Tuesday, November 29, 2011

உலகையே அதிர வைக்கும் ஆத்திரேலிய ஊடகவியலாளர் ஜூலியன் பவுல் அசான்ச்


ஜூலியன் பவுல் அசான்ச் (Julian Paul Assange, பிறப்பு: 1971) என்பவர் ஆத்திரேலிய ஊடகவியலாளரும், வெளியீட்டாளரும் ஆவார்.விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை நிறுவி, அதன் முதன்மை ஆசிரியராகவும் பேச்சாளராகவும் உள்ளார். விக்கிலீக்சைத் தொடங்குவதற்கு முன்னர் இவர் இயற்பியல், கணிதவியல் மாணவராகவும் கணினி நிரலாளராகவும் இருந்தார்.அசான்ச் 20  06 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தைத் தொடங்கினார். இவர், ஐக்கிய அமெரிக்காவின் ஆப்கானித்தான், ஈராக் போர்கள் குறித்த பெரும் எண்ணிக்கையிலானா இரகசிய ஆவணங்களைத் தனது இணையத்தளத்தில் கசிய விட்டதை அடுத்து, உலக அளவில் பெரும் கவனிப்புக்குள்ளானார். இவர், பல நாட்டு அரசுகளின் கண்டனத்துக்குள்ளாகியிருந்த அதே வேளையில், உலக அளவில் மனித உரிமை ஆர்வலரிடையே பிரபலம் பெற்றார். பல ஊடக விருதுகளைப் பெற்றுள்ளார்.அசான்ச் பல நாடுகளில் வசித்து வந்துள்ளார். தாம் எப்போதும் பயணித்தபடியே உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.நவம்பர் 2010 இல் சுவீடன் நீதிமன்றம், இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்திப் பன்னாட்டுப் பிடியாணையை பிறப்பித்தது. ஆனால், இக்குற்றச்சாட்டுகளை மறுத்த அசான்ச், இது விக்கிக்கசிவுகளினால் பாதிக்கப்பட்டோரால் புனையப்பட்ட வழக்கு என்று கூறினார். இருப்பினும் 2010 டிசம்பர் 7ஆம் திகதி இவர் இலண்டனில் போலீசாரிடம் சரணடைந்தபோது கைது செய்யப்பட்டார். டிசம்பர் 14 ,2010 அன்று இவர் பிணையில்  விடுவிக்கப்பட்டபோதிலும் இரண்டு நாள் கழித்தே 16 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்பிறப்பு1971 (அகவை 3940) டவுன்ஸ்வில், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா விருதுகள்Economist Index of Censorship Award (2008),பன்னாட்டு மன்னிப்பு அவையின் ஊடக விருது (2009), சாம் ஆடம்ஸ் விருது (2010) தொழில்விக்கிலீக்ஸ் ஆசிரியர், பேச்சாளர். பிள்ளைகள்டானியெல் அசான்ச்

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls