Thursday, April 5, 2012

இஸ்லாமிய நாடாக மாறப் போகும் மாலி: பிரான்ஸ் கவலை

மாலியின் வடபகுதியில் துவாரெக் பிரிவினை வாதிகளின் ஆதிக்கம் வளர்ந்து வருவதால் அல்கொய்தா இயக்கத்தின் செல்வாக்கும் வளர்ந்து வருகிறது என பிரான்ஸ் கவலை தெரிவித்துள்ளது.
பிரான்சின் வெளி விவகாரத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான பெர்னார்டு பலேரோ கூறுகையில் வடக்கு மாலியில் அரசியல் சூழ்நிலை நிலையற்றதாக உள்ளது என்று தெரிவித்தார்.
இந்த அகிம் இயக்கத்தினரின் முக்கியத்துவம் வளர்ந்து வருவது பிரான்சுக்கு கவலை அளிக்கிறது என்றார்.

மேலும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலைன் ஜுப்பே அகிம் இயக்கத்தாரிடம் மாலி சிக்கிவிடுமோ? அவர்கள் அந்நாட்டை இஸ்லாமியக் குடியரசாக மாற்றி விடுவார்களோ என கவலை தெரிவித்தார்.

பிரான்சின் ஐ.நா தூதுவர் ஜெரார்டு அராட் கூறுகையில் வடக்கு மாலியில் நடக்கும் கலவரத்தை ஒடுக்குவதற்காக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பைக் கோர வேண்டும் என்றார்.

வடக்கு மாலியில் நடக்கும் கலவரத்தையும் துப்பாக்கிச் சூட்டையும் உடனே நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls