Wednesday, February 22, 2012

யாழ் நகரில் வலம் வரும் பழைய மொடல் கார்கள்

 என்னதான்  புதிய கண்டுபிடிப்புக்கள் வந்தாலும் பழையவற்றிக்கு உள்ள மதிப்பே தனி தான். புதுமை விரும்பிகள் இருப்பதை போல பழமை விரும்பிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். பழய உற்பத்திகளுக்கான  பெறுமதி தனித்துவமானது. பழைய கார்களின் வரலாறுகளும் தனித்துவம் வாய்ந்தவை . கார்கள்  இங்கிலாந்தில் தான் ஆரம்பத்தில் உற்பத்தியாகின.
அருங்காட்சியகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்  கேம்பிறிச் அம்பாசெட் கார்கள் மானிஸ்   மைனர் வகை கார்கள் இன்றும் யாழ் மண்ணில் பாவனையில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? இந்த கார்களை வாய் பிளந்து பார்க்கும் ஒரு சில  கூட்டத்தை பார்க்கும் போது வியப்பாக உள்ளது.  இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட, ஏனைய மாவட்டங்களில் நகரங்களில்  பழைய ரக கார்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு விட்டது என்றே சொல்லலாம்.

Tuesday, February 21, 2012

காதல் முக்கியமா? உறவு முக்கியமா?

பள்ளிக்கு செல்லும் சின்ன ஞ் சிறு பெண் பிள்ளைகளுக்கு புரியாத விடயம் தான் காதல் அறியாத வயதில் ஒருவர் மீது வரும் ஈர்ப்பின் பிரகாரம் வரும் இனம் புரியாத காதல் படிப்பையையும் உறவுகளையும் பற்றி சிந்திக்க விடுவதில்லை
 ஒரு சில காலங்களே அறிமுகமான ஒருவரை பற்றி முற்றாக தெரிந்து கொள்ளாமல்  வருகின்ற காதல்  பின்னர் அவர்களின் வாழ்ககையை சிக்லுக்க உளளாக்குகின்றது. இது தொடர்பாக யார் சொன்னாலும் காதல் வந்த பின் யாரும் கேட்டுக்கொள்வதில்லை.
 பெற்றோர்கள் படிப்பதற்காய் பள்ளிக்கு அனுப்புகின்ற போது அவர்கள் கௌரவத்திற்கு பங்கம் ஏற்படுத்துவதாக இந்த காதல் அமைகின்றது. பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று  சொல்லி சொல்லி சுதந்திரத்தை கொடுத்தால் இன்ற சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தாமல் காதல் என்ற பெயரில் மீண்டும் சிறை வாசம் செல்கின்றனர்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls