Thursday, March 8, 2012

ஐஸ்கிரீமும் ஒரு போதையே அமெரிக்க விஞ்ஞானிகள் அதிரடி!

ஐஸ்கிரீமும் ஒரு போதை தான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் அதிரடியாக கருத்துத் தெரிவித்துள்ளனர். இது மனிதர்களை அடிமையாக்குகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கொழுப்புச் சத்தும் குளுக்கோசும் அதிகம் உள்ள ஐஸ்கிரீமைத் தொடர்ச்சியாக சாப்பிடும் போது மூளையின் திருப்தி தன்மையில் சடுதியான மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம். தொடர்ந்து மூளை ஐஸ்கிரீமை எதிர்பார்க்கத் தொடங்குகிறது.
இது உலகின் மிக மோசமான போதைப் பொருளான கோகைனுக்கு ஒப்பான நிலையாகும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

புகுஷிமா விபத்துக்கு பிறகு அணு உலை பணிகளை மீண்டும் தொடங்குகிறது சீனா!

ஜப்பானில் புகுஷிமா அணு உலை விபத்தை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணு உலை கட்டுமான பணிகளை சீனா மீண்டும் தொடங்குகிறது. ஜப்பானில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமி அலைகள் பொங்கி ஊருக்குள் புகுந்தன. நிலநடுக்கத்தால் புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையம் கடுமையாக பாதிப்படைந்தது. 3 அணு உலைகள் சேதம் அடைந்ததால் கதிரியக்கம் வெளியானது.

Wednesday, March 7, 2012

ஆப்கானிஸ்தானில் பயங்கர பனிச்சரிவில் புதைந்து 42 பேர் பரிதாப பலி!

ஆப்கானிஸ்தானில் உறைய வைக்கும் கடும்குளிர் காரணமாக பல பகுதிகளில் பனி படர்ந்து கிடக்கிறது. அங்குள்ள படக்ஷன் மாநிலம் பனியால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அம் மாநிலத்தின் மலைப்பாங்கான ஷேகாய் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. அந்த கிராமத்தில் 300 பேர் வசிக்கின்றனர். அதில் பெரும்பாலானோர் பனியில் புதைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பனிச்சரிவு குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

கோப்பையை வெல்வது யார்? கடைசி பைனலில் நாளை ஆஸி. ரூ இலங்கை மோதல்!!

3 நாடுகள் கிரிக்கெட் போட்டி முதல் பைனலில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் நேற்று நடந்த 2வது பைனலில் இலங்கை பதிலடி கொடுத்தது. 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸி. மண்ணில் அவர்களுடைய வேகப்பந்து வீச்சுக்கு எதிராக ஜெயவர்த்தனேயும் தில்ஷானும் ஆடிய ஆட்டம் சவுக்கடி கொடுக்கும் வகையில் இருந்தது. இந்த வெற்றியால் தொடர் 1ரூ1 என சமநிலை வகிக்கிறது.

அமெரிக்காவின் அழிவு தொடங்கிவிட்டது ................?

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக ஒரு யுத்தத்தில் குதிக்குமாயின் அது அமெரிக்காவின் முடிவாகவே இருக்கும்" என்று துருக்கியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் துருக்கிய சனநாயகக் கட்சியின் தலைவருமான நாமிக் காமில் ஸெய்பிக் நேற்று (சனிக்கிழமை 03.03.2012) எச்சரிக்கை விடுத்துள்ளார் ."ஈரானுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்பவர்கள் 1980-1988 காலப்பகுதியில் ஈராக்-ஈரான் யுத்தத்தில் சுமார் எட்டு வருடகாலம் சளைக்காமல் தன்னைத் தற்காத்துக்கொண்ட அதன் வல்லமையை நினைவுகூர்வது நல்லது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் இலங்கைக்கு முதலிடம்...............!!!

:சமூகத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்திற்கு அமைய ஆசியாவில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது . உலகப் பொருளாதார அமைப்பினால் 2011 ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட ஆண் - பெண் வேறுபாடு தொடர்பான அறிக்கையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஹாவார்ட் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகங்கள் இணைந்து உலகிலுள்ள அனைத்து நாடுகளும் உள்ளடங்கும் வகையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பின்லேடன் உடல் கடலில் வீசவில்லை: அமெரிக்காவில் அடக்கம் - புதிய தகவலால் பரபரப்பு!

சர்வதேச பயங்கரவாதியும் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவருமான பின்லேடன் கடந்த ஆண்டு மே 2-ந்தேதி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். அபோதாபாத்தில் பதுங்கி இருந்த அவரை அமெரிக்க ராணுவம் அதிரடியாக சுட்டுக் கொன்றது பின்னர் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை. மாறாக வடக்கு அரபிக் கடலில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல் கடலில் வீசப்படவில்லை. மாறாக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தி அதன் உறுப்பினர்களை உள்வாங்க அரசாங்கம் கடுமையாக முயற்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தி அதன் உறுப்பினர்களை உள்வாங்க அரசாங்கம் கடுமையாக முயற்சித்து வருகின்றது. இந்த நிலையானது அரசியலுக்கு சாதகமாக அமைந்தாலும் நாட்டிற்கு பேராபத்தாகவே அமையும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.
ஜெனீவா சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் தவறான வியூகங்களை வகுத்து வருகின்றது. இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களில் இருந்து மீள கூட்டமைப்பினரின் உதவியை நாட நினைப்பது கோழியை பாதுகாக்க நரியிடம் கொடுத்ததைப் போன்ற விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tuesday, March 6, 2012

நடக்கும்போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே...........

நம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும் எஸ்.எம்.எஸ். அனுப்ப டெக்ஸ்ட் அமைப்பதனையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு ஆபத்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. 20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது. மொபைல் போன்களைப் பயன்படுத்துவதில் திறமைசாலிகளாய் இருக்கும் ஆண் பெண்களையே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 30 அடி தூரத்தில் உள்ள ஓர் இடத்தை இலக்காகக் கொண்டு முதலில் இவர்களை நடக்கவிட்டனர்.

உலகின் கோடீஸ்வரப் பல்கலைக்கழகமாக மாறிய கேம்பிரிஜ்!

உலகிலேயே பணக்காரப் பல்கலைக்கழகம் என்ற பெருமையை பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
31 600 கோடியாக இதன் சொத்து மதிப்பு உள்ளது. பல்கலைகழகங்களின் சொத்து மதிப்பு வெளியானதன் மூலமே இந்த விடயங்கள் தெரிய வந்துள்ளது.
அதன் கட்டிடங்கள் ஆய்வுகூடங்கள் மாணவர்களின் எண்ணிக்கை நன்மதிப்பு போன்றவற்றின் மூலம் இது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சி.பீ.கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடர்: 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி

சி.பீ.கிண்ண முத்தரப்பு தொடரின் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிச்சுற்றின் இரண்டாவது போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா இலங்கை அவுஸ்திரேலியா அணிகள் விளையாடும் சி.பீ. கிண்ண முத்தரப்பு கிரிக்கட் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
தொடரின் இறுதி போட்டிக்கு அவுஸ்திரேலியா-இலங்கை அணிகள் தகுதி பெற்றன. இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது.

Monday, March 5, 2012

அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரியவகை இளஞ்சிவப்பு வைரம்

உலகிலேயே மிகவும் அரியவகையில் காணப்படும் இளஞ்சிவப்பு நிறத்திலான வைரத்தினை அவுஸ்திரேலி யாவில் கண்டு பிடிக்கப்பட்டது.
அவுஸ்திரேலி யாவில் ரியோ டியட் நிறுவனம் ஆர்க்கிள் சுரங்கத்தில் வைரங்கள் தேடும் பணியில் 26 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் இதுவரை கண்டிராத வகையில் 12.76 காரட் இளஞ்சிவப்பு வைரத்தை கண்டுபிடித்தது.

ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்? நாம் எவ்வாறு பேசுகிறோம்? விலங்குகளால் மனிதர்களைப்போல் பேச முடிவதில்லையே ஏன்?

எல்லோருக்கும் வணக்கம் இயற்கையின் படைப்பில் ஒரு மனிதனின் குரல் இன்னொரு மனிதனின் குரலைப்போல இருப்பதில்லை என்பது ஒரு ஆச்சிரியமான விஷயம் தானே நண்பர்களே. உதாரணத்திற்கு நம்மை சுற்றியுள்ள மனிதர்களை எடுத்துக்கொள்வோம் யாருடைய குரலாவது இன்னொருவரின் குரலோடு 100% பொருந்துகிறதா என்று பார்த்தோமானால் நிச்சயமாக இல்லை என்று தான் கூற வேண்டும் இன்னும் சொல்லப்போனால் குரலின் வழியே குறிப்பிட்ட மனிதனை நம்மால் அடையாளம் காணமுடியும் என்பதுதான் உண்மை.

கபடி உலகக் கோப்பையில் இந்திய மகளிர் சாம்பியன் பட்டம்

கபடி விளையாட்டில் பெண்களுக்கான முதல் உலகக் கோப்பை போட்டிகளை இந்திய மகளிர் கபடி அணி வென்றுள்ளது.
பாட்னா நகரில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இரானிய மகளிர் அணியை 25 - 19 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய மகளிர் வீழ்த்தினர். இறுதி ஆட்டம் முழுக்கவும் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதற்கொண்டே இந்திய மகளிரின் கைகள் ஓங்கியிருந்தன.

Sunday, March 4, 2012

3 வீரர்களுடன் விண்வெளிக்கு ராக்கெட் சீனா மும்முரம்!

விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் சேர்ந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. பூமியில் இருந்து சுமார் 350 கி.மீ. உயரத்தில் சுற்றியபடி இந்த மையம் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.  இதுபோல தனியாக ‘டியாங்காக்’ என்ற ஆய்வு மையத்தை விண்வெளியில் 2020ம் ஆண்டுக்குள் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக டியாங்காங்1 என்ற சோதனை விண்கலத்தை கடந்த செப்டம்பரில் விண்ணுக்கு அனுப்பியது. லாங்மார்ச்2எப் ராக்கெட் மூலம் இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.

உலக சாதனை நிகழ்த்துவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு உயிரிழந்த இளைஞன்!

உலக சாதனை நிகழ்த்துவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
கந்தளாய் வான்எல பிரதேசத்தைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுமார் நான்கு மணித்தியாலம் பூமிக்குக் கீழ் புதைந்திருந்து உலக சாதனை நிகழ்த்துவதற்கு குறித்த இளைஞன் நேற்றையதினம் முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

யூத மீடியாக்களை பார்க்கும் மக்களுக்கு ....

வரலாறு தெரிந்தவர்களுக்கு பலஸ்தீன போராட்டம் ஒரு சுதந்திர போராட்டம். வரலாறு தெரியாமல் ஏகடியபட்டிய யூத மீடியாக்களை பார்க்கும் மக்களுக்கு பலஸ்தீன போராட்டம் ஒரு தீவிரவாத தாக்குதல்.
தங்களுடைய நாட்டை ஆக்கிரமித்து தினம் தினம் பாலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் யூதர்களை எதிர்த்து போராடும் பாலஸ்தீனிய போராளிகளை நாங்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் என்றே அழைக்கிறோம்.

வேகமாக அழிந்து வரும் ஆஸ்திரேலிய பறவைகள்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

விலங்குகள் பறவைகள் குறித்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளில் புதிய இனங்கள் கண்டறியப்படுவதுடன் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களும் சுட்டி காட்டப்படுகின்றன.
இந்தியாவில் குருவி இனம் அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. ஆங்காங்கே பரவலாக இருந்த குருவிகள் இப்போது பெருமளவில் குறைந்துவிட்டன.

யாழ் இராச்சிய புராதன தலைநகரில் ஆழ்வார் ஆலயம்

யாழ் வடமராட்சி பகுதியில் உள்ள துன்னாலை கிராமத்திற்கு அண்மையில் வல்லிபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ள ஆலயம் இது.  யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ள ஒரு ஊர்தான் வல்லிபுரம் பகுதியாகும். வல்லி நாச்சியார் என்றொரு பெண் இருந்தாளாம். அவள் கற்கோளம் கடலில் படகில் ஏறி கடலுள் சென்ற போது மீன் ஒன்று துள்ளி விழுந்து அவள் மடியில் விழுந்ததாம். மீனானது சங்கு சக்ரம் உடையதாகக் காட்சி அளித்தது. அம் மீன் சிறீ சக்கரம் ஒன்றை இவளுக்கு அளித்து மறைந்தது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls