Wednesday, April 11, 2012

உலகின் மிகச்சிறிய கோழி முட்டை: கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது

இங்கிலாந்தின் டெர்பிஷயர் பகுதியில் உள்ள பேக்வெல் என்ற இடத்தில் ஹாரி இவான்ஸ்(வயது 58) என்பவர் கோழி பண்ணை வைத்துள்ளார்.
அவரது பண்ணையில் உள்ள ஆர்பிங்டான் என்ற வகையை சேர்ந்த கோழி மிகச்சிறிய முட்டை இட்டுள்ளது.
உலகிலேயே இவ்வளவு சின்னதாக கோழி முட்டை போட்டது இதுதான் முதல் முறை என்பதால் கின்னஸ் சாதனையில் இடம் பெற உள்ளது.
இதுபற்றி இவான்ஸ் கூறுகையில் ஒருநாள் காலை வழக்கம் போல முட்டைகளை சேகரிக்க பண்ணைக்கு சென்றேன். என்னை பார்த்தவுடன் இந்த கோழி நகர்ந்தது. அங்கு மிகமிக சிறிய முட்டை ஒன்று இருந்தது.

வேறு பறவையின் முட்டையாக இருக்கலாம் என்று நினைத்தேன். கோழி முட்டைதான் என்பதை உறுதி செய்த பிறகு கின்னஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்தேன். இதுவரை கின்னஸ் சாதனை பட்டியலில் கோழி முட்டை இடம்பெற்றதில்லை என்றார்கள்.

இந்த முட்டை பற்றிய விவரத்தை சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை என்றும் கூறினார்கள். என் கோழியின் சாதனை எப்படியாவது கின்னஸில் இடம்பெற்றுவிட வேண்டும் என விரும்பினேன். ஒருவழியாக ஒப்புக்கொண்டார்கள்.

முட்டையை மிக பாதுகாப்பாக பிரிட்ஜில் வைத்து பராமரித்து வருகிறேன். கோழிக்கு ஒன்றரை வயது ஆகிறது. இதுவரை வழக்கமான சைஸில்தான் முட்டை போட்டது. என்ன காரணத்தாலோ சிறிதாக போட்டிருக்கிறது என்றார்.

முட்டை லேசான பழுப்பு நிறத்தில் இருக்கிறது. பொதுவாக முட்டைகள் 5.7 செமீ நீளம் 4.4 செமீ சுற்றளவு 57 கிராம் எடையுடன் இருக்கும். இது 2.5 செமீ நீளம் 2 செமீ சுற்றளவு 7.3 கிராம் எடைதான் இருக்கிறது என்று கின்னஸ் அதிகாரிகள் கூறினர்.




0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls