Wednesday, January 25, 2012

வீனஸ் கிரகத்தில் உயிரினங்கள்: ரஷ்ய விஞ்ஞானி கருத்து

சூரிய குடும்பத்தில் பூமியை ஒத்த மற்றொரு கிரகம் வீனஸ் என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படும் வெள்ளி ஆகும். இதன் விட்டம் 7,521 மைல்கள். பூமியின் விட்டமோ 7,926 மைல்கள் ஆகும். எனினும் இதன் மேற்பரப்பில் 97 சதவீதம் கார்பன்&டை&ஆக்சைடு வாயுவே நிரம்பியுள்ளது. சூரியனிலிருந்து 67.2 மில்லியன் மைல்கள் தொலைவில் அமைந்துள்ள இதன் வெப்பநிலை 480 டிகிரி செல்சியஸ் ஆகும். இத்தகைய தன்மை வாய்ந்த இந்த கிரகத்தில் உயிரினங்களின் வாழ்வு குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த 1982ம் ஆண்டு அனுப்பப்பட் வீனஸ்&13 எடுத்த புகைப்படங்களை ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் லியோனிட் சான்பாமலிட்டி என்பவர் மறு ஆய்வு செய்துள்ளார்.
 

அந்த புகைப்படத்தில் தேள் ஒன்றின் உடலமைப்பை கொண்ட உருவமும், தட்டு ஒன்றும் நகர்வது போன்ற காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருப்பது ஆராய்ச்சியாளர்களிடையே தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls