Monday, March 5, 2012

கபடி உலகக் கோப்பையில் இந்திய மகளிர் சாம்பியன் பட்டம்

கபடி விளையாட்டில் பெண்களுக்கான முதல் உலகக் கோப்பை போட்டிகளை இந்திய மகளிர் கபடி அணி வென்றுள்ளது.
பாட்னா நகரில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இரானிய மகளிர் அணியை 25 - 19 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய மகளிர் வீழ்த்தினர். இறுதி ஆட்டம் முழுக்கவும் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதற்கொண்டே இந்திய மகளிரின் கைகள் ஓங்கியிருந்தன.
பாட்னாவின் கன்கெர்பாக் பகுதியில் அமைந்துள்ள பாடலிபுத்ரா விளையாட்டு அரங்கத்தில் நடந்த இறுதியாட்டத்தில் பெருந்திரளான ரசிகர்கள் கலந்துகொண்டு இந்திய அணியை உற்சாகப்படுத்தியிருந்தனர்.

வெற்றி பெற்ற இந்திய அணியின் தலைவி மமதா புஜாரிக்கு பிஹார் முதல்வர் சுஷில் குமார் மோடி பரிசுக் கோப்பையையும் இந்திய அணியின் வீரர்களுக்கு பதக்கங்களையும் வழங்கினார்.

முன்னதாக அரையிறுதி ஆட்டங்கள் ஆரம்பிக்கவிருந்த சமயத்தில் ரசிகர்கள் மற்றும் பொலிசார் இடையில் அரங்கத்தின் வெளியே தகராறு மூண்டதாகவும் ஆத்திரம்கொண்ட ரசிகர்கள் பொலிசார் மீது கல்லெறிந்ததாகவும் பொலிசார் தடியடி நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls