Tuesday, November 29, 2011

இறந்த பின் ஓவியத்தால் தன்னை உலகிட்கு அடையளாம் காட்டியவர்

வின்சென்ட் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (Vincent Van Goh, 30 மார்ச் 1853 - 29 ஜூலை 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத (Post-Impressionist) ஓவியர். இவரது ஓவியங்கள் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். இவர் முதலில் கலைப் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்தார். பின்னர் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின், மிக ஏழ்மையான மக்களைக் கொண்ட சுரங்கப் பகுதியொன்றில் சமயத் தொண்டு செய்தார். அங்குள்ள மக்களை இவர் வரையத் துவங்கினார். இங்கே தான் தனது முதல் முக்கியமான ஓவியமான உருளைக்கிழங்கு உண்போர் எனும் ஓவியத்தை வரைந்தார். மற்ற ஓவியர்களைப் போல் அன்றி தனது முப்பதாம் வயதுக்குப் பின்னரே இவர் ஓவியம் வரையத் துவங்கினார். இவரது பெரும்பாலான ஓவியங்கள் இவரது வாணாளின் கடைசி இரு ஆண்டுகளில் வரையப்பட்டவையே.

மனநோயால் பாதிக்கப்பட்ட வான்கா தனது காது மடலையே அறுத்துக் கொண்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கும் துப்பாக்கியால் நெஞ்சில் சுட்டுத் தற்கொலைக்கு முயன்றார். இரண்டு நாட்கள் கழித்து 1890 ஆம் ஆண்டு சூலை 29 ஆம் நாள் மனநிலை பாதிக்கப்பட்ட வான்கா மரண‌மடைந்தார். அவரது கடைசி வார்த்தை துயரம் என்றும் தொடரும் ‌என்பதாகும்.
இவர் உயிருடன் இருந்த காலத்தில் இவரின் கலையை யாரும் மதிக்கவில்லை. தான் வாழ்ந்த காலத்தில் இவரால் தனது ஓவியங்களுள் ஒன்றை மட்டுமெ விற்க முடிந்தது. இன்றோ நவீன ஓவியத்தின் செல்வாக்கு வாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார்.வான்கா 30 வயது வரை எந்த ஓவியமும் வரைந்ததில்லை

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls