Saturday, December 3, 2011

சிறந்த சுற்றுலா நாடுகளில் இலங்கை 6ஆவது இடம்.

சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த நாடுகள் பட்டியலில் இலங்கை 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தேசிய புவியியல் பயணர் சஞ்சிகையின் புதிய கணிப்பீட்டின் படியே இலங்கை 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையின் மத்திய மலை நாட்டில் உள்ள அழகிய தேயிலைத் தோட்டங்கள், மலைகள் மற்றும் பாரம்பரிய தளங்கள், கடற்கரைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தரப்படுத்தல் குறித்த அறிக்கை ஒன்றை தேசிய புவியியல் பயணர் சஞ்சிகை வெளிவிகார அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளது.
2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் சுற்றுலாத்துறை 52 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
இதுவரையில் 750,000 சுற்றுலாப் பயணிகளைக் கண்டுள்ள இலங்கை, 2016இல் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்துள்ளதால் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் 30,000 ஹோட்டல்களை அமைக்க சுற்றுலாத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls