Friday, April 6, 2012

மமத் விலங்கின குட்டியொன்றின் சிதையாத தோல்பாகங்கள் பத்திரமாக மீட்பு

இற்றைக்கு 3500 வருடங்களுக்கு முன்னர் முற்றாக அழிந்து போனதாக நம்பப்படும் மமத் விலங்கினத்தின் குட்டி மமத் ஒன்ற்றின் சிதையாத தோல் பாகத்தினை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
கடும் குளிர் மற்றும் பனியில் அகப்பட்டு கொண்டதால் இக்குட்டி மமத்தின் தோல் பாகங்கள் எந்தவொரு சிதைவுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன. பொதுவாக சிங்கங்களால் வேட்டையாடப்படுகின்ற போதும் இந்த மமத் விலங்கு மனிதனால் வேட்டையாடப்பட்டிருக்கலாம் அல்லது நஞ்சு கொடுக்கப்பட்டு கொல்லபப்ட்டிருக்கலாம்

என இந்த யானையின் தோல் பாகங்களின் காயங்களிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் முடிவெடுத்துள்ளனர். மேலும் 10000 வருடங்களுக்கு முன்னதாக இந்த மமத் வாழ்ந்திருக்கலாம் எனவும் அவர்கள் கணிப்பிட்டுள்ளனர்.

இதன் தோல் பாகங்கள் மற்றும் உரோமங்கள் குளிரை தாங்கும் வகையில் தடித்த கம்பளி போன்றிருக்கிறது. மமத் விலங்கினம் தொடர்பான வருங்கால ஆராய்ச்சிகளுக்கு இக்கண்டுபிடிப்பு பெரிதும் உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உறையவைக்கும் கடுங்குளிர் இந்த மமத் விலங்கின் தோல்களை சில ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு நேர்த்தியாக பாதுகாத்து வந்துள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த மமத் விலங்கு சிபேரியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கி யூகா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மமத் பிறந்து இரண்டரை வருடங்களில் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான விலங்கினங்களின் உயிரற்ற உடலங்கள் இயற்கையாகவே பதபப்டுத்தப்பட்டு பலவருடங்களின் பின்னர் மீட்கப்படுவதென்பது மிக அரிதான நிகழ்வென்பதால் இக்குட்டி மமத்தின் புகைப்படம் மிக பிரபல்யமாகி வருகிறது.
இவ்விலங்கினம் குளிர் பகுதியில் வாழ்ந்திருந்ததால்  The Wooly Mammoth   ( Mammuthus primigenius ) 'கம்பளி போன்ற தடித்த தோலுரு கொண்ட மமத்' என அழைக்கப்படுகிறது. இவற்றின் வெளித்தோலுரு 10 செ.மீ திடத்தன்மை வாய்ந்ததாக காணப்படுகிறது. அவற்றின் காதுகள் மிகச்சிறியனவாகவும் வால் மிக குறுகியதாகவும் காணப்படுவதுடன் தடிமமான உரோமங்கள் வெப்ப இழப்பை தடுக்க உதவுகின்றன.

அவற்றின் கொம்புகள் 5 மீற்றல் நீளத்திற்கு இருந்துள்ளன. பனியை ஆழமாக தோண்டுவதற்கும் எதிரிகளுடன் சண்டையிடுவதற்கும் அவை பயன்பட்டுள்ளன

ஒரே ஒருவர் வாழும் அமெரிக்க நகரத்தை ஏலத்தில் எடுத்த வியட்னாமியர்!

அமெரிக்காவில் ஒருவர் மட்டுமே வாழ்ந்து வந்த குட்டி நகரம் ரூ.4.5 கோடிக்கு ஏலம் விடப்பட்டது. இதை வியட்னாமை சேர்ந்த கோடீஸ்வரர்கள் 2 பேர் விலைக்கு வாங்கி உள்ளனர். அமெரிக்காவின் கொலராடோ அருகில் லாராமி  செயெனி பகுதிக்கு இடையில் உள்ளது பபோர்ட். பத்து ஏக்கரில் அமைந்துள்ள இந்த குட்டி நகரத்தில் 3 படுக்கை அறை கொண்ட சொகுசு வீடு பெட்ரோல் பங்க் சில சிறிய வீடுகள் உள்ளன.
இங்கு வசித்தவர் டான் சம்மன்ஸ். இவர் ஒருவர் மட்டும்தான் இந்த நகரில் வசித்தார். அதனால் அமெரிக்காவிலேயே மிகமிக குறைந்த மக்கள் தொகை கொண்ட நகரம் என்று பெயர் பெற்றது. கடந்த 1980ம் ஆண்டு இந்த நகரத்துக்கு மனைவி மகனுடன் சம்மன்ஸ் குடியேறினார். 1990ல் நகரத்தை விலைக்கே வாங்கி விட்டார்.

வண்ண ஓவியங்கள் வரைந்த 10000 முட்டைகளை கொண்டு தயாரித்த 'ஈஸ்டர்' மரம்!

ஜெர்மனியில் 10000 முட்டைகளுடன் 'ஈஸ்டர்' மரம் தயாராகி உள்ளது. ஈஸ்டர் பண்டிகையின் போது கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் வண்ண ஓவியங்கள் வரைந்த முட்டைகளை பரிசாக வழங்குகின்றனர். இந்த வழக்கம் வெளிநாடுகளில் பெருமளவில் உள்ளது.
அது போன்று வழங்கப்பட்ட முட்டைகளை ஜெர்மனியை சேர்ந்த ஒரு நபர் மரத்தில் கட்டி தொங்க விட்டு ஈஸ்டர் மரம் உருவாக்கியுள்ளார். அவரது பெயர் வொல்கர் கிராப்ட் 76 வயதான இவர் ஓய்வு பெற்ற ஊழியர். கடந்த 1965-ம் ஆண்டு முதல் இவர் ஈஸ்டர் மரத்தை உருவாக்கி வருகிறார்.

10 வயதில் தாயான கொலம்பியச் சிறுமி!

கொலம்பியாவில் 10 வயது சிறுமி தாயாகி இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இவள்தான் உலகிலேயே மிக குறைந்த வயதில் தாயானவள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கொலம்பியாவின் வடக்கு பகுதியில் வயூ பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இங்கு 10 வயது சிறுமி ஒருத்தி திடீரென கர்ப்பமானாள். 39 வாரங்கள் தீவிர கண்காணிப்புக்கு பிறகு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. ஆனால் பிரசவம் சற்று சிக்கலாக இருந்ததால் ஆபரேஷன் செய்து குழந்தை எடுக்கப்பட்டது. இத்தகவலை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

தென்சீனக்கடல் சீனாவுக்கு சொந்தமானதல்ல! - இந்தியா

தென் சீன கடல் பகுதி உலகிற்கு தான் சொந்தம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா கூறியுள்ளார். தென் சீன கடல் பகுதியில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் துரப்பண பணிகளை மேற்கொள்வது குறித்து கருத்து தெரிவித்த சீனா பணிகளை நிறுத்தி விட்டு தென் சீனக்கடலில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என எச்சரித்திருந்தது. இல்லாவிட்டால் அதிக விலை கொடுக்க நேரிடும் என எச்சரித்தது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தென் சீனா கடல் பகுதி உலகிற்கு சொந்தம் என்பதே இந்தியாவின் கருத்து. இந்த பகுதி எந்த நாட்டின் தலையீடு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். இந்த பகுதியில் வர்த்தகம் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கூறினார். மேலும் அவர் இது பற்றி ஆசியான் மாநாட்டிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Thursday, April 5, 2012

கனடாவில் பனி குறைவடைந்து வருகின்றது.

உறைபனி மற்றும் பனிப்பொழிவுக்கான நாடு என்று பெயர் பெற்றிருந்த கனடாவில் பனிபடர்ந்த நிலப்பரப்பின் அளவு குறைந்து கொண்டே வருகிறது என கனடாவின் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
1972ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான அறிக்கையில் தற்போது பனி 5.1 சதவீதம் குறைந்தது தெரியவந்துள்ளது.
கடந்த 39 ஆண்டுகளில் 1998ம் ஆண்டில் ஐந்து மில்லியன் சதுர கிலோ மீற்றர் அளவிற்கு உறைபனி காணப்பட்டது. அதன்பின்பு கடந்த 2010ம் ஆண்டில் 5.5 மில்லியன் சதுர கிலோமீற்றர் அளவு பனி படர்ந்திருந்தது.

பிரிட்டிஷ் தூதரகத்தை நோக்கி அர்ஜெண்டினாவில் பேரணி

பிரிட்டிஷார் வசம் உள்ள ஃபாக்லாந்து தீவைத் திருப்பித் தரவேண்டுமென்று கோஷமிட்ட படி அர்ஜெண்டினா தலைநகரான புயுனாஸ் ஏர்ஸில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை நோக்கி 2000 பேர் ஊர்வலமாகச் சென்றனர்.
இந்த நாட்டிலுள்ள கியுபிராக்கோ என்ற வன்முறை இயக்கம் அண்மைக்காலமாக பிரிட்டனுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
இந்த இடதுசாரி அமைப்பு இதற்கு முன்பு ர்ளுடீஊ மற்றும் கிளாக்சோ ஸ்மித்க்ளைன் போன்ற பிரிட்டன் நிறுவனங்களை அடித்து நொறுக்கியது.

இஸ்லாமிய நாடாக மாறப் போகும் மாலி: பிரான்ஸ் கவலை

மாலியின் வடபகுதியில் துவாரெக் பிரிவினை வாதிகளின் ஆதிக்கம் வளர்ந்து வருவதால் அல்கொய்தா இயக்கத்தின் செல்வாக்கும் வளர்ந்து வருகிறது என பிரான்ஸ் கவலை தெரிவித்துள்ளது.
பிரான்சின் வெளி விவகாரத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான பெர்னார்டு பலேரோ கூறுகையில் வடக்கு மாலியில் அரசியல் சூழ்நிலை நிலையற்றதாக உள்ளது என்று தெரிவித்தார்.
இந்த அகிம் இயக்கத்தினரின் முக்கியத்துவம் வளர்ந்து வருவது பிரான்சுக்கு கவலை அளிக்கிறது என்றார்.

Wednesday, April 4, 2012

மண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருக மன்னிப்பு கேளுங்கள் !

நல்ல துணைவரைத் தேடுவதைப் போலவே நல்ல துணைவராக இருப்பது மிகவும் நல்லது. தம்பதிகளுக்குள் அகந்தை மற்றவரின் உதவாத அறிவுரைகள் குழப்பத்தை உண்டு பண்ணும். தொழில் வேறுபாடுகள் தகுதி வேறுபாடுகள் பார்ப்பது குறைகூறும் பெற்றோர் மற்றும் துணைவரால் தொல்லைகள் பெருகும். ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு உயர்விலும் தாழ்விலும் சுகத்திலும் துக்கத்திலும் காதலில் மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
அன்போடு கட்டித் தழுவுங்கள்

அரசின் தற்போதைய செயற்பாடு - நாடு பிளவுபடும் அபயாம்: எச்சரிக்கிறது எதிர்க்கட்சி

சர்வதேச விவகாரங்களில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தி அடையக் கூடிய வகையில் அமையவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல விசனம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறீலங்காவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கும் தென் சூடான் தொடர்பான சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டிற்கும் இடையில் ஒற்றுமை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

டைனசோர்கள் நீரில் வாழ்ந்த உயிரினம்: ஆய்வாளர்கள் கருத்து

டைனசோர்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானி பிரையன் ஜே போர்டு. சிறந்த பேராசிரியராகவும் விளங்கி வரும் இவர் பி.பி.சி. ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது டைனசோர்கள் குறித்து தனது கருத்தை குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில் மிக பெரிய உருவம் கொண்ட நீண்ட வாலை உடைய டைனசோர்கள் பாலைவனங்களில் சுற்றி திரிந்து அதன் இரையை தேடுவது என்பது அதற்கு சிரமம் தருவதாகும்.

மன்னார் கடற்கரை ஓரமாக புலிகளின் இரு படகுகளை கடற்படையினர் கண்டுபிடித்தனராம்

தலைமன்னார் கடற்கரை ஓரமாக புலிகளின் 2 படகுகளை தாம் கண்டு பிடித்துள்ளதாக இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு படகுகளையும் நேற்றைய தினம்(03) மாலை தாம் கண்டுபிடித்ததாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே தாம் அங்குசென்று பார்த்தவேளை குறிப்பிட்ட படகுகள் காணப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இவ்வகையான படகுகளை விடுதலைப் புலிகளே பயன்படுத்துவார்கள் எனவும் அதிவேகமாகவும் மற்றும் நீர் மட்டத்தில் இருந்து அதிக உயரம் இல்லாமல் தாழ்ந்து இருக்கும் படகுகளாக அவை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மனிதன் உலகில் கால் பதிக்காத இடங்கள் ....

மனித தொழில்நுட்பம் உலகம் மற்றும் வான்வெளியில் உள்ள அனைத்தையும் ஊடுருவிச் செல்ல உதவினாலும். மனிதன் இன்னமும் தன் காலடித்தடம் பதிக்காத இடங்கள் இருக்கிறது ! – (The Unexplored Area)
அதில் முக்கிய பத்து (10) இடங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
1. Northwest Siberia – வடமேற்கு சைபீரியா
Northwest-Siberia

சிரியாவில் கலவரம்: 80 பேர் பலி

சிரியாவில் ராணுவத்திற்கும் எதிப்பாளர் களுக்குமிடையே நேற்று ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 80 பேர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஐ.நா- அரபு நாடுகளின் அமைதித் தூதுவரான கோபி அனான் விடுத்துள்ள அறிக்கையில் சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத் உடனடியாக தனது படைகளை ஏப்ரல் 10 ம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ராணுவ துருப்புகள் எதிர்பாளர்களின் வீடுகளை தீயிட்டும் கொள்ளையிட்டும் வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பிரிட்டனில் தினமும் 60 குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் அவலம்

பிரித்தானியாவில் சமீபத்திய புள்ளி விபரப்படி ஒருநாளைக்கு 60 குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகுகின்றனர் என தெரியவந்துள்ளது.
2010-11ம் ஆண்டுகளில் இங்கிலாந்திலும் வேல்ஸிலும் பதிவான வழக்குகளில் பாதிக்கப்பட்டோர் ஐந்தில் ஒரு பங்கினர் அதாவது 23000 பேர் உயர்நிலை வகுப்பைக் கூட எட்டாதவர்கள் ஆவர். இந்த வழக்குகளில் பத்து சதவீதம் மட்டுமே குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

வானில் ஒரு நெருப்புப் பொழிவு

ஈக்குவேடாரில் 90 ஆண்டுகளுக்கு ஒருமுறை எரிமலை வெடிக்கிறது. அப்போது வானம் நெருப்பை கக்குவது போன்று இருக்கும்.
கடந்தாண்டு இந்த எரிமலை வெடித்த போது சிவந்த காற்று மேகம் போல அந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டது.
இந்த மலை உச்சியினைக் கடந்த 2006ம் ஆண்டில் டேஷ்லெர் என்ற புகைப்பட கலைஞர் படம்பிடித்து இணையத்தளத்தில் வெளியிட்டார்.
டேஷலர் வெளியிட்ட அந்தப் படத்தில் பாறை உருகி மலையின் பக்கங்களில் வடிந்து வருவது தென்படுகிறது. அதன் இடதுபுறம் ஒரு கார்மேகம் தவழ்வதும் புலப்படுகிறது.

ஆண்களா ? பெண்களா? ஓவர் சீன் போடுறாங்க......

 ஆண்களும் பெண்களும் கவர்வதற்காக போட்டி போட்டு சீன் போடுறாங்க....... ஸ்ரைல்ல மாற்றம் வருது கலாய்க்கிறது. இப்படி மாறி மாறி நடக்கும் யுத்தம்..
ஒருவரை ஒருவர் கவர்வது இந்த காலத்தில் போட்டி முறையில் நடந்து கொண்டிருக்கின்றது. இன்றைய உலகம் போட்டி உலகம்.  மிக வேகமாக ஓடனும் இல்லன்னா பின்னாடி வாறவன் முந்திட்டு பொயிடுவான். அதுக்காக படிக்கிறதுக்கு ஓடுறானோ தெரியல வேலைக்கு ஓடுறானோ இல்ல ஆனா ஆண்கள் பெண்களோட பழகிறதுக்கும் பெண்கள் ஆண்களோட பழகிறதுக்கும் பொட்டி போட்டிட்டே இருக்காங்க. கூட்டமா பசங்க இருக்கும் போது ரோட்டில ஒரு பொன்னு போன

Tuesday, April 3, 2012

மன அழுத்தத்திற்கு ஆளாக்கும் தனிமை

குடும்ப அங்கத்தவர்களுடன் இல்லாது தனியாக வாழ்பவர்கள் ஏனையவர்களை விடவும் 80 வீதம் அதிகமாக மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
தனியாக வசிக்கும் தொழில்செய்யும் ஆண்களும் பெண்களும் சம அளவில் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. பெண்கள் போதியளவு வீடமைப்பு வசதிகள் இல்லாதமையினாலும் ஆண்கள் சமூக ரீதியிலான ஒத்துழைப்பு இல்லாமையினாலும் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தனியாக வசிக்கும் நபர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் கருத்து வெளியிடுவதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டுமென சுகாதார ஸ்தாபனமொன்று வலியுறுத்தியுள்ளது.

மக்களுக்கு உதவி புரிவதில் கனேடியர்கள் முதலிடம்

பெரும் விபத்துக்கள் இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது மக்களுக்கு உதவி புரிவதில் கனேடியர்கள் முதலிடம் வகிக்கின்றனர்.
கப்பல் கவிழ்தல் தீ விபத்து நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து மற்றும் புயல் வெள்ளம் சூழ்ந்த காலங்களில் கூட கனடா மக்கள் நிதானம் தவறுவதில்லை.
கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் நாள் டைட்டானிக் என்ற சொகுசுக் கப்பல் கடலில் மூழ்கிய போது அதில் பயணம் செய்த 2200 பேரில் 1500 பேர் உயிரிழந்தனர்.

நகைச்சுவை நடிகர் 'டணால்' தங்கவேலு மனைவி எம் சரோஜா மரணம்!

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் 'டணால்' கே.ஏ. தங்கவேலுவின் மனைவியும் தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத நகைச்சுவை நடிகையுமான எம். சரோஜா திங்கள்கிழமை சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 79.
மயிலாடுதுறையைச் சேர்ந்த எம் சரோஜா 14 வயதில் நடிக்க வந்தார். மறைந்த இயக்குநர் கே சுப்பிரமணியம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
ஐம்பதுகளில் தொடங்கி எழுபதுகள் வரை நகைச்சுவையில் கொடி கட்டிப் பறந்த மறைந்த நடிகர் டணால் கே ஏ தங்கவேலுவும் சரோஜாவும் ஜோடியாக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு காதலித்து மணந்தனர் (1958). அதன் பிறகு 200 படங்களுக்கு மேல் இணைந்து நடித்தனர்.

அவுஸ்ரேலிய விமான உணவுப் பொட்டலத்தில் கூட்டுப்புழுக்கள்!

அவுஸ்திரேலிய விமானமான காண்ட்டாஸ் விமானத்தில் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மெல்போர்ன் நோக்கிப் பயணித்த அவுஸ்திரேலியப் பெண்மணி யொருவர் உணவுப் பொட்டலத்தில் உயிர்ப்புழுக்கள் இருந்தது கண்டு கடும் அதிர்ச்சி யடைந்துள்ளார். கடந்த வியாழனன்று காண்ட்டாஸ் விமானத்தில் பயணித்த அப்பெண் இருக்கை விளக்கை ஒளிரச் செய்யாமலேயே தனக்கு அளிக்கப்பட்ட உலர்பழங்கள் பருப்புகள் கொண்ட உணவுப்பொட்டலத்தை பிரித்து உண்ணத் தொடங்கியுள்ளார்.
"முதலில் சுவை வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன்; உடனடியாக விளக்கை ஒளிரச் செய்து பார்த்தேன் பொட்டலம் முழுதும் லார்வா எனப்படும் கூட்டுப்புழுக்களைக் கண்டு அதிர்ந்தேன்" என்கிறார்

காப்பியடித்து ஆராய்ச்சி கட்டுரை எழுதிய ஹங்கேரி அதிபர் பதவி விலகினார்!

மற்றவரின் கருத்தை காப்பியடித்து ஆராய்ச்சி கட்டுரை எழுதிய சர்ச்சை தொடர்பாக ஹங்கேரி நாட்டு அதிபர் பால் ஸ்கிமித் பதவி விலகியுள்ளார். ஹங்கேரி அதிபராக கடந்த 2010ம் ஆண்டு பொறுப்பேற்றார் பால் ஸ்கிமித். இவர் கடந்த 92ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு குறித்த 200 பக்க ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்து டாக்டர் பட்டம் பெற்றார். ஆனால் இந்த ஆய்வு கட்டுரை மற்றவர் எழுதியது என கண்டுபிடிக்கப்பட்டு சர்ச்சையானது.
இதை தொடர்ந்து இவர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சியினர் வற்புறுத்தினர். கடந்தவாரம் இவர் தான் பெற்ற பி.எச்.டி பட்டத்தை உதறினார். இந்நிலையில் இவர் பதவி விலகும் கோரிக்கை வலுத்ததால் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மகாத்மாகாந்தி பயன்படுத்திய கண்ணாடி ராட்டை கடிதங்கள் இங்கிலாந்தில் ஏலம்!

மகாத்மாகாந்தி பயன்படுத்திய கண்ணாடி ராட்டை கடிதங்கள் ஆகியவை இங்கிலாந்தில் வரும் 17ம் தேதி ஏலத்தில் விடப்படுகிறது. இங்கிலாந்தில் மேற்கு மிட்லாண்ட் மாகாணத்தில் உள்ள செராப்ஷையரில் வரும் 17ம் தேதி உலகின் மிக பழமையான அரிய பொருட்கள் ஏலத்தில் விடப்படுகின்றன. முல்லாக் நிறுவனம் நடத்தும் இந்த ஏலத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய பல அரிய பொருட்கள் இடம் பெறுகின்றன.
காந்தி பயன்படுத்திய வட்ட பிரேம் கண்ணாடி ராட்டை அவரது மரணத்தின் போது அந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண் ரத்தம் தோய்ந்த புல் ரங்கூனில் இருந்த ராகவன் என்பவருக்கு காந்தி எழுதிய கடிதம் உட்பட

கொழும்புக்கு வந்த குயின் எலிசபெத்துக்கு சம்பிரதாய வரவேற்பு!

இலங்கைக்கு வந்த குயின் எலிசபெத்துக்கு கொழும்பு துறைமுகத்தில் வைத்து சம்பிரதாயபூர்வமாக அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.
குயின் எலிசபெத் என்பது பிரித்தானிய நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான ஆடம்பர பயணிகள் கப்பல்.
கடந்த 30 ஆம் திகதி துறைமுகத்தை வந்தடைந்தது. 2000 இற்கும் அதிகமான பயணிகளை கொண்டு இருந்தது. இவர்கள் பிரிட்டன் ஆஸ்திரேலியா தென்னாபிரிக்கா பிரான்ஸ் யப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

அமெரிக்க நிறுவனம் சாதனை : பறக்கும் கார் சோதனை வெற்றிகரம்!!

அமெரிக்க நிறுவனம் உருவாக்கியுள்ள பறக்கும் கார் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. அடுத்த ஆண்டுக்குள் இந்த கார் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் டெரபியூஜியா. மசாசூசட்ஸ் மாநிலம் வூபர்ன் நகரை தலைமையிடமாக கொண்டது. ரேஸ் கார்கள் சிறிய ரக விமானங்கள் விமான பாகங்கள் ஆகியவற்றை தயாரித்து வருகிறது.

Sunday, April 1, 2012

அமெரிக்க ஏரியில் பள்ளி குழந்தைகள் கண்டெடுத்த தங்க புதையல்

அமெரிக்கா கலிபோர்னியாவின் ஆக்லாந்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் 6-வது வகுப்பு மாணவர்கள் அங்குள்ள ஒரு ஏரியை சுத்தப் படுத்தினார்கள். அப்போது குப்பை கூளமாக கிடந்த இடத்தில் ஒரு பை கேட்பாரற்று அனாதையாக கிடந்தது. அதை 11 வயது மாணவி கண்டெடுத்தார்.
பின்னர் மாணவ- மாணவிகள் அந்த பேக்கை திறந்து பார்த்தனர். அதில் 100-க்கும் மேற்பட்ட தங்க நகைகள் வெளிநாட்டு பழங்கால நாணயங்கள் மற்றும் மோதிரங்கள் பிரேஸ்லெட் போன்றவை இருந்தன.

சீனாவில் புரட்சி பீதி: இணைய தளங்கள் மூடப்பட்டது

லிபியா எகிப்து சிரியா உள்ளிட்ட நாடுகளில் சர்வாதிகாரிகளின் அடக்கு முறையால் மக்கள் புரட்சி ஏற்பட்டது. அதை தொடர்ந்து கடுமையான சட்டதிட்டங்கள் கொண்ட சீனாவிலும் புரட்சி ஏற்படலாம் என்ற அச்சம் கம்யூனிஸ்டு ஆட்சியாளர்களிடம் ஏற்பட்டது. அவர்கள் எதிர்பார்த்த படியே அரசுக்கு எதிராக ஆங்காங்கே மக்கள் பிரசாரம் தொடங்கியது.
லிபியா எகிப்து சிரியா ஆகிய நாடுகளில் இணைய தளங்களின் மூலம் கருத்துக் களை பரிமாறி அதன் மூலம் மக்கள் ஒன்று திரண்டனர். அதேபோல் சீனாவிலும் தொடங்கியது.

அமெரிக்காவில் 3 பேருக்கு ரூ.3200 கோடி: லாட்டரியில் மெகா பரிசு

அமெரிக்காவில் உலகிலேயே அதிக பரிசு தொகை கொண்ட ரூ.3200 கோடி ஜாக்பாட் லாட்டரி வெளியிடப்பட்டது. அந்த பரிசு சீட்டு குலுக்கல் அட்லாண்டா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் 2-4-23-38-46 என்ற நம்பர் உள்ள சீட்டுக்கு மெகா பரிசு கிடைத்தது. ஆனால் அந்த லாட்டரி சீட்டை வாங்கிய அதிர்ஷ்டசாலி யார் என தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் அந்த அதிர்ஷ்ட லாட்டரி சீட்டை 3 பேர் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
மேரிலாண்ட் கன்னாஸ் அல்லது இல்லினாய்ஸ் நகரில் விற்பனை செய்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls