Monday, January 23, 2012

தினமும் இலங்கையில் 20 இணையத்தளங்கள் பதியப்படுகின்றன

எல் கே டொமென் பெயரில் பதிவு செய்யப்பட்ட இணையத் தளங்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ள நிலையில் நாளாந்தம் குறைந்த பட்சம் இருபது இணையத்தளங்கள் புதிதாக பதிவு செய்யப்படுகின்றன. எனவும் இதற்கான கேள்வி அதிகரித்துள்ளது டொமேன் பதிவாளர் கிஹான் டயஸ் எனவும் தெரிவித்தார். இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக இந்த நிலமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் இருந்து இணையத்தளங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கின்றன என அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் இணையத்தளங்களை பதிவு செய்தே இயக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இத்துடன் இணையத்தளங்களுக்கு சில விதிமுறைகளையும் விதித்துள்ளது. இதற்கமைய இணையத்தளங்கள் ஏற்றுக்கொள்ளப்படு;டு பரிசீலிக்கப்பட்டு அதன்அஎப்படையில் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls