Thursday, January 26, 2012

காதலில் வெற்றி எளிமையான டிப்ஸ்!

காதலை உணர்கிற தருணமும், காதலோடு நாம் வாழ்கிற தருணமும் மிகமிக அற்புதமானது. வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி காதல்தான் மனிதனை வழி நடத்துகிறது. அப்படிப்பட்ட காதலை சொல்ல பல வழிகள் உண்டு. முன்பெல்லாம் அன்னம், மயில், என பறவைகளை தூதுவிட்டு காதலை தெரிவித்தனர். இந்த நவீன யுகத்தில் பாதுகாப்பாக எவ்வாறு காதலை வெளிப்படுத்தினால் வெற்றிகரமாக்க முடியும் என்பதற்கு சில யோசனைகள் : நம் ஒவ்வொருவருக்குமே நமக்கு மிகவும் பிடித்தமானவர்களை சந்தித்த அந்த முதல் தருணம் மறக்க முடியாதது. அதனை நினைவூட்டும் விதமாக நம்முடைய செயல்கள் இருக்கவேண்டும். நாம் காதலிக்கிறோம் என்பதை விட நாம் காதலிக்கப்படுகிறோமா ? என்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் விரும்பும் நபரே உங்களை விரும்புகிறார் என்றால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் கிடையாது. உடனடியாக காதலை கன்பார்ம் செய்யும் நடவடிக்கையில் இறங்கவேண்டியதுதான்.

Wednesday, January 25, 2012

வீனஸ் கிரகத்தில் உயிரினங்கள்: ரஷ்ய விஞ்ஞானி கருத்து

சூரிய குடும்பத்தில் பூமியை ஒத்த மற்றொரு கிரகம் வீனஸ் என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் வெள்ளி ஆகும். இதன் விட்டம் 7,521 மைல்கள். பூமியின் விட்டமோ 7,926 மைல்கள் ஆகும். எனினும் இதன் மேற்பரப்பில் 97 சதவீதம் கார்பன்&டை&ஆக்சைடு வாயுவே நிரம்பியுள்ளது. சூரியனிலிருந்து 67.2 மில்லியன் மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இதன் வெப்பநிலை 480 டிகிரி செல்சியஸ் ஆகும். இத்தகைய தன்மை வாய்ந்த இந்த கிரகத்தில் உயிரினங்களின் வாழ்வு குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 1982ம் ஆண்டு அனுப்பப்பட் வீனஸ்&13 எடுத்த புகைப்படங்களை ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் லியோனிட் சான்பாமலிட்டி என்பவர் மறு ஆய்வு செய்துள்ளார்.

சாய்பாபா படத்திலிருந்து தேன் வடிகின்றது அதிசயத்தை பார்க்க பக்தர்கள் விரைகின்றனர்

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் கோப்பாயில் சாயிபாபா பக்தை ஒருவரின் வீட்டில் சாய்பாபா படத்திலிருந்து தேன் மற்றும் வீபு}திகள் கொட்டுன்ட வண்ணம் உள்ளன இந்த அதிசய நிகழ்வை பார்வையிடுவதற்கு அதிகள்வான சாய் பாபா பக்தர்கள் கோப்பாய் நோக்கி சென்றவண்ணம் உள்ளன எனவும் தெரிவிக்கப் படுகின்றது.  கோப்பாயில் உள்ள சாய் பாபா பக்தை ஒருவரின் வீட்டில் உள்ள சாய் பாபாவின் படம் ஒன்றிலிருநந்து தலைப்பகுதியிருந்து தேன் இன்னொரு சாய்பாபா படத்திலிருந்து வீபு}தியும் கொட்டுண்ட வண்ணம் உள்ளன. நேற்று தொடக்கம் வீபு}தி கொட்டுண்ட படத்திலிருந்து தேனும் வடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிருந்து வடியும் தேன் பார்க்க செல்லும் பக்கர்களுக்கு கண்டியில் வழங்கி வருகின்றார் சாய் பாபா கனவில் வந்து தான் இங்கு தான் சமாதியானேன் எனக்கூறியதாகவும் தெரிவித்தார்.

மண்ணிலே செய்யப்பட்ட தத்ரூபமான சிற்பங்கள்`

பல்வேறு வகையான சிற்பங்கள் பார்போரை கவரும் வண்ணம் சிற்பிகளால் செதுக்கப் படுவதுண்டு ஒவ்வொரு சிற்பிகளும் தமக்கு கிடைக்கும் பொருட்களை வைத்து அழகாக செதுக்கி திறமையை வெளிக் காட்டுவார்கள் பனிக்கட்டியில் கல்லில் மமணலில் சிற்பங்களை செய்வார்கள் அதே போல தம் இடங்களில் காணப்படும் மண்ணை ஒருங்கிளைத்து அழகான சிற்பங்களை செதுக்கி எல்லோரையும் அசத்துவார்கள் இந்த சிற்பங்களை செதுக்கிய கற்களுக்கு பரிசு கொடுப்பதா அல்லது செதுக்கிய கலைஞ்ஞனுக்கு கொடுப்பதா என்றவகையில் திறறனை வெளிக்காட்டுவார்கள் இப்படிப்பட்ட சிற்பங்களை வெறும் மண்ணை பயன்படுத்தி தத்தூறுபமாக வரைந்துள்ளனர்.

எந்த பிகரும் நல்ல பிகரே …. ஒரு சுவாரசியமான குறும்படம்!

இன்றைய காதல்கள் எப்படிவரும் எப்ப வரும் என்று யாரும் எதிர்கூறமுடியாது. போன் ஸ்கைப் இன்ரரெட் பேஸ்புக்வளர்சி காதல்களில் பிளர்வுகளை ஏற்படுத்தி யுள்ளது குரல்களையும் பேச்சுகளையும் வைத்து தெரியாத உறவுகளுடன் வரும் காதல் பின் நேராக சந்திக்கும் போது அதிர்சியை ஏற்படுத்தும்.இந்த அறியாமையை வெளிப்படுத்தும் முகமாக தயாரிக்கப்பட்ட குறும்படம் பல சுவாரஸ்யமான விடயங்களை உள்ளடக்கி வடிவமைத்துள்ளார். மூர்யா பாலகுமாரனின் தயாரிப்பில் மயக்கம் என்ன எள்ற குறும்படம்வெளிவந்துள்ளது கதாநாயகி தியா தினமும் பாடசாலை செல்லும் போது வரும் காதலால் தன் காதலை  வெளிப்படுத்த போனில் நேரில் சந்திக்க அழைக்கிறார்.

உல்லாசப் பிரயாணிகளுக்கு தனியார் ஹெலிகொப்டர் விமான சேவை ஆரம்பம்!

இலங்கையின் உல்லாசப் பிரயாணத் துறையை மேலும் அபிவிருத்தி செய்யூம் நோக்கில் தனியார் ஹெலிகொப்டர் விமான சேவையொன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-செனொக்- என்று நிறுவனம்
ஆரம்பித்துள்ள இந்த விமான சேவைக்கு -எயா செனொக்- எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் சேவையில் இரு ஹெலிகொப்டர் விமானங்கள் ஈடுபடுத்தப்படவூள்ளன. பி.ஆர்.சி. விளையாட்டரங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த ஹெரிகொப்டரில் ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பார்வையிட்டார்.
இது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் -செனொக்- நிறுவனத்தின் தலைவர் நொயெல் செல்வநாயகம்- இயக்குநர் ஹரின்த கொஸ்தா- ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவர் காமினி செனரத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Tuesday, January 24, 2012

படகில் 10 ஆயிரம் கி.மீ. சென்று சாதனை உலகம் சுற்றிய சிறுமிக்கு உற்சாக வரவேற்பு!

ஹாலந்தை சேர்ந்த 16 வயது சிறுமி சாரா டெக்கர், பாய்மர படகில் தனியாக உலகை சுற்றி வந்து சாதனை படைத்திருக்கிறார். ஹாலந்தை சேர்ந்தவர் சாரா டெக்கர் (16). அப்பா டிக் டெக்கர், ஹாலந்துக்காரர். அம்மா பாப்ஸ் முல்லர் ஜெர்மனியை சேர்ந்தவர். இருவரும் கடல் பயணத்தில் ஆர்வம் கொண்டவர்கள். காதலித்து திருமணம் செய்தவர்கள் 7 ஆண்டு தொடர் கடல் பயணம் மேற்கொண்டிருந்த நேரத்தில், நியூசிலாந்தின் வான்கரே துறைமுகத்தின் அருகே படகில் பிறந்தவர்தான் சாரா. ‘கடலில்’ பிறந்தவர் என்பதாலோ, சிறு வயதில் இருந்தே கடல், கப்பல் பயணம் மீது சாராவுக்கு அதிக ஆர்வம். அப்பா, அம்மா அடிக்கடி கடல் பயணம் சென்றதால், 4 வயது வரை பெரும்பாலான நேரத்தை கடலிலேயே கழித்தார் சாரா.

மிக அற்புதமான பயமுறுத்தும் படங்கள்

 உலகம் வித்தியாசமான பாதையில் சென்று கொண்டிரக்கின்றது பார்போரை வியக்கும் வகையில் நடக்கும் அதிசயங்களும் நடைபெறாத விடையங்களை தம் கற்பனையில் உருவாகும் விடயங்களையும் நிகழ்த்தி வருகின்றனர். இன்றைய சினிமாத்துறை ஜதார்த்தத்தை விட்டு விலகி விரோதமாக நடக்கமுடியாத விடயங்களை நடப்பதாக எடுத்துக்காட்டுவதாகும். அப்படி எடுக்கப்படும் புகைப்படங்கள் பார்ப்பதற்கு அழகாகவும் விந்தையாகவும் காணப்படும் ஆயினும் ஜதார்தத்திற்கு விரோதமானதே ஆயினும் எதிர்கால விஞ்ஞான உலகில் எதனையும் எதிர்வுகூறமுடியாது

எரிமலையில் இருந்து மின்சாரம் தயாரிக்க முயற்சி

அமெரிக்காவில் ஒரேகான் மாநிலத்தில் பென்ட் என்ற இடத்துக்கு 30 கி.மீற்றர் தொலைவில் நிபெர்ரி என்ற எரிமலை தற்போது நெருப்பை கக்காமல் உறங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் அதில் 2 கோடியே 40 லட்சம் காலன் தண்ணீரை ஊற்றி மின்சாரம் தயாரிக்க நிபுணர்கள் முயற்சி செய்ய இருக்கிறார்கள். இதற்காக மலையில் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டு வருகின்றன. அதில் கிடைக்கும் தண்ணீரை எரிமலை மீது ஊற்ற நீராவி வெளியாகும். அதிவேகமாக வெளியாகும் சுடுதண்ணீர், நீராவியிலிருந்து மலிவான, சுத்தமான மின்சாரம் தயாரிக்க முடியும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Monday, January 23, 2012

முட்டை உண்டால் மரணம் நெருங்கும்.

முட்டை மீது அலாதி விருப்பம் கொண்டிருக்கிறீர்களா ? தினமும் முட்டை சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா ? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தருவதற்காகவே வந்திருக்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று.வாரம் ஏழு முட்டைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு மரணம் விரைவிலேயே வரும் வாய்ப்பு 23 விழுக்காடு அதிகரிக்கும் என்பதே அந்த ஆய்வு அதிலும் குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் இந்த எல்லையைத் தாண்டி முட்டையை உட்கொண்டால் ஆபத்து அதிகமாம்.
நீரிழிவு நோயாளிகள் எனில் முட்டையின் பக்கம் பார்வையைக் கூட திருப்பக் கூடாதாம். அவர்கள் ஒரு முட்டை சாப்பிட்டாலும் அது அவர்களுக்கு இன்னலை உண்டாக்கி விடக் கூடும். விரைவில் மரணமடையும் வாய்ப்பு 50 விழுக்காடு அதிகரிக்கும். இப்படி அடுக்கடுக்காய் சொல்லி முட்டை பிரியர்களின் விருப்பத்துக்கு முட்டுக் கட்டை போட்டிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஜம்மு-காஷ்மீரில் உலகின் மிகப்பெரிய சோலார் தொலைநோக்கி!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உலகின் மிகப்பெரிய சோலார் தொலைநோக்கி அமையவுள்ளது. பூமியில் நிலவும் பருவநிலைமாற்றம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை ஆராய, மிகப் பெரிய சோலார் தொலை நோக்கியை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைக்க மத்திய அரசின் அறிவியல் ‌தொழில் நுட்ப மையம் முடிவு செய்திருந்தது. இதனை அமைக்க, அம்மாநிலத்தின் ‌லடாக் மாவட்டத்தின் அடர்ந்த பனிப்பிரதேசமான பாங்காங்ஷோ ஏரிப்பகுதி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது  இதற்கு முன்பு, லடாக்கில் சோலார் தொலை நோக்கியை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இந்த தொலை நோக்கியை அமைப்பது குறித்து மாநில அரசும், மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

அந்தரத்தில் பறக்கும் நட்சத்திர ஹோட்டல்

ஊரிலிருக்கும் முனியாண்டி வில்லாசிலிருந்து உலகிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்ல்கள் வரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் Hotelicopter எனும் அந்தரத்தில் பறக்கும் நட்த்திர ஹோட்டல் பற்றி கேள்விப்பட்டிருக்கீர்களா?
மிகப்பிரமாண்டமான உலங்கு வானூர்தியில் இப்பறக்கும் ஹோட்டல் காணப்படுவதனால் இதற்கு Hotelicopter என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 42மீட்டர்களாகவும், அகலம் 28 மீட்டர்களாகவும் காணப்படுவதுடன் 105850 கிலோகிராமை காவிச்செல்லக்கூடியது. அத்துடன் மணிக்கு 237 கிலோமீட்டர் வேகத்திலும் பறக்கக்கூடியது.

பறவைகள் தங்குவதற்கு தண்ணீரில் மிதக்கும் பூங்கா

நகர பகுதிகளில் போதுமான மரங்கள் இல்லாததால் பறவைகள் வசிக்க முடியாமல் தவிக்கின்றன. இதற்காக தண்ணீரில் மிதக்கும் பூங்காக்களை அமைக்க அமெரிக்கா, இங்கிலாந்தில் முடிவு செய்துள்ளனர்.
இந்த பூங்காக்களில் மரங்களும் பறவைகள் வசிப்பதற்கு வசதியாக இயற்கை சூழ்நிலைகளும் ஏற்படுத்தப்படும். நெதர்லாந்தை சேர்ந்த வாட்டர் ஸ்டுடியோ என்ற கட்டிட வடிவமைப்பு நிறுவனம் இந்த மிதக்கும் பூங்கா மாதிரியை வடிவமைத்து உள்ளது.
மேலும் பெரிய நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகளை பெற்று பூங்காவை அமைக்க உள்ளனர். முதல் பூங்காவை எதிர்வரும் 2014 -ம் ஆண்டு முடிக்க உள்ளனர். கடல், ஆறு, ஏரி உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளிலும் இதை அமைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தினமும் இலங்கையில் 20 இணையத்தளங்கள் பதியப்படுகின்றன

எல் கே டொமென் பெயரில் பதிவு செய்யப்பட்ட இணையத் தளங்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ள நிலையில் நாளாந்தம் குறைந்த பட்சம் இருபது இணையத்தளங்கள் புதிதாக பதிவு செய்யப்படுகின்றன. எனவும் இதற்கான கேள்வி அதிகரித்துள்ளது டொமேன் பதிவாளர் கிஹான் டயஸ் எனவும் தெரிவித்தார். இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக இந்த நிலமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் இருந்து இணையத்தளங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கின்றன என அவர் தெரிவித்தார்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls