Wednesday, November 30, 2011

இசை உலகின் ஞானி மொஷாற்


இசை உலகின் ஞானி (musical maestro) என பலநூறு வருடமாக போற்றப்படுபவர் "மொஷாற்" (Mozart).இவர் (Wolfgang Amadeus Mozart ) 1756 ம் வருடம் ஜனவரி 27 ம் திகதி ஒஸ்ரியா நாட்டின் Salzburg எனும் இடத்தில் பிறந்தார்.இவருடைய தந்தையார் லியொபொல்ட் மொஷாற் ( Leopold Mozart) தொழில் வயலின் வாத்தியம் , இசையமைப்பது (composer) என்பதுடன் மொஷாறின் ஒட்டுமொத்த குடும்பமும் இசை பின்னணி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இயற்கையிலேயே இசை ஞானம் கொண்டிருந்த மொஷாற் தனது 5 வது வயதில் முதலாவது மெலோடியஸ் (melodious) இசை குறிப்பை வெளியிட்டார்.
மொஷாற் தனது முதலாவது சிம்பொனி இசையை 8 வயதாக இருக்கும் வேளை எழுதிமுடித்தார்.தனது இளமை பருவத்திலேயே பல தனித்துவமானதும் மிகவும் பிரபலமானதுமான 600 இசைக்குறிப்புகளை எழுதிமுடித்தார்.
மொஷாறின் அபார சாதனை , ஞானம் இவற்றிற்கு முற்று புள்ளி வைத்தாற்போல் இவரது மரணம் 35 வது வயதில் நிகழ்ந்தது.(பல நூறு வருடமாக மொஷாற் மரணமான மர்மம் நீடித்துவருகின்ற போதிலும் 2000 ம் வருடம் வெளியான ஓர் ஆய்வறிக்கையில் காச்சல் காரணமாக வெனவும் , 2009 ம் வருட மருத்துவ ஆராட்சிமூலம் சிறுநீரக பாதிப்பு எனவும் பல முரண்பட்ட அறிக்கைகள் இன்று வரை வந்தவண்ணம் இருப்பது மொஷாற் எனும் தனிமனிதர் பற்றிய முக்கியத்துவத்தினை காட்டவல்லது.)1791 ம் ஆண்டு டிசம்பர் 5 ம் நாள் மொஷாற் இறப்பதற்கு முன்பாக 20 ஒப்ரா (operas), 50-60 சிபொனி (symphony), 30-40 இசை நிகழ்ச்சிகள் ( பியனோ, வயலின்) , மற்றும் பல இசைசாதனை பல புரிந்த உலகின் இசைஞானி இறக்கும் தறுவாயில் மிகவும் வறுமையில் வாடியதாக வரலாறு குறிப்பிடுகின்றது.
மரணத்தின் பின்னதாக இன்றுவரை அவரது இசைக்குறிப்புகள் பல மில்லியன் வருவாயை ஈட்டியுள்ளது மல்லாமல் பல மில்லியன் இசை ரசிகர்கள் மொஷாற் பின்னால் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மெலோடியஸ் என்பது சீரான இதமான இசை எனவும் இது கேட்பதற்கு மிருதுவாகவும் இருபதுடன் இதன் இசை குறியீடுகள் ஒன்றுடன் ஒன்று ஒத்த தன்மை உள்ளன எனவும் கூறப்படுகின்றது.சிம்பொனி என்பது ஒரேவகை வாத்தியத்தினை பலர் சேர்ந்து குழுவாகவும் , பல வாத்தியங்களை பல குழு சேரவும் மிக நீண்டதும் , மிகவும் சிக்கில் வாய்ந்ததுமான இசைக்குறிப்புடன் நடாத்தப்படும் ஒரு வகை இசை நிகழ்வு.
ஒப்ரா என்பது இசை பின்னணியுடன் அரங்கத்தில் நடிப்பை வெளிப்படுத்தும் மேடை நிகழ்வு.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls