Sunday, December 4, 2011

உயிருடன் புதைக்கப்பட்டு 'மரண பாடம்' கற்கும் மருத்துவ மாணவர்கள்..

தாய்வானைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணரச் செய்வதற்காக சவப்பெட்டியில் வைத்து பல நிமிடநேரம் உயிருடன் புதைக்கப்படுகின்றனர். 'ரெண்டே மருத்துவ கல்லூரியில்' பதின்மர் வயதான மருத்துவ மாணவர்களுக்கே இந்த விசித்திர பாடம் நடத்தப்படுகிறது. மரணம் தொடர்பாக தெரிந்துகொள்வதற்கு இந்த பாடம் அவசியம் என விரிவுரையாளரகள் கூறுகின்றனர்.இதில் பங்குபற்றும் மாணவர்கள் உயிலொன்றை எழுத வேண்டும்.
பின்னர் பிரேதங்களுக்கான உடைகள் அணிந்தவாறு சவப்பெட்டிக்குள் படுத்துக்கொள்ள வேண்டும். இம்மாணவர்கள் சவப்பெட்டியுடன் சேர்த்து புதைக்கப்பட்டு சில நிமிடங்களின் பின்னர் மீட்கப்படுவர்.

பேராசிரியர் கியு டேடெங் இது தொடர்பாக கூறுகையில் 'இது வெறும் 10 நிமிட பாடம்தான் என்றாலும் உண்மையான மரணத்திற்கு சமமான அனுபவம் இது' என விபரித்துள்ளார்.இதில் பங்குபற்றிய மாணவர் ஸியாவோ லின் தெரிவிக்கையில் 'நான் சவப்பெட்டியில் இருந்து வெளியில் வந்ததும் மீண்டும் பிறந்து வந்ததாகவே உணர்ந்தேன். இப்போது வாழ்வின் ஒவ்வொரு நொடிகளினதும் முக்கியத்துவத்தை நான் உணர்ந்துக்கொண்டுள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls