Monday, January 23, 2012

ஜம்மு-காஷ்மீரில் உலகின் மிகப்பெரிய சோலார் தொலைநோக்கி!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உலகின் மிகப்பெரிய சோலார் தொலைநோக்கி அமையவுள்ளது. பூமியில் நிலவும் பருவநிலைமாற்றம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை ஆராய, மிகப் பெரிய சோலார் தொலை நோக்கியை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைக்க மத்திய அரசின் அறிவியல் ‌தொழில் நுட்ப மையம் முடிவு செய்திருந்தது. இதனை அமைக்க, அம்மாநிலத்தின் ‌லடாக் மாவட்டத்தின் அடர்ந்த பனிப்பிரதேசமான பாங்காங்ஷோ ஏரிப்பகுதி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது  இதற்கு முன்பு, லடாக்கில் சோலார் தொலை நோக்கியை அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இந்த தொலை நோக்கியை அமைப்பது குறித்து மாநில அரசும், மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில தலைமை செயலர் மாதவ் லால், மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறைக்கு காஷ்மீர் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும், சோலார் தொலைநோக்கி கட்டுமான பணிகள் தொடங்க தேவையான உதவிகளை செய்ய அரசு தயராக உள்ளது. உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சோலார் தொலைநோக்கியினால் 134 கி.மீ. தொலைவிலுள்ள இலக்கினை 5 கி.மீ ‌அருகில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls