Wednesday, March 7, 2012

பின்லேடன் உடல் கடலில் வீசவில்லை: அமெரிக்காவில் அடக்கம் - புதிய தகவலால் பரபரப்பு!

சர்வதேச பயங்கரவாதியும் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவருமான பின்லேடன் கடந்த ஆண்டு மே 2-ந்தேதி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். அபோதாபாத்தில் பதுங்கி இருந்த அவரை அமெரிக்க ராணுவம் அதிரடியாக சுட்டுக் கொன்றது பின்னர் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை. மாறாக வடக்கு அரபிக் கடலில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல் கடலில் வீசப்படவில்லை. மாறாக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டவுடன் பாகிஸ்தான் நேரப்படி மதியம் 1 மணி அளவில் முஸ்லிம்களின் மரபுப்படி அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர் அவரது உடல் பாதுகாப்புடன் “பேக்கிங்” செய்யப் பட்டு உளவு நிறுவனமான “சி.ஐ.ஏ.”வின் விமானம் மூலம் அமெரிக்காவில் உள்ள பெத்ஸ்டாவில் உள்ள ராணுவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் அமெரிக்காவின் உளவு நிறுவன இணையதளமான “ஸ்ட்ராட்போர்”ரில் அவ்வப்போது இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் “விக்கி லீக்” இணைய தளத்துக்கு ரகசியமாக கிடைத்துள்ளன.

இணையதளத்தில் இருந்து செய்திகள் மற்றும் படங்களை திருடும் கும்பலுக்கு கிடைத்துள்ளது. அவர்கள் அதை அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு கொடுத்து பிரசுரிக்க செய்துள்ளனர். இந்த தகவலால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls