Friday, April 6, 2012

வண்ண ஓவியங்கள் வரைந்த 10000 முட்டைகளை கொண்டு தயாரித்த 'ஈஸ்டர்' மரம்!

ஜெர்மனியில் 10000 முட்டைகளுடன் 'ஈஸ்டர்' மரம் தயாராகி உள்ளது. ஈஸ்டர் பண்டிகையின் போது கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் வண்ண ஓவியங்கள் வரைந்த முட்டைகளை பரிசாக வழங்குகின்றனர். இந்த வழக்கம் வெளிநாடுகளில் பெருமளவில் உள்ளது.
அது போன்று வழங்கப்பட்ட முட்டைகளை ஜெர்மனியை சேர்ந்த ஒரு நபர் மரத்தில் கட்டி தொங்க விட்டு ஈஸ்டர் மரம் உருவாக்கியுள்ளார். அவரது பெயர் வொல்கர் கிராப்ட் 76 வயதான இவர் ஓய்வு பெற்ற ஊழியர். கடந்த 1965-ம் ஆண்டு முதல் இவர் ஈஸ்டர் மரத்தை உருவாக்கி வருகிறார்.



இவர் கால் பெல்ட் நகரில் உருவாக்கியுள்ள ஈஸ்டர் முட்டை மரத்தை காண ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் இங்கு சுற்றுலா வருகின்றனர். வரும் ஆண்டுகளில் இதற்கு மேல் இனி ஈஸ்டர் முட்டைகளை அதிகமாக கட்டிக் தொங்கவிட மாட்டேன்.
ஏனெனில், அவற்றை பாதுகாப்பது மிகவும் சிரமமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, இந்த மரத்தை உருவாக்குவதற்கு எனது மனைவியும், குழந்தைகளும் உதவியாக இருந்தனர் என குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls