Wednesday, December 14, 2011

தென்னிலங்கை சுற்றுளாப்பயனிகளை கவரும் நாகவிகாரை

 பனை மரக்காட்டுக்கு பெயர்போண யாழ்ப்பாணத்தில் சுற்றுலா பயனிகளின் வருகை இன்று அதிகரித்துள்ளது. தென்னிலங்கை சுற்றுளாப் பயனிகளை அதிகம் கவரும் இடமாகவும் வரலாற்று இடமாகவும் காணப்படுவது நாக விகாரை.  பௌத்த பாரம்பரியத்தை எடுத்தியம்பும் விகாரைகள் தென்னிலங்கையில்  பல இடங்களில் காணப்படுகின்றன.  வடபகுதியிலும் குறிப்பிட்ட சில இடங்களில் இவ்விகாரைகள் காணப்படுகின்றன. குறிப்பாக நயினாதீவு யாழ்நகர் கிளிநொச்சி போன்ற இடங்களில் பௌத்த பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பௌத்தவிகாரைகள்  கட்டப்பட்டுள்ளன.
நாகவிகாரையும் ஒன்றாகும். தென்னிலங்கை பௌத்த விகாரைகளின் தரத்திற்கு ஒப்பாக இவ்விகாரையும் அமைக்கப்பட்டுள்ளமையே இதன் சிறப்பிற்கு காரணமாகும். யாழ்ப்பாணம் வரும் தென்னிலங்கை பௌத்த மக்கள் கண்டு செல்லத் தவறாத இடங்களில் இவ் நாகவிகாரையும் ஒன்றாகும்.








0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls