்களை உருவாக்காமல் நீண்ட நாட்கள் வாழ வைக்க கூடியது என கண்டுபிடித்துள்ளனர். எனவே அந்த மரபணுவை தூண்டி செயல்பட வைக்க கூடிய புதிய மாத்திரையை கண்டு பிடித்து அதை எலிக்கு செலுத்தினர்.   அதை தொடர்ந்து அந்த எலி 18 சதவீதம் அதிக நாட்கள் உயிர்வாழ்ந்தது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls