Tuesday, January 17, 2012

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள கடல் குதிரைகள் பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது!

:சென்னை விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடத்த முயன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கடல் குதிரைகள் கடத்தப்படுவதாக சுங் கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட தயாராக இருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சுங்கத்துறையின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ராமநாதபுரத்தை சேர்ந்த சிக்கந்தர் சமீது (32), முகமது சிராஜுத்தீன் (30), முகமது ரபீக் (35) ஆகியோர் பெரிய அட்டைப்பெட்டி வைத்திருந்தனர்.


அதன் மீது சந்தேகம் வந்ததால் அதிகாரிகள் விசாரித்தனர். ‘‘அட் டைப் பெட்டியில் கருவாடு உள்ளது. உறவினர்களுக்கு கொண்டு செல்கிறோம் என அவர்கள் கூறினர். இதில் நம்பிக்கையில்லாமல் அதிகாரிகள் அந்த அட்டை பெட்டியை பிரித்து பார்த்தனர். அதில் பதப்படுத்தப்பட்ட 130 கிலோ கடல் குதிரைகள் இருந்தன. இதன் சர்வதேச மதிப்பு ரூ.25 லட்சம். இதையடுத்து, 3 பேரையும் கைது செய்து, கடல் குதிரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ராமேஸ்வரம் கடலில், கடல் குதிரைகள் காணப்படுகிறது. இது அழிந்து வரும் இனம் என்பதால் வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்காக இவற்றை கடத்துகிறார்கள். கடத் தலுக்கு துணையாக இருப்பவர்களை பற்றி விசாரிக்கிறோம்Õ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls