Saturday, April 14, 2012

காகிதப் பேப்பர் எப்படி பிறந்தது தெரியுமா? தெரிந்துகொள்ள வாருங்கள்

எழுத்துக்கள் எப்படி தோன்றியிருக்கும் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா நண்பர்களே. மனிதர்களின் நினைவாற்றலின் வலிமை ஒரு குறிப்பிட்ட எல்லையை கொண்டது அதாவது மனிதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அனைத்து விசயங்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அந்த நினைவாற்றலின் எல்லையை தாண்டியும் சில தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்ட போது தோன்றியது தான் எழுத்து. அன்றைய அரசாங்கத்தின் நிர்வாகத்துறையில் உள்ள வரவு செலவு கணக்குகளும் வணிகப்பரிமாற்றத்தின் பரிவர்த்தனைகளும் மனித நினைவாற்றலின் எல்லையை தாண்டி வளர்ந்தபோது அந்த கணக்குளை குறித்து வைத்துக்கொள்ள தோன்றியது தான் எழுத்து.
அன்றைய ஆதிமனிதன் முதன் முதலில் எழுத்துக்களை பதித்து வைத்தது கற்களின் மீதுதான் எழுதப்பட்ட கற்களை தேவை ஏற்பட்டபோது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிக்கல்களை தொடர்ந்து விலங்குகளின் எலும்புகளிலும் மூங்கில் தடிகளின் மீதும் மனிதன் எழுதத் துவங்கினான்.

நாளடைவில் இதிலும் ஏற்பட்ட porlability குறைபாடு அவனை களிமண் தகடுகளின் மீது எழுதச் செய்தது. களிமண் தகடுகளை கையாள்வது சுலபமாக இருந்தாலும் அவற்றை வைத்து பராமரிக்க அதிக இடம் தேவைப்பட்டதால் இதுவும் தோல்வியுற்றது.

இன்று நாம் எழுதுவதற்க்காக பயன்படுத்திக் கொண்டிருக்கும் பேப்பர்களின் தோற்றத்தையொத்த பொருளில் உலகில் முதன் முதலில் எழுதியவர்கள் எகிப்தியர்கள் தான். கி.மு. ஏழாம் நூற்றாண்டில் எகிப்தின் நைல் நதியின் டெல்டா பகுதியில் விளைந்த இரெண்டு முதல் மூன்று மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு தாவரம் பாப்பிரஸ் cyperus papyrus ஆகும். இந்த பாப்பிரஸ் தாவரத்தின் தண்டுபகுதியை நுண்ணிய துண்டுகளாக வெட்டி அதனுடன் நீர் மற்றும் சில தாதுக்களை சேர்த்து பதப்படுத்தி பின்பு அதனை சூரிய ஒளியில நன்றாக உலரவைத்து பின்பு அதனை எழுதுவதற்கென்று பயன்படுத்தி வந்தனர் அன்றைய எகிப்தியர்கள். இதுதான் மனிதன் முதன் முதலில் பேப்பெரில் எழுதிய அனுபவம் ஆகும். மேலும் பேப்பர் (paper) என்ற சொல்லும் பாப்பிரஸ் (Pயிலசரள) என்ற சொல்லில் இருந்து பிறந்ததே ஆகும்.

எகிப்தியர்கள் பாப்பிரஸ் தாள்களில் எழுதிவந்த அதே கால கட்டத்தில் சீனர்கள் விலங்குகளின் எலும்புகளிலும் மூங்கில் தடிகளிலும் தான் எழுதிவந்திருக்கிறார்கள். பண்டைய சீனாவில் கி.மு.206-ஆம் ஆண்டு முதல் கி.பி.220-ஆம் ஆண்டுவரை சங்கனை changan தலைநகராக கொண்டு ஆட்சி செய்துவந்த ஹான் வம்சத்தினர் (han  dynasty]போது இந்நகரம் லேய்யங்(leiyang] பெயரில் அழைக்கப்படுகிறது) நீதிமன்ற ஆவன காப்பாளராக வேலை பார்த்து வந்தவர் கைய் லுன் cai lun . அவரது காலத்தில் நீதிமன்ற குறிப்புகள் அனைத்தும் விலங்குகளின் எலும்புகளிலும் மூங்கில் தடிகளிலும் தான் எழுதப்பட்டு வந்தது. இவற்றை ஒரு இடத்திலிருந்து மற்றொறு இடத்திற்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிரமத்தை தொடர்ந்து கைய் லுன் மாற்று வழி பற்றி ஆராய ஆரம்பித்தார்.

கைய் லுன் கி.பி. 105-ல் மரநார்கள் தாவரத்தின் இலைகள் மீன்பிடி வலைகள் மற்றும் துணி கழிவுகள் ஆகியவற்றை கொண்டு பேப்பேர் தயாரிக்கும் முறையை கண்டறிந்தார். கைய் லுனின் இந்த கண்டுபிடிப்பை பாராட்டி அப்போதைய அரசாங்கம் அவருக்கு பதவியுயர்வும் பொற்கிழியும் வழங்கி கெளரவித்தது. இம்முறையில் கண்டறியப்பட்ட காகிதம் சற்று தடிமனாக இருந்தது அதாவது சற்றேறக்குறைய 5mm வரை தடிமனாக இருந்தது. சிறிது காலத்திற்கு பிறகு கைய் லுன் தற்செயலாக ஒரு காட்சியை காண நேரிட்டது அது என்னவென்றால் ஒரு வகை குளவி [wasp) மரத்தை துளையிட்டு அதம் மூலம் கிடைத்த சிறு மரத்துகள்களை கொண்டு தனது கூட்டை வலிமையாக கட்டிக்கொள்வதை கண்டார் அப்போதுதான் மரத்தை கூழ்மமாக அரைத்தால் பேப்பரை நாம் விரும்பும் வடிவில் மற்றும் அளவில் தயாரித்துக்கொள்ளலாம் என்பதை அறிந்துகொண்டார். அதனை தொடர்ந்து மரத்தை அரைக்கும் ஆலை நிறுவப்பட்டு பேப்பர் தயாரிக்கப்பட்டது. கி.பி. 105-ல் பேப்பர் தயாரிக்கும் முறை கண்டறியப்பட்டுவிட்டாலும் உலகிற்கு பகிரங்கமாக பேப்பர் தயாரிக்கும் தொழில்நுட்பமுறை அறிவிக்கபடவில்லை. சீனர்கள் ஏறக்குறைய அத்தொழில்நுட்பத்தை 500 ஆண்டுகளுக்கும் மேலாக ரகசியமாகவே வைத்து பாதுகாத்துள்ளனர்.

கி.பி.751-ல் சீனர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே தற்போதைய உஸ்பெகிஸ்தானில் டாலஸ் (battle of talas)  என்ற போர் ஏற்பட்டது. கிர்கிஸ்தானுக்காக நிகழ்ந்த இந்த டாலஸ் போரில் (battle of talas) சீனப்படைகள் அரேபிய படைகளிடம் தோல்வியை தழுவியது அப்போது அரேபியர்களால் போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்ட இரு சீனவீரர்களிடம் இருந்து பேப்பர் தாயாரிக்கும் தொழில்நுட்பத்தை அரேபியர்கள் அறிந்துகொண்டனர். அத்தொழில்நுட்பத்தை கொண்டு உஸ்பெகிஸ்தானிலுள்ள சமர்கண்ட் (samarkand) என்ற நகரில் அதிகாரப்பூர்வமான முதல் பேப்பர் தயாரிக்கும் ஆலையை அரேபியர்கள் நிறுவினார்கள் அதனை தொடர்ந்து ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் ஒரு ஆலை நிறுவப்பட்டது. பாக்தாத்திலிருந்துதான் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் இத்தாலி ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பேப்பர் தயாரிக்கும் தொழில்நுட்பம் பரவியது.

பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் பேப்பர் கடும் நிறம் (கால்நடைகளின் சான நிறம்) கொண்டதாகத்தான் இருந்தது 1844-ஆம் ஆண்டு சார்லஸ் (charles fanerty) மற்றும் கெல்லர் (gofflob killer வெள்ளை நிற பேப்பரை உருவாக்கும் தொழில் நுட்பத்தினை கண்டறிந்தார்கள். அன்றுமுதல் வெள்ளை நிற காகிதம் தயாரிக்கப்பட்டு வருகிறது. நாம் வீணடிக்கும் ஒவ்வொரு பேப்பரிலும் ஒரு மரத்தின் உயிர் வீணடிக்க படுகிறது என்பதை மனதில் கொண்டு பேப்பர்களை மிக சிக்கனமான உபயோகித்து சுற்றுசூழலுக்கு நம்மால ஆன நன்மையை செய்திடுவோம் என்று கூறிக்கொண்டு இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

தென்சீனக்கடலில் அமெரிக்கா கூட்டுப்பயிற்சி!

சீனா சொந்தம் கொண்டாடும் தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ராணுவத்தினர் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரு நாட்டு ராணுவத்தினரும் ஆண்டுதோறும் இந்த பயிற்சி மேற்கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு இந்த பயிற்சி தென் சீன கடல் பகுதியில் நடைபெறுவதால் முக்கியத்துவம் பெறுகிறது.
அமெரிக்கா தரப்பில் 4500 வீரர்களும் பிலிப்பைன்ஸ் தரப்பில் 2300 வீரர்களும் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டின் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில் எந்த நாட்டுக்கு எதிராகவும் பயிற்சியில் ஈடுபடவில்லை. கடல்பகுதியில் பாதுகாப்பு மற்றும் இரு நாட்டு நலன் கருதி ராணுவ பயிற்சியில் ஈடபட்டுள்ளதாக கூறினார்.

எதிர்க்கட்சி வெற்றி பெற்றால் கிரீசின் நிலைமையே பிரான்சுக்கு ஏற்படும்: சர்கோசி

பிரான்சில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் மிக தீவிரமாக நடந்து வருகிறது. இத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கும் எதிர் வேட்பாளர் ஹோலாண்டேவுக்கும் போட்டி கடுமையாக இருக்கும்.
டுர்2 என்ற நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு ஹோலாண்டேக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்ததும் சர்கோசி அதற்குப் பதிலடி தரும் வகையில் அவர் வெற்றி பெற்றால் முதலீட்டாளர் பிரான்சில் தொழில் நடத்த அஞ்சுவர் பின்பு கிரீஸ் ஸ்பெயின் நாடுகளுக்கு ஏற்பட்ட நிலைமையே பிரான்சுக்கும் ஏற்படும் என்றார்.

ஹோலாண்டே இடதுசாரி இயக்க ஆதரவாளர் என்பதால் பிரான்ஸ் நாட்டின் அரசாங்கம் முழுக்க முழுக்க இடதுசாரி ஆதரவுடையதாக உருமாறிவிடும் என்றார்.

ஹோலாண்டேக்கு எதிரான இந்த அச்சுறுத்தல்களோடு சர்கோசி கடந்த வாரம் தன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

ஹோலாண்டே தான் அறிமுகப்படுத்தும் “வரியும் செலவும்” என்ற திட்டத்தால் பிரான்சில் வரவும் செலவும் சமமாக இருக்கும் என்றார். ஆனால் செலவுக்கு ஏற்ப வரி வசூலிப்பது என்ற ஹோலாண்டேயின் திட்டம் பலிக்காது என்று மறுத்துரைத்த சர்கோசி இத்திட்டத்தால் மக்களின் நம்பிக்கை குறைந்து போய் விடும் என்று தெரிவித்தா

ஜெருசலேம் கல்லறையில் கிடைத்தது இயேசுவின் எலும்புகளா? நிபுணர்கள் ஆய்வு

முதலாம் நூற்றாண்டு காலத்தைய இயேசு கிறிஸ்துவின் கல்லறை ஜெருசலேமில் இருப்பதாக கூறப்பட்டது. கடந்த 1980-ம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டு சர்ச்சையில் உள்ளது.  இந்த கல்லறையை தோண்டி ஆய்வு மேற்கொள்ள வடக்கு கலிபோர்னியாவின் அகழ்வாராய்ச்சி நிபுணர் ஜேம்ஸ் தபோர் டாக்குமென்ட்ரி சினிமா தயாரிப்பாளர் ஜிம்சாஜேகபோவிக் குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதற்குயூதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து கோர்ட்டில் வழக்கு நடந்தது. முடிவில் இயேசுவின் கல்லறையை தோண்டாமல் காமிராவுடன் கூடிய ரோபோவை கல்லறைக்குள் இறக்கி ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி துளைகள் போடப்பட்டு அதன் வழியாக ரோபோக்கள் பூமிக்குள் இறக்கப்பட்டன. அவை போட்டோக்கள் எடுத்து அனுப்பியுள்ளன.   அதில் எலும்புகள் கல்வெட்டுகள் போன்றவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை இயேசுவின் எலும்புதானா? என்று ஆராய்ச்சி நடந்து வருகிறது

பிரேசிலில் மனித மாமிசம் சாப்பிடும் மனிதர்கள் நடமாட்டம்

பிரேசிலில் உள்ள கரான்கன்ஸ் நகரில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 2 பெண்கள் திடீரென மாயமாகி விட்டனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. எனவே போலீசார் அவர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் கரான்கன்ஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து அங்கு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு தோண்டி பார்த்தபோது மாயமான 2 பெண்களின் பிணங்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அங்கு குடியிருந்த ஒரு ஆண் மற்றும் 2 பெண்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அந்த பெண்களை கொலை செய்த நபர்கள் அவர்களின் மாமிசத்தை சாப்பிட்டு விட்டு உடலின் மீதமிருந்த பாகத்தை புதைத்தது தெரிய வந்தது.

இந்த தகவலை கரான்சன்ஸ் போலீஸ் கமாண்டர் ஒலிவெரா தெரிவித்தார். பெர்னாம் புகோ நகரில் ஏற்கனவே 6 பெண்கள் மாயமாகி விட்டனர். அவர்களது கொலையிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட 3 பேரின் மீது கடத்தல் கொலை பிணத்தை மறைத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Thursday, April 12, 2012

வாழும் போதே சொர்க்கம் வேண்டுமா? மனம் விட்டு பாராட்டுங்கள்!

மனித மனமானது பாராட்டுக்களை எதிர்பார்க்கும். பணிபுரியும் இடமோ வீடோ எங்காவது சின்ன பாராட்டு கிடைத்தால் மனம் பூரித்துப் போகும். நம்முடைய செயலுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தாலே கூடுதல் உற்சாகத்தோடு பணியை செய்யத்தோன்றும். இல்லறத்திலும் இதுபோலத்தான் கணவனோ மனைவியோ ஒருவரை ஒருவர் பாரட்டினாலோ அவர்களின் செயல்களை அங்கீகரித்தாலே வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

குறை கூறாதீர்கள்

நாம் எல்லோருமே எப்போதும் மற்றவர்களது குறைகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். அதில்தான் எல்லோருக்கும் ஆர்வமும் அதிகம். ஆனால் காதலுக்கும் திருமணத்திற்கும் இது பொருந்தாது. ஒவ்வொரு பெண்ணும் தனது காதலனோ கணவனோ தான் செய்யும் சிறந்த செயல்களுக்கு தன்னைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்.

ஆனால் பெரும்பாலும் ஆண்களுக்கு பாராட்டும் மனநிலை இருப்பதில்லை. ஒரு பெண் தனது கணவனைப் பற்றி எவ்வளவு குறை பேசினாலும் அவர் ஒரு நல்ல காரியத்தை செய்துவிட்டு வரும்போது அது பலருக்கும் தெரிந்துவிடும் மனைவி மூலமாக. அவர்களது பாராட்டு குறை சொல்வதை விட 100 மடங்கு உயர்வாக இருக்கும். அதுபோல ஆண்களும் பாராட்டவும் மனம் விட்டு பேசவும் வேண்டும்.

நேர்மறையாக கவனியுங்கள்

உங்கள் வாழ்க்கைத்துணை செய்யும் நல்ல செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தி பாராட்டுங்கள். உங்கள் வாழ்க்கைத் தோட்டத்தில் மணம் மிக்க மலர்கள் மலர நீங்கள் ஊற்றும் உற்சாக தண்ணீர் அது. தினம் தினம் நீங்கள் கண்டறிந்து பாராட்டும் பட்சத்தில் உங்கள் மனைவி எந்த தவறான செயலும் செய்ய நினைக்கமாட்டார்.

அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்

திருமண வாழ்க்கையில் சிக்கலுக்கு காரணமே எதிர்பார்ப்புதான். தனக்கு ஏற்றார்போல தன் மனைவி மாறவேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் எதிர்பார்க்கின்றனர். இது தவறான செயல். உங்கள் மனைவி எப்படிப்பட்ட குணநலன்களுடன் இருக்கின்றனரோ அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அவருடைய செயலுக்கு அங்கீகாரம் அளியுங்கள். அப்புறம் பாருங்கள். அலைகடலென வரும் மனைவியின் அன்பில் மூழ்கிப்போவீர்கள்.

மிகச்சிறந்த பரிசு

பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்புமிக்க பரிசுப் பொருளை விட ஒரு அன்பான வார்த்தையும் பாராட்டும் பல்வேறு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். அதற்காக பெண்களின் அழகை மட்டும் பாராட்டிக் கொண்டே இருக்காதீர்கள். காதலன் தனது அழகை மட்டும் பாராட்டிக் கொண்டிருக்கும்பட்சத்தில் அவனிடம் பெண்கள் எச்சரிக்கையாகிவிடுவார்கள்.

திறமையை கண்டறியுங்கள்

அழகினைத் தவிரவும் பெண்களைப் பாராட்ட ஆயிரம் விஷயங்கள் உள்ளன. பாராட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் போதாது. தனது காதலியின்ஃமனைவியின் நற்குணங்களை அவர்களது திறமைகளை கண்டறிய வேண்டும். அப்போதுதான் அவற்றைப் பற்றி நீங்கள் பாராட்ட முடியும். மேலும் அவர்களது நண்பர்களிடமும் இவரைப் பற்றி ஓஹோ என்று புகழ்ந்து பாருங்கள். அவ்வளவுதான். உங்களுக்கு வாழும்போதே சொர்க்கம் தெரியும்.

உற்சாக டானிக்

பாராட்டுத்தான் உங்கள் மனைவிக்கு உற்சாகம் தரும் டானிக். அவர்கள் செய்யும் ஒரு செயலோ சமையலோ நன்றாக இல்லாத பட்சத்தில் நீங்கள் கூறும் குறைகளை விட 10 மடங்கு அதிகமாக ஒரு நல்ல செயலை செய்யும் போது பாராட்டிப் பாருங்கள்.இதை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி தழைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

Wednesday, April 11, 2012

இந்தோனேஷியாவில் உள்பட அனைத்து நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை வாபஸ்

இந்தோனேஷியாவில் இன்று மதியம் சுமத்ரா தீவை மையம் கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானது. இதையடுத்து இந்தோனேஷியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. 
இந்நிலையில் ஹவாய் தீவில் அமைந்துள்ள பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் இந்தோனேஷியால் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கூறியதாவது 
இந்தோனேஷியாவில் இன்று மதியம் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களும் சுனாமியை ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்கங்கள் இல்லை. அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கக்கூடிய நிலநடுக்கங்களே. 

இந்நிலநடுக்கத்தால் இந்தோனேஷியாவில் உள்ள கடற்கரை பகுதிகளில் பாதிப்பு இருக்கும். தற்போது அரை மணி நேரத்திற்கு முன்னதாக ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏதேனும் சுனாமி ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். 

இந்த நிலநடுக்கத்தால் சுமார் அரை மீட்டரிலிருந்து 1 மீட்டர் அளவுக்கே சுனாமி அலைகள் எழும்பும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட இந்திய கடற்கரையோர பகுதிகளில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்று முதலில் தெரிவித்திருந்தது.

இருப்பினும் சர்வதேச கடல் பகுதிகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய கடல் பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் எனவும் அம்மையம் தெரிவித்துள்ளது. 

இந்தோனேஷியாவில் முதல் நிலநடுக்கத்தை அடுத்து தொடர்ந்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது சுமார் 6 மீட்டர் அளவில் அலைகள் எழும்பும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இதனால் இந்திய கடற்கரையோரப் பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தோனேஷியாவில் சிமியூலு தீவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 4 நிலநடுக்கங்களால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அங்கு 6 மீட்டர் அளவுக்கு சுனாமி அலைகள் தாக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  மேலும் அப்பகுதியில் முற்றிலுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி:

பசுபிக் சுனாமி மையம் அறிவித்திருந்த சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட கடற்பகுதியை கண்காணித்து வந்ததில் ஆபத்தை விளைவிக்கும் சுனாமி அலைகள் ஏற்படவில்லை. இதனால் கண்காணிப்பு நிறுத்தப்படுகிறது என்றும் 28 நாடுகளுக்குவிடப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதாக அம்மையம் தெரிவித்துள்ளது.

உலகின் மிகச்சிறிய கோழி முட்டை: கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது

இங்கிலாந்தின் டெர்பிஷயர் பகுதியில் உள்ள பேக்வெல் என்ற இடத்தில் ஹாரி இவான்ஸ்(வயது 58) என்பவர் கோழி பண்ணை வைத்துள்ளார்.
அவரது பண்ணையில் உள்ள ஆர்பிங்டான் என்ற வகையை சேர்ந்த கோழி மிகச்சிறிய முட்டை இட்டுள்ளது.
உலகிலேயே இவ்வளவு சின்னதாக கோழி முட்டை போட்டது இதுதான் முதல் முறை என்பதால் கின்னஸ் சாதனையில் இடம் பெற உள்ளது.
இதுபற்றி இவான்ஸ் கூறுகையில் ஒருநாள் காலை வழக்கம் போல முட்டைகளை சேகரிக்க பண்ணைக்கு சென்றேன். என்னை பார்த்தவுடன் இந்த கோழி நகர்ந்தது. அங்கு மிகமிக சிறிய முட்டை ஒன்று இருந்தது.

வேறு பறவையின் முட்டையாக இருக்கலாம் என்று நினைத்தேன். கோழி முட்டைதான் என்பதை உறுதி செய்த பிறகு கின்னஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்தேன். இதுவரை கின்னஸ் சாதனை பட்டியலில் கோழி முட்டை இடம்பெற்றதில்லை என்றார்கள்.

இந்த முட்டை பற்றிய விவரத்தை சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை என்றும் கூறினார்கள். என் கோழியின் சாதனை எப்படியாவது கின்னஸில் இடம்பெற்றுவிட வேண்டும் என விரும்பினேன். ஒருவழியாக ஒப்புக்கொண்டார்கள்.

முட்டையை மிக பாதுகாப்பாக பிரிட்ஜில் வைத்து பராமரித்து வருகிறேன். கோழிக்கு ஒன்றரை வயது ஆகிறது. இதுவரை வழக்கமான சைஸில்தான் முட்டை போட்டது. என்ன காரணத்தாலோ சிறிதாக போட்டிருக்கிறது என்றார்.

முட்டை லேசான பழுப்பு நிறத்தில் இருக்கிறது. பொதுவாக முட்டைகள் 5.7 செமீ நீளம் 4.4 செமீ சுற்றளவு 57 கிராம் எடையுடன் இருக்கும். இது 2.5 செமீ நீளம் 2 செமீ சுற்றளவு 7.3 கிராம் எடைதான் இருக்கிறது என்று கின்னஸ் அதிகாரிகள் கூறினர்.




Tuesday, April 10, 2012

டைட்டானிக் கப்பல் கவிழ்ந்து இன்றுடன் 100 ஆண்டுகள்!

உலகை உருக்கிய வரலாற்றுச் சம்பவங்களில் முக்கியமானதாக டைட்டானிக் கப்பல் கவிழ்ந்ததும் கருதப்படுகிறது. 1912ம் ஆண்டு ஏப். 10ம் தேதி தனது முதலும் கடைசியுமான பயணத்தை துவக்கிய இந்த கப்பலை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் நூறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டைட்டானிக் வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள ஹார்லாண்ட் மற்றும் ஊல்ப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
உலகின் மிகப்பெரிய முதல் நீராவி ஆடம்பர கப்பல் இது. 1909 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இக்கப்பலின் கட்டுமானப் பணிகள் நடந்தன. 882 அடி நீளம் 175 அடி உயரம் 46328 டன் எடை 9 தளங்களையும் கொண்டது.

435 பயணிகள் 892 பணியாட்கள் தங்கலாம். ஆபத்து காலத்தில் உதவும் வகையில் 20 லைப் படகுகள் இருந்தன. இவற்றின் உதவியுடன் 1178 பேர் உயிர் பிழைக்கலாம்.

1912இ ஏப்.12ல் இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து நியூயார்க்கை நோக்கி கேப்டன் எட்வர்டு ஸ்மித் தலைமையில் 2224 பயணிகளுடன் தன் பயணத்தை துவக்கிய டைட்டானிக் கப்பல் ஏப்.14ம் தேதி நள்ளிரவு 11.40 மணிக்கு அட்லாண்டிக் கடல் பனிப்பாறையின் மீது மோதியது. மீட்புப் படையினர் வருவதற்குள் 2 மணி 40 நிமிடங்களில் முற்றிலுமாக மூழ்கியது.

கடலில் இருந்த திசை காட்டும் கருவி சரியாக செயல்படாததே விபத்திற்கு காரணம் என கப்பலில் பயணம் செய்த கேப்டனின் பேத்தி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதில் பயணம் செய்த 1514 பேர் இறந்தனர்.மற்றவர்கள் லைப் படகுகள் உதவியுடன் தப்பித்தனர். கடலில் விழுந்தவர்கள் கடும் குளிர் (-2 டிகிரி செல்சியஸ்) காரணமாக உறைந்து இறந்தனர்.

விபத்திற்குள்ளான கப்பலின் பாகங்கள் 12000 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்தன. 1985 செப்.1ல் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பாலர்டு பிரான்சை சேர்ந்த ஜீன் லூயிஸ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வால் கப்பலின் உதிரிபாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பாகங்களை எடுத்த போட்டோ ஒன்று மட்டுமே பல கோடிக்கு விற்பனையானது.

1997ம் ஆண்டு இச்சம்பவத்தை அடிப்படையாகவும் காதலை மையமாகவும் கொண்டு ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் காமரூன் டைட்டானிக் என்ற படத்தை தயாரித்தார். கப்பலையும் விபத்தையும் நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வை இந்த படம் ஏற்படுத்தியது. இப்படம் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் 11 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. தற்போது கப்பலின் நூறாவது ஆண்டை கொண்டாடும் வகையில் இந்த படம் மீண்டும் 3டி தொழில்நுட்பத்தில் மாற்றி அமைக்கப்பட்டு மீண்டும் வசூல் செய்கிறது.

டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தில் அஞ்சலி செலுத்தும் நோக்கில் தி பால்மோரல் என்ற கப்பல் நேற்று சவுத்தாம்டனிலிருந்து புறப்பட்டு டைட்டானிக் கப்பல் சென்ற அதே பாதையிலே பயணித்து ஏப்ரல் 15ம் தேதி விபத்து நடந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளது.

Monday, April 9, 2012

பனிப்பாறையில் புதைந்த ஒருவரைக் கூட மீட்க முடியாமல் பாகிஸ்தான் இராணுவம் திணறல்!

சியாசின் பகுதியில் பனிப் பாறை சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்திய- பாகிஸ்தான் எல்லையில் உள்ள சியாசின் மலைப் பகுதியில் நேற்று முன்தினம் பனிச்சரிவு ஏற்பட்டதில் ஜியாரி என்ற இடத்தில் முகாமிட்டிருந்த பாகிஸ்தானிய வீரர்கள் 124 பேர் உள்ளிட்ட 135 பேர் பலியாயினர். 19 ஆயிரம் அடி உயரத்தில் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு போதிய வெளிச்சம் இல்லாததால் மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.


பனிப்பாறையில் சிக்கியுள்ள சடலங்களை மீட்க மோப்பநாய்களும் இயந்திரங்களும் நேற்று கொண்டு வரப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத் தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானி விபத்து நடந்த இடத்தை நேற்று பார்வையிட்டார். பனிப்பாறை சரிவு ஏற்பட்ட இடத்தில் ஒரு கி.மீ. நீளத்துக்கு 80 அடி உயரத்துக்கு பனித் துகள்கள் கொட்டிக் கிடக்கின்றன.

இதன் அடியில் சிக்குண்ட சடலங்களை மீட்க ராவல்பிண்டியில் இருந்து நவீன இயந்திரங்கள் நேற்று கொண்டு வரப்பட்டுள்ளன. பனிப்பாறையில் சிக்கி யாராவது உயிரோடு இருந்தால் அவர்களை உடனடியாக மீட்க ஹெலிகாப்டர்களும் கூடுதல் ராணுவ வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் பனிப் பொழிவு தொடர்வதால் மீட்புப் பணியில் தொய்வு காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பனி பாறையில் சிக்கியுள்ளவர்களை மீட்க தேவையான மனிதாபிமான உதவிகளை செய்ய தாயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன்சிங் டில்லி வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம் தெரிவித்துள்ளார். தேவைப்படும் பட்சத்தில் இந்தியாவின் உதவியை ஏற்பதாக சர்தாரி கூறியுள்ளார்.

Sunday, April 8, 2012

இங்கிலாந்தில் சிகரெட்டை விளம்பரப்படுத்த தடை


இங்கிலாந்தில் உள்ள கடைகளில் சிகரெட் பாக்கெட்டுகளை விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிகரெட் பாக்கெட்டுகளை அதிகளவு விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் வரிசையாக அடுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இவ்வாறு விளம்பரப்படுத்துவதன் மூலம் அவை இளைஞர்களை சுண்டி இழுத்து புகைக்கும் ஆவலை தூண்டுகிறது.
எனவே இளைஞர்கள் அவற்றை வாங்கி புகைப்பதால் புற்றுநோய் காசநோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு ஆளாகுகின்றனர்.



இதை தடுக்க கடைகளில் சிகரெட் பாக்கெட்டுகளை அடுக்கி வைத்து விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நேற்று முதல் அமுலுக்கு வந்தது.

அரசின் இந்த நடவடிக்கையை பலர் வரவேற்றுள்ள போதிலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இது தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கொலையாளியை பிடிக்க ஆவியின் உதவியை நாடும் பொலிசார்

தமிழக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த மாதம் 29ம் திகதி கடத்திக் கொலை செய்யப்பட்டார்.
அவரை கொலை செய்த கூலிப்படையையும் அவர்களை ஏவிய முக்கிய பிரமுகர்களையும் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
ராமஜெயத்தின் தொழில் எதிரிகள் பணம் கொடுக்கல் வாங்கலில் மோதியவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம் என பல கோணங்களில் விசாரணை நடந்தது. 500-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியும் சரியான துப்பு கிடைக்கவில்லை.


இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு காதல் ஜோடி திருமண விவகாரத்தில் ராமஜெயம் தலையிட்டதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த அந்த காதல் திருமண ஜோடி இருக்கும் இடம் பற்றி இதுவரை துப்பு துலங்கவில்லை. இதனால் தனிப்படை பொலிசார் சோர்ந்து போய் உள்ளனர்.

ராமஜெயத்தை கொலை செய்த கூலிப்படையை பிடித்து அதன் மூலம் பின்னணியில் உள்ளவர்களை மடக்கலாம் என்ற விசாரணையிலும் ஏமாற்றமே ஏற்பட்டு உள்ளது.

எனவே ராமஜெயத்தை கொன்ற கூலிப்படை கல்லணை வழியாக சென்றது என்பதால் அவர்கள் தஞ்சை நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்பட்டதால் அதன் அடிப்படையில் அந்த மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகள் யார்-யார்? வெளியில் நடமாடுகிறார்கள் என திருச்சி மத்திய சிறையில் இருந்து பட்டியல் பெற்று விசாரணை நடந்தது.

சிறையில் இருந்த ரவுடிகளிடமும் விசாரணை நடந்தது. ஆனால் அதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் தனிப்படை பொலிசார் ஆவி மூலம் ராமஜெயம் கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

திருச்சியில் புத்தூர் வயலூர் ரோடு பகுதியில் ஆவியை வரவழைத்து கொலை திருட்டில் ஈடுபடுபவர்களை அடையாளம் காட்டுபவர்களை தனிப்படை அணுகி உள்ளது.

ஆங்கில எழுத்துக்கள் யு முதல் ணு வரை மற்றும் 1 முதல் ஜீரோ வரை எண்களை தரையில் எழுதி ஒரு கவிழ்த்திய டம்ளரில் ஆட்காட்டி விரலை வைத்து ஆவியை வரவழைப்பார்கள்.

அப்போது இறந்தவரின் ஆவி ஆட்காட்டி விரல் வைத்து உள்ள டம்ளரை கொலையாளியின் ஆங்கில முதல் எழுத்து எது? என்பதை காட்டும் வகையில் அங்கு நகர்ந்து செல்லும். இதன் மூலம் குற்றவாளி பெயர் என்ன? அவர் எந்த திசையில் உள்ளார் என்பது தெரியவரும்.

கொலையானவர்களையோ அல்லது அவரது குடும்பத்தில் இதற்கு முன் இறந்தவர்களையோ மனதில் நினைத்து 5 நிமிடம் பூஜை செய்து ஆவியை வரவழைப்பார்களாம். அப்போது ஆவி வந்து கொலையாளியின் பெயரை அடையாளம் காட்டும் என்று கூறப்படுகிறது.

செய்யாத குற்றத்திற்காக தண்டனையை அனுபவித்த பிரெஞ்சு நபர்

ஒரே பெயரை கொண்ட காரணத்தினால் குற்றவாளி என கைது செய்யப்பட்டு பிரான்சை சேர்ந்த நபர் ஒருவர் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளார்.
 Rachid Alamin  (வயது 29) கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸ்- பெல்ஜியம் எல்லைப் பகுதி அருகே உள்ள நகர் ஒன்றில் கைது செய்யப்பட்டார்.
இதே பெயரை கொண்ட நபர் ஒருவர் போதைப் பொருள் வழக்கில் கடந்த 2009ம் ஆண்டு குற்றவாளி என அறியப்பட்டார்.



இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்ததில் குற்றவாளியின் பெயரை கொண்ட அவரது உறவினர் ஒருவரை கைது செய்தனர்.

அதன் பின் விசாரணையில் உண்மை தெரியவந்த பின்னர் 5 மாதங்கள் கழித்து யுடயஅin விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து யுடயஅinமின் நண்பர் கூறுகையில் சிறையில் 40 நபர்களுடன் தங்கியிருந்து மிகவும் கொடுமைகளை அனுபவித்துள்ளார் என்றார்.

இன்று பூமியில் விழப் போகும் ரஷ்ய செயற்கைகோள்

இராணுவ தகவல் தொடர்புக்காக ரஷ்யா விண்ணில் செலுத்திய செயற்கைகோள் இன்று பசிபிக் கடல் பகுதியில் விழும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் பயன்பாட்டுக்காக கடந்த 1996ம் ஆண்டு மோல்னியா189 என்ற செயற்கைகோளை ரஷ்யா விண்ணில் செலுத்தியது.
அதன்பின் இந்த செயற்கைகோளை ரஷ்யா இராணுவத்தின் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தி வந்தது.
இந்நிலையில் மோல்னியா செயற்கைகோள் செயலிழந்துள்ளதால் அது பூமியில் விழும் என்று ரஷ்ய பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் அலெக்ஸி ஜோலோடுகின் நேற்று தெரிவித்தார்.


பூமியில் விழும் போது செயற்கைகோளின் பாகங்கள் நொறுங்கி விடும். எனவே அந்த பாகங்கள் பசிபிக் கடல் பகுதியில் விழும். அதனால் மக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

1.6 டன் எடை கொண்ட இந்த செயற்கைகோள் தற்போது பூமியில் இருந்து 2378 கிலோ மீட்டர் உயரத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.

அதை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இன்றைக்குள் அது பசிபிக் கடல் பகுதியில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயலிழந்த மோல்னியா1 செயற்கைகோளுக்கு பதில் 2006ம் ஆண்டு மோல்னியா2 என்ற செயற்கைகோளை இராணுவ பயன்பாட்டுக்காக ரஷ்யா விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.


பாகிஸ்தானில் பனிச்சரிவில் 150 படையினர் உயிரோடு புதையுண்டனர்!

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் சியாச்சின் பகுதியில் பனிப்பாறை சரிந்து 150 பாகிஸ்தான் படையினர் உயிருடன் புதையுண்டனர். கடல் மட்டத்திலிருந்து 22 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இப்பகுதியில் இன்று காலை 6 மணியில் கடுமையான பனிப்பாறை சரிவு ஏற்பட்டது. பனிச்சரிவில் பாகிஸ்தானின் ராணுவ முகாம் சிக்கிக்கொண்டது.
இதில் 150 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரோடு புதைந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் 100 ராணுவ வீரர்கள் பனிச் சரிவில் சிக்கிக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.


பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கென மீட்பு படை ராணுவம் சியாச்சின் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்லேடனின் பாகிஸ்தான் வாழ்க்கை! - அவரது மனைவியின் சாட்சியம்

ஒசாமா பின்லாடனைப் பிடிக்க அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானின் கரடுமுரடான மலைகளில் தேடுதல்களை நடத்திக் கொண்டிருக்க இன்னொரு புறத்தில் மலைக்குகைகளில் எல்லாம் அமெரிக்க விமானங்கள் ஏவுகணைகளை வீசிக் கொண்டிருக்க- அவர் பாகிஸ்தானில் ஒன்பது ஆண்டு நிம்மதியாக இருந்து நான்கு குழந்தைகளுக்கும் தந்தையாகியுள்ளார். இந்த விபரங்களை அவரது மூன்றாவது மனைவியே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2001ல் இரட்டைக் கோபுரம் தகர்ப்பு சம்பவத்துக்குப் பிறகு அமெரிக்க புலனாய்வுத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லாடனின் குடும்பத்தினர் தலைமறைவு வாழ்க்கையைத் துவக்கினர்.

கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒளிந்திருந்த ஒசாமா பின்லாடனை அமெரிக்க அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவத்தில் ஒசாமாவின் 20 வயது மகன் கலீலும் ஒசாமாவின் உதவியாளர்கள் இருவரும் பலியாயினர். ஒசாமாவின் இளைய மனைவி அமல் அகமது அப்துல் பதேவுக்கு காலில் குண்டுக் காயம் ஏற்பட்டது.

அமெரிக்க அதிரடிப்படையினர் ஒசாமாவின் மூன்று மனைவிகளையும் குழந்தைகளையும் பாகிஸ்தான் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். பாகிஸ்தானில் முறைகேடாக இவர்கள் தங்கியிருந்தாகக் கூறி தற்போது இவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒசாமா பின்லாடனை பற்றி தகவல் தெரிவிக்க அரேபியாவை சேர்ந்த மூத்த மனைவியர் இருவரும் மறுத்து விட்டனர். ஆனால் 30 வயதான அப்துல் பதே மட்டும் ஒசாமாவை பற்றிய சில உண்மைகளைத் தெரிவித்தார்.

பதே தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது: முஜாகிதீனைத் தான் மணக்க வேண்டும் என்றிருந்ததால் ஒசாமா பின்லாடனை விரும்பி மணந்தேன். 2000ம் ஆண்டு ஒசாமாவை திருமணம் செய்து கொண்ட அதே ஆண்டில் ஜூலை மாதம் கராச்சிக்கு வந்தேன். அதன் பின் சில மாதம் கழித்து ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகருக்குச் சென்று பின்லாடனுடன் குடும்பம் நடத்தினேன்.

அவருடன் மூத்த மனைவிகள் இரண்டு பேர் இருந்தனர். அமெரிக்க தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு நான் கராச்சிக்குத் திரும்பி விட்டேன். அப்போது எனக்கு சபீயா என்ற மகள் இருந்தாள். ஒசாமாவின் மூத்த மகன் சாத் உதவியுடன் பாகிஸ்தானில் ஏழு முறை வீட்டை மாற்றினோம். 2002ல் பெஷாவருக்கு சென்றுஇ மீண்டும் கணவருடன் குடும்பம் நடத்தினேன்.

அமெரிக்க புலனாய்வுத் துறையினரின் கண்காணிப்பு தீவிரமானதும் ஸ்வாட் மாகாணத்தில் உள்ள ஷங்லா மாவட்டத்தில் வசித்தோம். 2003ல் இஸ்லாமாபாத் அருகே உள்ள ஹரிப்பூரில் குடிபெயர்ந்தோம். அங்கு ஒசாமாவுடன் இரண்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தேன்.

இந்தக் கால கட்டத்தில் எனக்கு அசியா என்ற மகளும் 2004ல் இப்ராகிம் என்ற மகனும் பிறந்தனர். இருவரும் அரசு மருத்துவமனையில் தான் பிறந்தனர். மருத்துவமனையில் என்னைப் பற்றி போலியான தகவல்களைத் தெரிவித்திருந்தேன். கடைசியாக 2005ல் தான் அபோதாபாத் வீட்டுக்கு குடிபெயர்ந்தோம். இந்த வீட்டில் இருந்தபோது தான் கடந்த 2006ல் சைனாப் 2008ல் ஹுசைன் ஆகியோர் பிறந்தனர்.

அபோதாபாத் வீட்டில் இருந்தபோது பாகிஸ்தானை சேர்ந்த இப்ராகிம் மற்றும் அப்ரார் இருவரும் தான் எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தனர். வெளியுலகத்துடன் அவர்கள் மூலம் தான் எங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது. கடிதங்களும் அவர்கள் மூலம் தான் எங்களுக்குக் கிடைக்கும். இவ்வாறு பதே கூறினார்.

பதே காலில் குண்டுக் காயம் ஏற்பட்டதால் அவருக்கு உதவி செய்ய ஏமன் நாட்டை சேர்ந்த அவரது சகோதரர்கள் பாகிஸ்தான் வந்துள்ளனர். பாகிஸ்தானில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததற்காக ஒசாமாவின் மூன்று மனைவிகளும் மரியம் 21 சுமாயா 20 என்ற இரண்டு மகள்களும் தற்போது ஒன்றரை மாதத்திற்கு வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தண்டனை காலம் முடிந்ததும் மூத்த மனைவியர் இருவரும் சவுதிக்கும் இளம் மனைவி பதே ஏமனுக்கும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலாவி அதிபர் மரணம் - புதிய அதிபராகிறார் பெண்!

மலாவி அதிபர் பிங்கு-வ-முதரிக்கா இறந்ததை அந்த நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப் படுத்தியுள்ளது. புதிய அதிபராக ஜாய்ஸ் பாண்டா பதவி யேற்கவுள்ளார்.தென் கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவியின் அதிபர் பிங்கு-வா-முதரிக்காவுக்கு இரண்டு நாட்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. தென் ஆப்ரிக்காவுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவர் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
புதிய அதிபராக ஜாய்ஸ் பாண்டா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை அதிபராக இருந்த இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜனநாயக மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் இவருக்கு அதிபர் பதவி கிடைக்காது என தகவல் வெளியாகியது.

இந்த பிரச்னையை சுமுகமாக தீர்க்கும்படி மலாவி அரசுக்கு அமெரிக்கா பிரிட்டன் நாடுகள் அறிவுறுத்தின. இதையடுத்து ஜாய்ஸ் பாண்டா புதிய அதிபராக பதவியேற்கவுள்ளார்.

கியூபாவில் முதல் முறையாக புனிதவெள்ளிக்கு விடுமுறை!

கியூபாவில் முதன் முறையாக புனித வெள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கம்யூனிச நாடான கியூபாவில் கடந்த 59ம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு பிடல் கேஸ்ட்ரோ அதிபரானார். அது முதல் கொண்டு அந்நாட்டில் மதம் சார்ந்த விழாக்களுக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 98ம் ஆண்டு போப் ஜான்பால் கியூபா நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட போது அந்நாட்டு அரசிடம் கிறிஸ்துமசுக்கு விடுமுறை அறிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
கியூபாவில் 10 சதவீதம் பேர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். எனவே போப் ஜான்பாலின் வேண்டுகோளை ஏற்று கிறிஸ்துமசுக்கு விடுமுறை விடப்பட்டது. இதற்கிடையே போப் பெனிடிக்ட் கடந்த வாரம் கியூபாவில் பயணம் செய்தார். அப்போது அவரை முன்னாள் அதிபர் பிடல் கேஸ்ட்ரோவும் அதிபர் ரவுல் கேஸ்ட்ரோவும் சந்தித்தனர்.


புனித வெள்ளிக்கும் விடுமுறை விடும்படி பெனிடிக்ட் கியூபா அதிபரிடம் கோரியிருந்தார். இதை தொடர்ந்து இந்த ஆண்டு புனித வெள்ளிக்கு முதன் முறையாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இதே போல புனித வெள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனில் விமான நிலைய கட்டிடம் குண்டுவீசி தகர்ப்பு

ஏமனில் அதிபராக இருந்த அலி அப்துல்லா சலே பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் பதவி விலகினார். தற்போது காபட்ரப்போ மன்சூர் ஹாடி புதிய அதிபராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையம் மீது டிரக்குகளில் வந்த சிலர் குண்டு வீசினர். அதில் விமான போக்குவரத்து தகவல் கோபுரமும் கட்டிடங்களும் தகர்ந்தன. இதை தொடர்ந்து அங்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இச்செயலில் முன்னாள் அதிபர் சலேவின் ஆதரவாளர்கள் ஈடுபட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls