Saturday, March 3, 2012

பூமி தேவனால் உண்டானது


ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் உருவாகினார். பூமி ஒழுங்கு இல்லாமலும் ஒன்றும் இல்லாததுமாய் கானப்பட்டது. எங்கும்
இருள் சூழ்ந்திருந்தது. கடவுள் ஆவியானவராய் தண்ணீரின் மேல் அசைவாடிக்கொன்டிருந்தார் கடவுள் வெளிச்சம் உண்டாகுக என்றார் வெளிச்சம் உண்டானது.வெளிச்சத்தை ‘பகல்’ என்றும் இருட்டை ‘இரவு’ என்றும் பெயரிட்டார். இருளும் ஒளியும் சேர்ந்து முதல் நாளாயிற்று.

இரண்டாம் நாள்
பின்பு பூமியிலிருந்த நீரை இரன்டாகப் பிரித்து மேலிருக்கும் நீரான மேகங்களுடன் சேர்த்து ஆகயத்தை உருவாக்கினார். இதற்கு ‘வானம்’ எனப் பெயரிட்டார். இருளும் ஒளியும் சேர்ந்து இரண்டாம் நாளாயிற்று.

இந்தோனேசியாவில் சோழர் கால சைவ கோவிலின் சிதைவுகள் கண்டுபிடிப்பு!


சோழர் காலத்துக்கு உரிய சைவ ஆலயம் ஒன்றின் சிதைவுகள் அகழ்வு ஆராய்ச்சி நிபுணர்களால் இந்தோனேசியாவில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன.இந்த ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை ஆனது.

சிவபெருமான் விநாயகர் ஆகியோரின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இந்த ஆலயத்தை ஒத்த ஆலயங்கள் இதற்கு முன்னர் இங்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டு இருக்கவில்லை.
இதனால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என நிபுணர்கள் விளக்கம் தருகின்றார்கள்.

Thursday, March 1, 2012

காதல் வந்தால் வயிற்றுக்குள் வண்ணத்துப்பூச்சி பறக்கும் : விஞ்ஞானிகள் தகவல்!

லட்சம் பூக்கள் பூத்ததைப்போல உணர்வுகள் தோன்றுகிறாதா? வயிற்றுக்குள் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கிறதா? அப்படீன்னா வடிவேலு சொல்றதைப் போல உங்களுக்கும் லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சி என்கின்றனர் விஞ்ஞானிகள்.காதல் என்பது காதலர்களுக்கு பலதரப்பட்ட உணர்வுகளை ஏற்படுத்தினாலும் காதல் உணர்வுகளை வலி நிவாரணியைப் போல வேலை செய்யும் என்றும்இ போதைப் பொருளுக்கு சமமானது என்றும் விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு சென்றவர்கள் திரும்பியதி்ல்லை

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு :  திகிலூட்டும் உண்மைகண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும் அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள் இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற துர்கானா ஏரி கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால் ஒரு பகுதி ஆவியாகிறது.

பாதுகாக்கப்பட வேண்டிய யாழ்ப்பாணத்தின் தனித்துவம் மிக்க சொத்து

மக்கள் மனதை கவரக்கூடியவை கலை வடிவங்கள். இந்த கலை வடிவங்கள் சமூகத்திலிருந்து  தோன்றி சமூகத்திலேயே நிலைத்து நிற்பன.
சமூகத்தின் நிஜ விம்பத்தை பிரதிபலிப்பதாக அன்று கூத்துக்கள் காணப்பட்டன. அன்றாடம் வேலைப்பளுவை தாங்கிய மக்களுக்கு உற்சாகத்தைத் தூண்டி, உள்ளத்தில் புதையுண்டு கிடக்கும் வேட்கைகளுக்கு விடுதலை கொடுத்து அன்பையும் அனுதாபத்தையும் வெளிப்படுத்தி மக்களை மகிழ்விக்கும் பண்பைக் கொண்டவை கூத்துக் கலைகள். கிராமம் கிராமமாக அரங்கேற்றப்பட்ட கூத்துக்கலை கொஞ்சம் கொஞ்சமாக  மறைந்து செல்லும் நிலை தோண்றியுள்ளது.

பச்சிலைப்பள்ளி... தொடர் அவலத்தின் ஒரு பதிவு

இடப்பெயர்வுகள், படுகொலைகள், இழப்புக்கள் ஒன்றும் தமிழ் மக்களுக்கு புதியவை இல்லை. அவர்களது வாழ்வியலில் ஒரு அங்கமானவை. எப்போதும் எதிர்பார்த்துக் காதிதிருப்பவை. இதன் மற்றொரு பதிவு தான் பச்சிலைப்பள்ளி மக்களின் அவலம். 2000.03.26 நள்ளிரவு பச்சிளைப்பள்ளி; துப்பாக்கி வேட்டுச்சத்தங்களால் அதிர்ந்தது. எறிகனையின் சிதறல்கள் தலைக்கு மேலே சீறிக்கொண்டு சென்றன. எங்கும் பரபரப்பு. எங்கும் அவலக்குரல். எங்கு ஓடுவது என்று தெரியாமல் கைகளில் அகப்பட்டவற்றை எடுத்துக் கொண்டு கால்போன போக்கில் நடந்த மக்களுக்கு தஞ்சமாக சாவகச்சேரி கிடைத்தது.
800 மேற்பட்ட குடும்பங்கள் நடைபயனமாய் தமது சொந்த மண்ணைவிட்டு சென்றனர். நீண்ட கால இடப்பெயர் வாழ்வு அம்மக்களது பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டிப் போட்டது.

Wednesday, February 29, 2012

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம்!

இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்பது ஆகும்
இப்போர் விமானத்தை உருவாக்கு கின்றமைக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வழங்கி இருந்த நிதிப் பங்களிப்புக் காரணமாகவே இப்பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது.  இப்போர் விமானம் குறித்த தகவல்கள் மிகவும் சுவாரஷியமானவை.
முன்னைய கால விமானங்கள் 100 குதிரை வலு என்ஜின்களுடன் இயங்கி வந்தன. இவை மரம் துணி வயர்கள் போன்றவற்றால் ஆக்கப்பட்டு இருந்தன.
முதலாம் உலகப் போர் இடம்பெற்ற காலம். எதிரிகளை வேவு பார்ப்பதற்கும் குண்டு வீசுவதற்கும் சிறந்த பொறியாக விமானம் கண்டு கொள்ளப்பட்டது. ஆனால் மேற்சொன்ன ரக விமானங்கள் அவற்றின் வடிவமைப்புக் காரணமாக எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகின.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls