Friday, December 30, 2011

குளிர் நிலவில் ஊட்டிப்பயணம்

மாற்றங்களை உணரவும் பழகிக்கொள்ளவும் தெரிந்தவர்கள் மனிதர்கள். கால மாற்றத்திற்கு ஏற்ப பச்சோந்தியாய் மாறத் தெரிந்தவர்கள். அப்படி பச்சோந்தியாய் மாறப் பழகிக் கொள்ளும் புதிய அனுபவம்.
கொட்டும் மழையிலும் கடும் குளிரிலும் வாழ இசைவாக்கிக் கொண்டோம் மக்களின் வாழ்வதற்கு ஏற்ற காலநிலைப்பிரதேசத்தில் வாழ்ந்த நாம் இந்தியாவின் குளிர் நிறைந்த பிரதேசமான நீலகிரி மாவட்டம் ஊட்டிப்பகுதிக்கு சென்றோம். மலை உச்சி நோக்கி எமது பயனம் அமைந்திருந்தது. வளைந்து நெளியும் பாதை நடுவே பயனித்தோம். குளிர் காற்று எங்களை மெதுவாக வருடியது. பேரூந்து ஜன்னல் கதவுகள் அடைக்கப்பட்டன மூடி அடைக்கப்பட்ட பேரூந்தில் நம் பயனம் இருந்தது. காற்றிற்கு ஏது வேலி என்பது போல குளிர் காற்று மீண்டும் எங்களை வருடியது

Monday, December 19, 2011

பூமியில் பார்த்து ரசிக்ககூடிய ஏழு இயற்கை அதிசயங்கள் — Amazing Nature


இயற்கையின் அற்புதமான படைப்புகள் 

1. அமேசன் மழைக்காடுகள்
2. ஆல்ப்ஸ்

3. மத்திய தரை கடல்
4. ஏஞ்சல் நீர்வீழ்ச்சி
5. சஹாரா பாலைவனம்
6. கிரீன்லாந்தின் பனியாறுகள்
7. ஆப்பிரிக்க சமவெளிகள்

1. அமேசன் மழைக்காடுகள்
Amazon Rainforest
அமேசன் மழைக்காடுகள் பிரேசிலில் அமைந்துள்ளது, இது உங்களை பயங்கர கனவுகளுக்கு அப்பால் உங்கள் கவர்வது இழுக்க கூடியது. மனிதர்களின் காலனியாதிக்கம் இல்லாத இடமாக உள்ளது.உலகின் மிக பெரிய வெப்பமண்டல மழைக்காடுகள், அது வடக்கு முழுவதும் பரவியிருக்கிறது. வலிமைமிக்க அமேசான் பெரிய ஆறுகளில் உன்னதமான மரங்களையும் கொண்டுள்ளது. உலகின் பகுதியில் மட்டும் 3% உலகின் தாவர மற்றும் விலங்கு இனங்கள் 75% இங்கு தான் உள்ளது.

Sunday, December 18, 2011

செத்துயிர் போயினும் தழிழுக்கு புத்துயிர் கொடுடா தழிழா..........

தாய்மொழியும் தாய் நாடும் இருவிழி என்பதை
நாய் தழிழா நீ இன்னும் அறியாதது சரியோ?
பேய் போலதனை சுமந்தாடுதல் முறையோ?
தேன் சொட்டும் தித்திக்கும் தழிழ் பெயர் பலவிருக்க
சீழ் வொட்டி சிதறுகின்ன சிறுபெயர்கள் உனக்கெதற்கு..
வாய் மணக்கும் தழிழ் மொழியில் அழகுப்பெயர் பலவிருக்க
பால்பட்ட பொருளுரைக்கும் பெயர்சூட்டும் உத்தமர்க்கு நாவெதற்கு....
தழிழ் மொழி நெடுங்கணக்கில் எழுத்தவை போதாதென்று..
உயர் திணையோடு அஃறிணைக்கும்..
இஸ் என்றும் புஸ் என்றும் காற்றுதும் உச்சரிப்பில்
என்னடா பெயர் சூட்டுகிறாய்....

Saturday, December 17, 2011

பேசுதற்கெளிய பண்டம் மட்டுமா பெண்ணியம்?


சூரியன் உதிப்பதைப்போல், காற்று வீசுவதைப்போல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல் என்று கம்யூனிசத்தின் மீதான அவதூறுகளைக் கூறலாம். அந்த அளவுக்கு குப்பை வீசியே மறைத்துவிடும் எத்தனத்தில் விதவிதமான புனைவுகளும், பொருளற்ற பொய்களும், பொருந்தா விளக்கங்களும் நாளும் பொழிந்து கொண்டே இருக்கின்றன. இது போன்ற அவதூறுகளுக்கு விளக்கமளிக்க முனைந்தால், வேறு எதையும் செய்யமுடியாத அளவுக்கு கம்யூனிஸ்டுகளின் நேரம் அவர்களுடையதாக இருக்காது. அதேநேரம் அத்தனை அவதூறுகளுக்கும் மறுக்கவியலா முறையில் தகர்ப்புகளும், தரவுகளும் தரப்பட்டிருக்கின்றன. என்றாலும் அவதூறுகளுக்கான தேவை குறைவதே இல்லை. ஏனென்றால் அவதூறுகள் விமர்சனத்திலிருந்தோ, ஆய்விலிருந்தோ கிளைப்பதில்லை. மாறாக கம்யூனிச எதிர்ப்பிலேயே தம்முடைய இருப்பு இருக்கிறது எனும் நிலையிலிருந்து கிளைக்கிறது. அதனாலேயே அவதூறுகள் மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும் கொட்டப்படுகின்றன.

Wednesday, December 14, 2011

தென்னிலங்கை சுற்றுளாப்பயனிகளை கவரும் நாகவிகாரை

 பனை மரக்காட்டுக்கு பெயர்போண யாழ்ப்பாணத்தில் சுற்றுலா பயனிகளின் வருகை இன்று அதிகரித்துள்ளது. தென்னிலங்கை சுற்றுளாப் பயனிகளை அதிகம் கவரும் இடமாகவும் வரலாற்று இடமாகவும் காணப்படுவது நாக விகாரை.  பௌத்த பாரம்பரியத்தை எடுத்தியம்பும் விகாரைகள் தென்னிலங்கையில்  பல இடங்களில் காணப்படுகின்றன.  வடபகுதியிலும் குறிப்பிட்ட சில இடங்களில் இவ்விகாரைகள் காணப்படுகின்றன. குறிப்பாக நயினாதீவு யாழ்நகர் கிளிநொச்சி போன்ற இடங்களில் பௌத்த பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பௌத்தவிகாரைகள்  கட்டப்பட்டுள்ளன.

Tuesday, December 13, 2011

யாருக்காக ஏழாம் அறிவு.........

இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளாய் நம்மை இங்கு நாமே தொலைத்தோமே, நம்ப முடியாதா, நம்மால் முடியாதா, நாளை வெல்லும் நாளாய் செய்வோமே, யாருமில்லை தடைபோட உன்ன மெல்ல எடை போட நம்பிக் கையில் நடை போடச் சம்மதமே, என்ன இல்லை உன்னோடு, ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே, வந்தால் மலையாய் வருவோம், வீழ்ந்தால் விதையாய் விழுவோம் மீண்டும் மீண்டும் எழுவோம்''
இன்னும்  என்ன தோழா எத்தனையோ நாளாய் நம்மை இங்கு நாமே தொலைத்தோமே, நம்ப முடியாதா, நம்மால் முடியாதா, நாளை வெல்லும் நாளாய் செய்வோமே, யாருமில்லை தடைபோட உன்ன மெல்ல எடை போட நம்பிக்கையில் நடை போடச் சம்மதமே, என்ன இல்லை உன்னோடு, ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்தி டுமே, வந்தால் மலையாய் வருவோம், வீழ்ந்தால் விதையாய் விழுவோம் மீண்டும் மீண்டும் எழுவோம்''

மோனாலிசா மொடல் அழகியின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு

இத்தாலியில் மோனாலிசா மொடல் அழகியின் மண்டை ஓடு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மாறாத புன்னகை சிந்தும் மோனாலிசாவின் ஓவியத்தை லியோனார்டோ டா வின்ஸ்கி என்ற ஓவியர் வரைந்தார். இந்த படத்தை வரைய பிரபல கோடீசுவரரும் பட்டு வியாபாரியுமான பிரான்சிஸ்கோ டெல் ஜியோகாண்டோவின் மனைவி லிசா கிரார்டினி மொடலாக இருந்தார். கடந்த 1542ம் ஆண்டு ஜூலை மாதம் தனது 63வது வயதில் மரணம் அடைந்தார். அவரது கல்லறை புளோரென்ஸ் நகரில் உள்ளது. அதை இத்தாலியின் பொலோக்னா பல்கலைக்கழக அகழ்வியல் ஆராய்ச்சியாளர்கள் தோண்டினர். அதில் இருந்து ஒரு பெண்ணின் மண்டை ஓடும்இ இடுப்பு எலும்பும் கண்டெடுக்கப்பட்டது.

சாய்விலிருந்து தடுத்து நிறுத்தப்படும் பைசா கோபுரம்.....

அதிசயங்களுள் ஒன்று இத்தாலியின் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம். சுமார் 14500 மெட்ரிக் டன் எடையும் 183 அடி உயரமும் கொண்ட இந்த கோபுரத்தின் வயது 838 ஆண்டுகள்.ஆண்டுதோறும் உலகெங்கிலுமிருந்து 10 லட்சம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் இந்த கோபுரம் தன்னிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்து வருகிறது என்பது தான் பல நூற்றாண்டுகளாக உலக மக்களை கவலை அடைய செய்வதாக உள்ளது. ஏழு அடுக்குகளைக்கொண்ட இந்த கோபுரம் வெறும் 10 அடி அஸ்திவாரத்தில் மட்டுமே அமைந்துள்ளது மட்டுமல்லாமல் இவ்வளவு எடையை தாங்கும் அளவிற்கு அந்த இடத்தின் மண் வலுவானதல்ல என்பதும் தான் இந்த கோபுரம் சாய்வதற்கான காரணங்களென்று கூறப்படுகிறது.

Monday, December 12, 2011

.யாழில் காணாமல் காணமல் போன லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்! கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று யாழில் காணாமல் யாழில் காணமல் போன லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் ஆகியோர் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரப்பாட்டமொன்று இடம்பெற்றது. நாம் இலங்கையர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்பாட்டத்தில் நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல் பிரேமரத்ன உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

Friday, December 9, 2011

New publisher application process - Inside AdSense

Sri Lanka Navy celebrates its 61st Anniversary yesterday

sri Lanka Navy celebrates its 61st Anniversary yesterday. 09th December 2011. Celebrations, held in accordance with naval traditions, consist of religious and social functions conducted to coincide with the Navy Day, which falls on 09th December. Being a brave and successful maritime force observing the standard naval protocols and executing a tremendously vital role in safeguarding the maritime interests of the nation, Sri Lanka Navy played a pivotal role in ushering sustainable peace to the Motherland. The Navy traces its genesis as far back as the year 1937 when it began its voyage under the name of Ceylon Naval Volunteer Force (CNVF). Thereafter, it got absorbed into the Royal Navy after the World War II as the Ceylon Royal Navy Volunteer Reserve (CRNVR), which eventually turned out to be the Royal Ceylon Navy on 09th December 1950. In 1972, with the introduction of the first republican constitution, the Royal Ceylon Navy took on its present name, Sri Lanka Navy.

Thursday, December 8, 2011

ராசி பலனில் உன்மை உள்ளதா ? அறிவியல் சொல்லும் விளக்கம்

அந்தச் சட்டை எனக்கு இராசியானது இந்த சைக்கிள் அவனுக்கு இராசியானது அந்த வீடு அவர்களுக்கு இராசியானது இந்தப் பொண்ணு இராசி சரியில்லை என்று பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏன் நீங்களேகூடச் சொல்லியிருப்பீர்கள். இப்படிப்பட்ட இராசி நம்பிக்கை உண்மையா? என்றால் இல்லவே இல்லை என்பதே சரியான பதில். ஆனாலும் படித்தவர்கள்முதல் பாமரர்கள்வரை இந்த நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது. இது ஒரு தனி மனிதனின் ஒரு பொருள் சார்ந்த நம்பிக்கையாக இருக்கும்வரை அதனால் அவனுக்கோ பிறருக்கோ அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் அதுவே ஒரு நபர் மீதான நம்பிக்கையாக இருந்தால் அதனால் ஏற்படும் பாதக விளைவுகள் மிக மோசமாக இருப்பதுண்டு.

Wednesday, December 7, 2011

வரலாறு காணாத அதிசயம்: மற்றுமோர் பூமி கண்டுபிடிப்பு !

நட்சத்திரமொன்றிலிருந்து உயிரினங்கள் வாழக்கூடிய வலயத்திலுள்ள, பூமி போன்ற கிரகமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா நேற்றுத் தெரிவித்துள்ளது. கெப்ளர் விண்வெளித் தொலைக்காட்டி மூலம் கண்டுபிடிக்கப் பிடிக்கப்பட்ட இந்த கிரகத்திற்கு கெப்ளர் 22-பி ( Kepler 22-b) என பெயரிடப்பட்டுள்ளது. எமது சூரியனைப் போல் அல்லாத நட்சத்திரமொன்றை கெப்ளர் 22-பி கிரகம் சுற்றி வருகிறது. ஒரு தடவை அதன் சொந்தச் சூரியனை சுற்றுவதற்கு 290 நாட்கள் செல்கிறது.

Sunday, December 4, 2011

இணையத்தளங்களின் அராயகமும் ஈழத்தை கற்பளிக்கும் இணையத் தளங்களும்

மானம் மலிவு விற்பனை இலங்கை தமிழ் இணைய ஊடகம்
இன்று யாழ்ப்பாணம் என்றாலே கலாச்சார சீரழிவுகளின் மைய  நகரம் என்ற ஒரு கருத்து மாயை உலக மக்கள் மத்தியிலே தோன்றியுள்ளது. யாழ் மக்களை மதித்தவர்கள் இப்போது கேவலமாக பார்க்கத் தொடங்கியுள்ளார்கள். இந்த பெருமையெல்லாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இப்போது வெளியில் இருந்து இயங்கும் நடுநிலைவாத, நேர்மையான, யாழ் மக்களின் கலாச்சாரத்தின் தாங்கு தூண்களான தம்மை கூறும் சில தமிழ் இணைய ஊடகங்களையே சாரும்.

ஈழத்தில் பாரம் பரிய கலைகளுக்கு புத்துயிர் ஊட்டிய தென்னிந்திய கலைஞன் வேனு

 ஈழத்தில் கலைகள் அழிவடைந்து வருகின்ற காலத்தில் கலைகளுக்கு புத்துயிர் கொடுக்கும் இன்றைய இளம் கலைஞர்களின் ஆற்றுகையில் தென்னிந்திய நாட்டார் கலைஞன் ஆடல் அரசு வேனுவின் நெறியாள்கையில் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஒழுங்கமைப்பில் 04.12.2011 அன்று பிற்பகல் 3.30 மனியளவில் யாழ்ப்பான பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் அரங்கேற்றப்பட்டது. தென்னிந்தியாவின் பாரம்பரியம் மிக்க சில பிரதேசங்களின் கலைகள் ஈழத்தில் முன்பு கானப்பட்டபோதும் இன்று மறைவடைந்து வருகின்றது.

உயிருடன் புதைக்கப்பட்டு 'மரண பாடம்' கற்கும் மருத்துவ மாணவர்கள்..

தாய்வானைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணரச் செய்வதற்காக சவப்பெட்டியில் வைத்து பல நிமிடநேரம் உயிருடன் புதைக்கப்படுகின்றனர். 'ரெண்டே மருத்துவ கல்லூரியில்' பதின்மர் வயதான மருத்துவ மாணவர்களுக்கே இந்த விசித்திர பாடம் நடத்தப்படுகிறது. மரணம் தொடர்பாக தெரிந்துகொள்வதற்கு இந்த பாடம் அவசியம் என விரிவுரையாளரகள் கூறுகின்றனர்.இதில் பங்குபற்றும் மாணவர்கள் உயிலொன்றை எழுத வேண்டும்.

Saturday, December 3, 2011

சிறந்த சுற்றுலா நாடுகளில் இலங்கை 6ஆவது இடம்.

சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த நாடுகள் பட்டியலில் இலங்கை 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தேசிய புவியியல் பயணர் சஞ்சிகையின் புதிய கணிப்பீட்டின் படியே இலங்கை 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையின் மத்திய மலை நாட்டில் உள்ள அழகிய தேயிலைத் தோட்டங்கள், மலைகள் மற்றும் பாரம்பரிய தளங்கள், கடற்கரைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Friday, December 2, 2011

300வருடங்கள் பழமை வாய்ந்த உல்லாச விடுதி மக்களின் பார்வைக்கு

300வருடங்கள் பழமை வாய்ந்த இங்கிலாந்து மன்னனின் உல்லாச விடுதி மக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் எட்டாவது மன்னனான ஹென்றியே இந்த உல்லாச மாளிகைக்கு சொந்தக்காரர் ஹென்றி மன்னனால் கட்டப்பட்ட இது முன் எப்போதும் காணப்படாத மிக அபூர்வமான கலை அம்சங்களைக் கொண்டதாக காணப்படுவதாக கட்டிடக் கலைஞர்கள் கூறுகின்றனர்.

அன்ரன் பாலசிங்கத்தை ஓரங்கட்ட நினைத்த விடுதலைப் புலிகள்? : விக்கிலீக்ஸ்

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கத்தால் மேற் கொள்ளப்பட்ட சமாதான நகர்வுகள் பற்றி விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்குள் முரண்பாடுகள் தோன்றியிருந்தன என்று அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்தார். இவ்வாறு 2002 ஆம் ஆண்டு ஒக்ரோபர் முதலாம் திகதி அப்போதைய அமெரிக்கத் தூதர் அஸ்லிவில்ஸ் அனுப்பியுள்ள கேபிள் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.அச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

Thursday, December 1, 2011

மைக்கேல் ஜாக்சனின் மரணம் ஒரு கருண‌ைக்கொலை!; மருத்துவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை. g

உலகப்புகழ் பெற்ற மைக்கேல் ஜாக்சனின் இறப்பிற்கு காரணமாக இருந்த மருத்துவருக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொப் மியூசிக் மூலம் உலக இளைஞர்கள‌ை தன்வசமாக்கியவர் மைக்கேல் ஜாக்சன். இவரது இசை மற்றும் பாடலுடன் கூடி நடனத்தின் மூலம் இளைஞர்கள‌ை தன்வசமாக்கினார்.இதனிடையே கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் தன்னுடைய வீட்டில் திடீரென மரணமடைந்தார். இவரது மரணம் உலகத்தையே உலுக்கியது. ஜாக்சனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவரது குடும்ப மருத்துவர் முர்ரே மீது சந்தேகம் இருப்பதாகவும் ஜாக்சனின் குடும்பத்தினர் தெரிவித்து வந்தனர்.

அமேசன் மழைக்காடு எப்படி உருவானது தெரியுமா.........?


உலகின் மிகப் பெரிய மழைக்காடுகள் நிறைந்த பகுதி அமேசான்.நூறு சதவிகித ஓக்சிஜன் கிடைப்பதும் இங்கே தான் .ஆகவே இவ் பதிவில் அமேசன் மழைக்காடுகள் எவ்வாறு உருவானது என்பதை பார்ப்போம்.பூமி பிறந்து சுமார் 450 கோடி ஆண்டுகள் ஆகியிற்று.380கோடி ஆண்டுகள் வரை பூமியில் எந்த உயிரினமும் தோன்றவில்லை.நெருப்புக் குழம்பான பூமி குளிர்ந்து பாறையாகியது.கடல்கள் உருவாகின.அதன் பிறகு உயிர்கள் உருவாகின.ஆனால் அப்போது ஓக்சிஜன் துளிகூட புமியில் இல்லை.
அப்படியென்றால் எப்படி சுவாசிக்க முடியும்?அப்போதுள்ள உயிரினங்கள் ஹைட்ரஜனை மட்டுமே சுவாசித்தன.தாவரங்கள் பூமியில் தோன்றி பிறகுதான் அவை உணவு தயாரிக்கும் போது ஓக்சிஜன் உருவானது. ஓக்சிஜன் உருவாகி சுமார் ஜம்பதுகோடி ஆண்டுகளாகின்றன.

புதன் செவ்வாய் கிரகங்களின் மனிதர்கள் வாழ்ந்தனரா?........

பூமியில் உயிரினங்கள் வாழ்வதைப் போன்று புதன் செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? போன்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் பூமியின் அண்டை மண்டலத்தில் வானில் இருந்து விழுந்த நட்சத்திர எரிகற்களைச் சோதனையிட்டதில் அவற்றில் உள்ள பக்டீரியாக்களுடன் பூமியில் வாழும் மனித பக்டீரியா அணுக்களுக்குத் தொடர்பு இருப்பதை நாசா விஞ்ஞானி டாக்டர் ரிச்சர்ட் ஹூப்பர் கண்டுபிடித்துள்ளார்.பூமியில் எப்படி மனித வாழ்க்கை தொடங்கியது என்பதை நட்சத்திர சரிகல் ஆதாரத்துடன் கிடைத்துள்ள பூமியின் அண்டை மண்டல அந்நிய மனித வாழ்க்கை முறை விபரித்துவிடும் என்று ஹூப்பர் தெரிவித்துள்ளார்.

Wednesday, November 30, 2011

அவசரம் {ஈழத்து மண்வாசனை}


காதலிக்கின்றீர்களா ஓடிப்போய் திருமணம் செய்யவேண்டிய நிலை வருமா? பாருங்கள்
இந்திய திரைப்படங்களை பார்த்து பழகிய நம் ஈழத்தவர்களுக்கு தம்மாலும் திரைப்படங்களை தயாரிக்க முடியும் என களத்தில் இறங்கியுள்ளது நம் இளையர்சமுதாயம். தடுமாறிக் கொண்டிருக்கும் இளையர் சமுதாயத்தின் வாழ்ககையை பிரதிபலிப்பதாய் அமைந்திருந்தது. புது முகங்களின் அறிமுகம் ஜதார்த்ததுக்கு முரனாக அமைந்திருந்த போதும் வழமையாக பிரயோகிக்கின்ற மொழிநடையில் இத்திரைப்படம் அமைந்திருந்தது. அவசரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எதிர்காலத்தில் தவறாக அமைகின்றமையை எடுத்துக்காட்டுகின்றது.
நன்பர்களுடன் ஊர் சுற்றித்திரியும் இளையர் கூட்டம் பருவக்காய்ச்சலால் பெண்கள் பின் சுற்றித்திரிவதும் பிரச்சினை என்று வந்தவுடன் மச்சான் நாங்க இருக்கோம் நீ பயப்பிடாத என்று பக்கம் நின்று உசுப்பேத்தும் நண்பர் கூட்டம். பார்ப்பதற்கு ஆர்வத்தினை துண்டுகின்றது.  புதுமுககதாநாயகன் சிர்த்தாத் காதல் மன்னனாக வலம் வரும் காட்சிகள் பிரமாதம். கஜதீபனின் அயக்கத்தில்  கன்னித்திரைப்படமாக வெளிவந்துள்ளது.காதல் மயக்கத்தில் அவசரமாக எடுக்க்படும் முடிவுகள் நிம்மதியை சந்தோசங்களை சிரிப்புக்களை காணமுடியாத தோற்றுவிக்க முடியாத நிலைக்கு இட்டுச்செல்லும் என்பதனை எடுத்துக்காட்டுகின்றது. கிளைமாக்ஸ் காட்சிகளை விரிவாக காட்டாவிட்டாலும் சொல்லவரும் விடயங்கள் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது.

இசை உலகின் ஞானி மொஷாற்


இசை உலகின் ஞானி (musical maestro) என பலநூறு வருடமாக போற்றப்படுபவர் "மொஷாற்" (Mozart).இவர் (Wolfgang Amadeus Mozart ) 1756 ம் வருடம் ஜனவரி 27 ம் திகதி ஒஸ்ரியா நாட்டின் Salzburg எனும் இடத்தில் பிறந்தார்.இவருடைய தந்தையார் லியொபொல்ட் மொஷாற் ( Leopold Mozart) தொழில் வயலின் வாத்தியம் , இசையமைப்பது (composer) என்பதுடன் மொஷாறின் ஒட்டுமொத்த குடும்பமும் இசை பின்னணி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இயற்கையிலேயே இசை ஞானம் கொண்டிருந்த மொஷாற் தனது 5 வது வயதில் முதலாவது மெலோடியஸ் (melodious) இசை குறிப்பை வெளியிட்டார்.
மொஷாற் தனது முதலாவது சிம்பொனி இசையை 8 வயதாக இருக்கும் வேளை எழுதிமுடித்தார்.தனது இளமை பருவத்திலேயே பல தனித்துவமானதும் மிகவும் பிரபலமானதுமான 600 இசைக்குறிப்புகளை எழுதிமுடித்தார்.

Tuesday, November 29, 2011

கலைகளை வெறுக்கும் தந்தைக்கு எதிரான கலைகளின் மகன் இவன் மைக்கல் அஞ்சலோ (1475 - 1564)

கலைஞர்கள் பலர் காணப்பட்ட போதிலும் ஒரு சிலரே பிரபல்யத்தையும், சிறப்பையும் அடைக்கின்றனர். அச்சிறப்புக்கு அவர்களது தனித்துவமான ஆற்றல்களும் கலை நுட்பங்களுமே காரணமாக அமைகின்றன. அந்த வகையில் ஐரோப்பியக் கலைஞர்கள் கலைத்திறன் மிக்கவர்களாகவும் கலையுணர்வு மிகைத்தவர்களாகவும் காணப்பட்டனர். இவ்வகை கலைஞர்களின் ஒருவரான மறுமலர்ச்சிக்கால ஓவியர் மைக்கலாஞ்சலோ குறிப்பிடத்தக்க வராவார். புகழ் பெற்ற ஓவியர்களின் வாழ்க் கையை ஆராய்ந்தால், அவர் களது தந்தை, தாய், சகோதரர் என யாராவது ஒருவர் கலை துறையில் ஈடுபாடு கொண்டவர்களாகவோ அல்லது ஊக்கமளிக்கின்றவர்களாகவோ காணப்படுவர். ஆனால், கலைத் துறையில் ஈடுபாடில்லாத கலைத்துறையில் வெறுப்புக் கொண்ட ஒரு தந்தைக்கே இவர் மகனாகப் பிறந்தார். 1475 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி இத்தாலியிலுள்ள புளோரன்ஸ் நகரில் காசல் கப்aல் எனும் இடத்தில் பிறந்தார். இவர் தனது தந்தை கலைஞனாகக் கூடாதென தடை விதித்த போதும் சிறு வயதிலிருந்தே சித்திரம் வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

உலகையே அதிர வைக்கும் ஆத்திரேலிய ஊடகவியலாளர் ஜூலியன் பவுல் அசான்ச்


ஜூலியன் பவுல் அசான்ச் (Julian Paul Assange, பிறப்பு: 1971) என்பவர் ஆத்திரேலிய ஊடகவியலாளரும், வெளியீட்டாளரும் ஆவார்.விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை நிறுவி, அதன் முதன்மை ஆசிரியராகவும் பேச்சாளராகவும் உள்ளார். விக்கிலீக்சைத் தொடங்குவதற்கு முன்னர் இவர் இயற்பியல், கணிதவியல் மாணவராகவும் கணினி நிரலாளராகவும் இருந்தார்.அசான்ச் 20  06 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தைத் தொடங்கினார். இவர், ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானித்தான், ஈராக் போர்கள் குறித்த பெரும் எண்ணிக்கையிலானா இரகசிய ஆவணங்களைத் தனது இணையத்தளத்தில் கசிய விட்டதை அடுத்து, உலக அளவில் பெரும் கவனிப்புக்குள்ளானார். இவர், பல நாட்டு அரசுகளின் கண்டனத்துக்குள்ளாகியிருந்த அதே வேளையில், உலக அளவில் மனித உரிமை ஆர்வலரிடையே பிரபலம் பெற்றார். பல ஊடக விருதுகளைப் பெற்றுள்ளார்.அசான்ச் பல நாடுகளில் வசித்து வந்துள்ளார்.

இறந்த பின் ஓவியத்தால் தன்னை உலகிட்கு அடையளாம் காட்டியவர்

வின்சென்ட் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (Vincent Van Goh, 30 மார்ச் 1853 - 29 ஜூலை 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத (Post-Impressionist) ஓவியர். இவரது ஓவியங்கள் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். இவர் முதலில் கலைப் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார். பின்னர் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், மிக ஏழ்மையான மக்களைக் கொண்ட சுரங்கப் பகுதியொன்றில் சமயத் தொண்டு செய்தார். அங்குள்ள மக்களை இவர் வரையத் துவங்கினார். இங்கே தான் தனது முதல் முக்கியமான ஓவியமான உருளைக்கிழங்கு உண்போர் எனும் ஓவியத்தை வரைந்தார். மற்ற ஓவியர்களைப் போல் அன்றி தனது முப்பதாம் வயதுக்குப் பின்னரே இவர் ஓவியம் வரையத் துவங்கினார். இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே.

மனநோயால் பாதிக்கப்பட்ட வான்கா தனது காது மடலையே அறுத்துக் கொண்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கும் துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டுத் தற்கொலைக்கு முயன்றார். இரண்டு நாட்கள் கழித்து 1890 ஆம் ஆண்டு சூலை 29 ஆம் நாள் மனநிலை பாதிக்கப்பட்ட வான்கா மரண‌மடைந்தார். அவரது கடைசி வார்த்தை துயரம் என்றும் தொடரும் ‌என்பதாகும்.

மக்கள் ஆட்சி வரலாறு

உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்ச்சியைக் கொண்ட நாடக சுவிசர்லாந்து (Switzerland) விளங்குகிறது. இங்கு அரச மொழிகளாக ஜெர்மன் , பிரஞ்ச் , இத்தாலி , ரூமேனிய மொழிகள் நடைமுறையில் உள்ளது. உலகில் நிலத்தினால் சூழப்பட்ட 43 நாடுகளில் சுவிசர்லாந்தும் ஒன்றாகும். பேஃர்ண் ( Berne ) ஐ தலை நகராக கொண்ட சுவிசர்லாந்து மிகப்பெரிய நகராக சூரிஸ் (Zஜrich ) இனை கொண்டுள்ளது. பேஃர்ண் சமஷ்டி அமைப்புகளின் தலைநகராகவுள்ள போதிலும் ஜெர்னிவா (Geneva ) உடன் குறிப்பாக சூரிச் வர்த்த உலகில் அறியப்பட்ட நகரங்களாகவும் உள்ளன. சர்வதேச தொண்டு நிறுவனமான செஞ்சிலுவை சங்கம் (Red Cross), உலக வர்த்தக அமைப்பு (WTO) , சர்வதேச நியம ஸ்தாபனம் (ISO) , ஐக்கியநாட்டுகள் சபை (UN) இன் காரியலயம் ஒன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 

Friday, November 25, 2011

ஆய்வை முடித்துக்கொண்டார் சிவத்தம்பி

2000ஆம் ஆண்டில் தமிழக அரசு சிவத்தம்பிக்கு திரு.வி.க. விருதினை வழங்கிச் சிறப்பித்தது. விருதினைப் பெற்றுக்கொண்டு ஆற்றிய தமது உரையில் "சுவாமி விபுலானந்தா கா.சு.பிள்ளை தெ.பொ.மீ வையாபுரிப் பிள்ளை கணபதிப்பிள்ளை எனது நண்பன் கைலாசபதி என்ற கருடன்கள் பறந்த இந்தத் தமிழியல் வானில் நானும் ஓர் ஈயாகப் பறக்கிறேன்" என்று  தன்னடக்கத்துடன் தனது இருப்பைப் பதிவு செய்தார். அவையடக்கம் தமிழ் மரபுதான் அந்த அடக்கத்துக்குள் அவருடைய விரிவான ஆய்வுச் செயற்பாடுகள் கடலளவு பரந்து கிடக்கின்றன என்பதே உண்மை.
1932ஆம் ஆண்டு மே திங்கள் 10ஆம் நாள் டி.பி.கார்த்திகேசு வள்ளியம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தார் சிவத்தம்பி. பள்ளிப்படிப்பைத் தனது சொந்த ஊரான கரவெட்டியிலும் புகுமுக வகுப்பைக் கொழும்பு ஜாகிரா கல்லூரியிலும் பயின்றார்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls