Friday, January 20, 2012

தொடர் தோல்விக்கு பின்னர் முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை

பதிலுக்கு 300 எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்திலேயே உபுல் தரங்கவை 6 ரன்களுடன் இழந்தது. எனினும் டில்ஷான் அதிரடியாக 87 ஓட்டங்களையும், சாண்டிமல் 59 ஓட்டங்களையும் எடுத்து அணியை பலப்படுத்தினர். ஒரு கட்டத்தில் 40 ஓவர்களில் 246 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்தது இலங்கை. அப்போது களமிறங்கிய பெரேரா அதிரடியாக 44 பந்துகளில் 3 பவுன்றிகள், 5 சிக்ஸர்கள் அடங்களாக 69 ஓட்ட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதி செய்தார். 48.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை கடந்தது இலங்கை அணி.
போட்டிநாயகனாக பெரேரா தெரிவானார். கடந்த போட்டியில் டக்வத் லூயிஸ் முறையில் இலங்கை தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டதனால், தொடரை இழந்திருந்த இலங்கை அணி எனினும், இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 3-1 என்ற நிலையில் உள்ளது. இன்னமும் ஒரு போட்டி மீதமுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது இட்தொடரில் எனது முதல் போட்டி. நான் நன்றாக விளையாடியதாக உணர்கிறேன். அடுத்தடுத்த போட்டிகளிலும் நன்றாக விளையாட வேண்டுமென விரும்புகிறேன் என்றார் திஸார பெரேரா.  தெ.ஆபிரிக்க அணியின் கேப்டன் ஏபி த வில்லியர்ஸ் தெரிவிக்கையில், நாங்கள் 330 ஓட்டங்களை எடுத்திருந்தால் நம்பிக்கையுடன் விளையாடியிருப்போம். எமது ஃபீல்டிங்கும் சொதப்பிவிட்டது. பெரேரா எனக்கு மிகவும் அழுத்தத்தை கொடுத்துவிட்டார் என்றார்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls