Wednesday, April 4, 2012

பிரிட்டனில் தினமும் 60 குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் அவலம்

பிரித்தானியாவில் சமீபத்திய புள்ளி விபரப்படி ஒருநாளைக்கு 60 குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகுகின்றனர் என தெரியவந்துள்ளது.
2010-11ம் ஆண்டுகளில் இங்கிலாந்திலும் வேல்ஸிலும் பதிவான வழக்குகளில் பாதிக்கப்பட்டோர் ஐந்தில் ஒரு பங்கினர் அதாவது 23000 பேர் உயர்நிலை வகுப்பைக் கூட எட்டாதவர்கள் ஆவர். இந்த வழக்குகளில் பத்து சதவீதம் மட்டுமே குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

குழந்தைக் கொடுமைத் தடுப்புக்கான தேசியக் கழகம்(NளுPஊஊ) பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தை விபச்சாரம் பற்றிய குற்றங்களின் புள்ளிவிபரத்தை சேகரித்தது. இந்தப் புள்ளிவிபரம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள 43 காவல் மண்டலங்களிலிருந்து சேகரிக்கப்பட்டதாகும்.

குழந்தைக் கொடுமையை நாள்பட்ட நோய் போலக் கருதி அதனை சமூகத்திலிருந்து அறவே அகற்ற வேண்டும் என்று சமூகநல அமைப்புகள் தெரிவிக்கின்றன.

மொத்ததில் கடந்தாண்டு 54982 பாலியல் கொடுமைகள் நடந்துள்ளன. இவற்றில் 23097 வழக்குகள் குழந்தைகளுக்கு எதிரான நடைபெற்ற கொடுமைகள் ஆகும்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலோனோர்(14819) 11 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர் ஆவர். இவர்களில் 8749 பேர் 13 முதல் 15 வயது உடைய சிறுவர்இ சிறுமியர் ஆவர்.

10 வயதுக்கும் குறைந்த 4973 குழந்தைகள் இந்த கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் 1472 பேர் ஆறு வயதுக்கும் குறைந்தவர்கள் ஆவர்.

குழந்தை கொடுமைத் தடுப்புக்கான தேசியக் கழகத்தின் தலைவரான ஜான் பிரௌன் கூறுகையில் குழந்தைப் பாதுகாப்புக்காகப் பொதுமக்களும் அரசாங்கமும் பெருமுயற்சி எடுக்க வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான சிகிச்சையும் மறுவாழ்வுக்குத் தேவையான திட்டங்களும் அரசு வழங்க வேண்டும் என்றார்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls