Saturday, January 21, 2012
டெல்லியை முற்றாக மூடிய பனி... 350 விமானங்கள் தாமதம்!
:புதுடெல்லியில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் 350 விமானங்கள் தாமதமாக வந்தன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாயினர். டெல்லி முழுவதுமே இன்று அதிகாலை பனிமூட்டமாக காணப்பட்டது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாயினர். பனி மூட்டத்தால் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும் ஓடுதளம் சரியாக தெரியவில்லை இதனால் விமானங்கள் வானிலேயே சுற்றிக் கொண்டிருந்தன. மேலும் சில விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களில் தரை இறங்கின. மேலும் பனி மூட்டத்தால் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பனிமூட்டம் காரணமாக 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment