Wednesday, April 11, 2012

இந்தோனேஷியாவில் உள்பட அனைத்து நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை வாபஸ்

இந்தோனேஷியாவில் இன்று மதியம் சுமத்ரா தீவை மையம் கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானது. இதையடுத்து இந்தோனேஷியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. 
இந்நிலையில் ஹவாய் தீவில் அமைந்துள்ள பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் இந்தோனேஷியால் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கூறியதாவது 
இந்தோனேஷியாவில் இன்று மதியம் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களும் சுனாமியை ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்கங்கள் இல்லை. அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கக்கூடிய நிலநடுக்கங்களே. 

இந்நிலநடுக்கத்தால் இந்தோனேஷியாவில் உள்ள கடற்கரை பகுதிகளில் பாதிப்பு இருக்கும். தற்போது அரை மணி நேரத்திற்கு முன்னதாக ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏதேனும் சுனாமி ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். 

இந்த நிலநடுக்கத்தால் சுமார் அரை மீட்டரிலிருந்து 1 மீட்டர் அளவுக்கே சுனாமி அலைகள் எழும்பும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட இந்திய கடற்கரையோர பகுதிகளில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்று முதலில் தெரிவித்திருந்தது.

இருப்பினும் சர்வதேச கடல் பகுதிகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய கடல் பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் எனவும் அம்மையம் தெரிவித்துள்ளது. 

இந்தோனேஷியாவில் முதல் நிலநடுக்கத்தை அடுத்து தொடர்ந்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது சுமார் 6 மீட்டர் அளவில் அலைகள் எழும்பும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இதனால் இந்திய கடற்கரையோரப் பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்தோனேஷியாவில் சிமியூலு தீவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 4 நிலநடுக்கங்களால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அங்கு 6 மீட்டர் அளவுக்கு சுனாமி அலைகள் தாக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  மேலும் அப்பகுதியில் முற்றிலுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி:

பசுபிக் சுனாமி மையம் அறிவித்திருந்த சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட கடற்பகுதியை கண்காணித்து வந்ததில் ஆபத்தை விளைவிக்கும் சுனாமி அலைகள் ஏற்படவில்லை. இதனால் கண்காணிப்பு நிறுத்தப்படுகிறது என்றும் 28 நாடுகளுக்குவிடப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதாக அம்மையம் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls