Saturday, March 24, 2012

காதலில் வெற்றி பெற வழிமுறைகள்

காதலை உணர்கிற தருணமும் காதலோடு நாம் வாழ்கிற தருணமும் மிகமிக அற்புதமானது. வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி காதல்தான் மனிதனை வழி நடத்துகிறது. அப்படிப்பட்ட காதலை சொல்ல பல வழிகள் உண்டு. முன்பெல்லாம் அன்னம் மயில் என பறவைகளை தூதுவிட்டு காதலை தெரிவித்தனர். இந்த நவீன யுகத்தில் பாதுகாப்பாக எவ்வாறு காதலை வெளிப்படுத்தினால் வெற்றிகரமாக்க முடியும் என்பதற்கு சில யோசனைகள் 
- நம் ஒவ்வொருவருக்குமே நமக்கு மிகவும் பிடித்தமானவர்களை சந்தித்த அந்த முதல் தருணம் மறக்க முடியாதது. அதனை நினைவூட்டும் விதமாக நம்முடைய செயல்கள் இருக்கவேண்டும்.

வன்னி இறுதிக்கட்ட போரில் அனுபவித்த கொடுமைகள் பற்றி இலங்கை பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்த திடுக்கிடும் தகவல்!

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது சிங்கள அரசு ராணுவத்துடன் நடத்திய கூட்டு கொலைகளின் கோரமுகத்தை சானல்-4 தொலைக்காட்சி வீடியோ மூலம் வெளியிட்டு உலக மக்களின் இதயத்தை அதிர வைத்தது.
இந்த நிலையில் நந்திக் கடலோரம் நடந்த ஈவு இரக்கமற்ற இனப்படுகொலைகள் குறித்து சுரேன் கார்த்திகேசு என்ற பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். இவர் இலங்கையில் இருந்து வெளியான 'ஈழ நாதம்' பத்திரிகையின் நிருபராகவும் புகைப்படக்காரராகவும் இருந்தார். இவர் வன்னிப்பகுதியில் 7 வருடங்கள் பத்திரிகையாளராக இருந்தவர். 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முள்ளி வாய்க்காலில் இறுதிப்போர் நடந்தபோது குண்டு வீச்சில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

இலங்கையின் மூத்த சகோதரியான இந்தியாவுக்கு இலங்கை மீது அன்பு இல்லை - அமைச்சர் திலான் பெரேரா

இலங்கையின் மூத்த சகோதரியான இந்தியா இலங்கை மீது அன்பு இல்லை என்ற காரணத்திற்காக அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. தமிழ் நாட்டு மச்சானுடன் இருக்கும் திருமணம் பந்தத்தை காப்பற்றிக்கொள்ளவே ஆதரவு வழங்கியது என அமைச்சர் திலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹாலி-எல பிரதேசத்தில் நேற்று (23) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு புலிகளை தோற்கடித்த போது இந்தியா இலங்கை பெரும் உதவிகளை செய்தது. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் மச்சான் சின்ன சண்டையை போட்டார்.

Friday, March 23, 2012

வெளிநாடுகளுக்குச் சென்று இந்நாட்டிற்கு எதிராக நாட்டிற்கு எதிராக கருத்துக்களை கூறும் ஊடகவியலாளர்களின் கை கால்களை உடைப்பேன் - மேர்வின் சில்வா!

வெளிநாடுகளுக்குச் சென்று இந்நாட்டிற்கு எதிராக பல்வேறு கருத்துகளை கூறும் ஊடகவியலாளர்கள் நாட்டிற்குள் கால்வைத்தால் அவர்களின் கைகால்களை தான் உடைப்பார் என பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.
பொத்தல ஜயந்த எனும் ஊடகவியலாளரை நான்தான் இந்நாட்டிலிருந்து விரட்டினேன். இத்தகைய ஊடகவியலாளர்கள் அனைவரும் நாட்டிற்குள் கால்பதித்தால் அவர்களின் கால் கைகளை உடைப்பேன்' என அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்தார்.

இலங்கையின் மத்தியஸ்தத்தை வரவேற்கும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி

மாலைதீவில் தற்போது நிலவும் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இலங்கையிகன் மத்தியஸ்தத்தை வரவேற்பதாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள உயர்மட்ட குழுவினரிடம் கலந்துரை யாடுவதற்காக நஷீட் நேற்றைய தினம் நாட்டிற்கு வருகைத்தந்திருந்தார். மாலைதீவின் முன்னாள் ஜனாபதி இன்று முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடினார்.

அந்தமானில் உணவுக்காக நிர்வாணப்படுத்தப்பட்ட பூர்வகுடிகள்

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பூர்வ குடிகளான ஜாரவா பழங்குடியினப் பெண்களை ஒரு வேளை உணவுக்காக கட்டாயப்படுத்தி அரை நிர்வாண‌ நடனம் ஆடவைக்கப்பட்ட நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களிடையேயும் நாகரிக சமுகத்தின் மீது அக்கறை விருப்பம் கொண்டுள்ளோரிடையேயும் பலத்த அதிர்வுகளை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்த அவலத்தை முதன்முதலாக உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது தி அப்சர்வர் தி கார்டியன் ஆகிய ஆங்கில ஊடகங்களகும்.
அக்காணொளியின் மூலம் பெண்களும் சிறுவர்களும் கட்டாயப்படுத்தப்பட்டு நடனமாட வைக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. அவர்கள் மீது பணமும் உணவுப்பொட்டலங்களும் வீசி எரியப்படும் காட்சி நாகரிக சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் நம்முடைய நிலையை சுய விமர்சன‌ம் செய்து கொள்ள வேண்டுமென்பதை கட்டயமாக்குகிறது.

நண்பனுக்கு துரோகம் செய்த பூனை youtube இல் ஹிட்டான வீடியோ

ஒரு பரணில் அதன் விளிம்பில் பூனை ஒன்று யோசித்துக் கொண்டு இருந்தது. கீழே பாய்வோமா விடுவோமா என்று தான் கீழே பாய்வதற்கு குறித்த பூனை கவனமாக அடிமேல் அடி எடுத்து வைத்துக் கொண்டு இருந்தது. ஆறு மாசங்களே ஆன இந்தப் பூனை பயத்தில் உறைந்து போய் இருந்தது.
மெது மெதுவாக அடியை வைத்து தனது ஐந்தாவது அடியை வைக்கும் நிலையில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls