Tuesday, November 29, 2011

கலைகளை வெறுக்கும் தந்தைக்கு எதிரான கலைகளின் மகன் இவன் மைக்கல் அஞ்சலோ (1475 - 1564)

கலைஞர்கள் பலர் காணப்பட்ட போதிலும் ஒரு சிலரே பிரபல்யத்தையும், சிறப்பையும் அடைக்கின்றனர். அச்சிறப்புக்கு அவர்களது தனித்துவமான ஆற்றல்களும் கலை நுட்பங்களுமே காரணமாக அமைகின்றன. அந்த வகையில் ஐரோப்பியக் கலைஞர்கள் கலைத்திறன் மிக்கவர்களாகவும் கலையுணர்வு மிகைத்தவர்களாகவும் காணப்பட்டனர். இவ்வகை கலைஞர்களின் ஒருவரான மறுமலர்ச்சிக்கால ஓவியர் மைக்கலாஞ்சலோ குறிப்பிடத்தக்க வராவார். புகழ் பெற்ற ஓவியர்களின் வாழ்க் கையை ஆராய்ந்தால், அவர் களது தந்தை, தாய், சகோதரர் என யாராவது ஒருவர் கலை துறையில் ஈடுபாடு கொண்டவர்களாகவோ அல்லது ஊக்கமளிக்கின்றவர்களாகவோ காணப்படுவர். ஆனால், கலைத் துறையில் ஈடுபாடில்லாத கலைத்துறையில் வெறுப்புக் கொண்ட ஒரு தந்தைக்கே இவர் மகனாகப் பிறந்தார். 1475 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் திகதி இத்தாலியிலுள்ள புளோரன்ஸ் நகரில் காசல் கப்aல் எனும் இடத்தில் பிறந்தார். இவர் தனது தந்தை கலைஞனாகக் கூடாதென தடை விதித்த போதும் சிறு வயதிலிருந்தே சித்திரம் வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
விசேடமாக மனித உருவங்களையே அதிகம் விரும்பி உருவாக்கினார். ஓவியமாக இருந்தாலும், சிற்பமாக இருந்தாலும் ஒரு பிரிவில் சிறந்து விளங்க வேண்டுமாயின் அடிப்ப டையாகக் கோட்டுச் சித்திரத்தில் தேர்ச்சியிருக்க வேண்டும். இதை உணர்ந்த மைக்கலாஞ்சலோ இதற்கென அதிக பயிற்சி எடுத்துக் கொண்டார். குறிப்பாக மனித உடற் கூறுகளை நன்கு வரைந்து பழகினார். இந்த முயற்யில் வைத்தியசாலைகளில் உள்ள பிணக் கிடங்குகளில் பிணம் அறுக்கும்போது, பக்கத்திலிருந்து நன்கு கவனித்து கோட்டுருவங்களை வரைந்து பயிற்சி பெற்றார். இதன் காரணமாகவே, இவரது கலைப் படைப்புக்கள் வியக்கத்தக்க அளவு நுட்பம் வாய்ந்தவையாகவும் உயிரோட்டமுள்ளதாகவும் மிளிர்வதை கலையுலகம் உணர்கின்றது. ஒரு கலைஞனின் ஆற்றல்களையும் திறன்களையும் அவனது ஆக்கங்களே வெளிப்படுத்துகின்றன. கலைஞன் மரணித்த போதும் அவனது கலைகள் இவ்வுலகில் கலாரசிகர்களின் உள்ளங்களில் வாழ்கிறது. இதனால், கலைஞனின் வரலாறும் உயிர் வாழ்கிறது. மைக்கலாஞ்சலோவின் பிர மாண்டமான பிரமிக்கத்தக்க படைப்புக்கள் வத்திகானிலுள்ள சிஸ்ரைன் தேவாலயத்தில் காணப்படுகின்றது. கி.பி. 1508 ல் யூலியஸ் போப் பாண்டவரின் வேண்டுகோளுக்கிணங்க சிஸ்ரைன் தேவாலயத்தினை அலங்கரிக்க ஒப்புக் கொண்டார்.
குறிப்பாக சிஸ்ரைன் தேவாலயத்தின் 450 அடி பரப்புக் கொண்ட மேற் கூரையினை பல பிரவுகளாகப் பிரித்து 449 மனித உருவங்களை தத்துரூபமாக வரைந்துள்ளார். இதில் ‘உலகைப் படைத்தல்’ எனும் ஓவியத் தொகுப்பு மிகப் பிரதானமாகும்.
பைபிளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தேவாலயத்தின் மேற்கூரையில் வரையப்பட்டதே உலகைப் படைத்தல் எனும் ஓவியமாகும். இவ் ஓவியத் தொகுதியில் ஆதாமைப் படைத்தல், ஏவாளைப் படைத்தல் ஆகிய ஒவியங்களும் வரையப்பட்டுள்ளன. இது உலகின் ஆதிமனிதனான (முதல் மனிதனாகக் கருதப்படுகின்ற) ஆதாம், ஏவாள் ஆகிய இருவரையும் இறை வன் சிருஷ்டிப்பதைக் காட்டுகின்றது.

அத்துடன் கிரகங்களையும், சூரியன் சந்திரன் ஆகியவற்றையும் படைக்கும் செய்தியையும் ஒரு தொகுதியில் மைக்கலாஞ்சிலோ தத்துரூபமாகக் காட்டியுள்ளார்.இத்தேவாலயத்தின் பின்புறச் சுவரில் இறுதித் தீர்ப்பு எனும் ஓவியத் தொகுதியும் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 4 1/2 ஆண்டு கள் முகத்தில் வர்ணங்கள் ஒழுக உயிரோட்டமான ஓவியங்களைக் கொண்டு சிஸ்ரைன் தேவாலயத்தின் மேற் கூரையை அலங்கரித்தார்.

சமகாலத்தில் கலைஞனாக விரும்பும் ஒவ்வொரு வரும் நமக்கு முன்னர் உள்ள உள் நாட்டு, வெளிநாட்டுக் கலைஞர் களைப் பற்றி கற்றுக் கொள்வது இன்றிய மையாத ஒன்றாகும். ஏனெ னில், தான் வரையும் பாணிதான் சரி என்ற கோட் பாடுகளை வளர்த்துக்கொண்டு ஒரு கலைஞன் ஆக்கங்களை உருவாக்க முடியாது. பப்லோ பிகாசோ, லியானாடோ டாவின்ஸி, வின்சன்ட் வான்கோ, றபாயல் போன்ற பல பிரபல்யமான கலைஞர்கள் தனக்கே உரித்தான தனித்து வமான பாணிகளில் ஆக்கங்களை உருவாக்கினர். அத்துடன் ஏனைய கலைஞர்களின் கலையாக்கங்களை இரசித்தனர். மைக்கலாஞ்சலோவின் மனித உருவங்கள் உண் மையான மனிதனைப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதே அவரது படைப்புகளின் சிறப்பம்சங்களாகும். எனவே ஒவ்வொரு கலை ஞனும் தனக்கே உரித்தான பாணிகளில் பல்வேறு பட்ட மரபுகளில் வரைவர் என்பது உண்மை யாகும்.

மைக்கலாஞ்சலோ மனித உருவங்களை அமைப்பதிலும், நிறந் தீட்டுவதிலும் இயற்கையான உயிரோட்டமான பாணியையே மிகவும் பயன்படுத்தினார். மனித உருவங்களின் முக பாவனை, தசைகளின் அசைவுகள் நிறங்கள், ஒளி நிழல்கள், உணர்ச்சி போன்ற பல அம்சங்களையும் தனது ஓவியங்களில் வெளிப்படு த்தினார். இது இவரது கலைத் திறன் முதிர்ச்சி யையே காட்டுகின்றது.

சில கலைஞர்கள் ஓவியர்களாக இருப்பார்கள் சிலர் சிற்பிகளாக திகழ்வார்கள். ஆனால், மைக்கலாஞ்சலோ ஒரு தலை சிறந்த ஓவியர் மட்டுமல்லாது ஒப்பற்ற சிற்பக் கலைஞருமாகும். அவருடைய ஆற்றல்களும், கலைத்திறன் முதிர்ச்சியும் அவருடைய கலையாக்கங்களின் மூலம் வெளிப்படுத்துகின்றது.

குறிப்பாக இவரால் செதுக்கப்பட்ட டேவிட் சிற்பம் மிகப் பிரபல்யம் வாய்ந்ததும் கலையம்சம் பொருந்தியதுமாகும். இதனைப் படைப்பதற்கு கிட்டத்தட்ட 1 1/2 வருடங்கள் எடுத்ததாக கருதப்படுகின்றது. மனித உடலில் புற அமைப்பை அழகுற, கலை நேர்த்தியுடன், உள்ளதை உள்ளபடியே செதுக்கி மகா சிற்பி எனும் புகழையும் பெற்றுக் கொண்டார்.

டேவிற் சிற்பமானது, ஒரு வீரனின் ஆரோக்கியமான உடற் கூறுகளைக் கொண்ட வெற்றுடம்புடன் நிற்கின்ற மனித உருவமாகும். வீதியில் கிடந்த சலவைக் கல்லொன்றை சிற்பமாக்கி கலா ரசிகர்களின் உள்ளங்களில் நிலையாக நடமாடச் செய்த சிற்பி என்றால் அப்புகழ் மைக்கலாஞ்சலோவையே சாரும்.

இச்சிற்பம் கையை மடித்து இடது தோளில் ஒட்டியும், வலது கை நீண்டு வலது காலில் உடைந்து விடாமல் இருக்க, சிற்பியின் திறமையில் உருவான சிற்பமாகும். ஒரு மனிதனின் உடலில் ஒளி நிழல் விழுவதுபோன்று அளவில் குறையாமலும், அதிகரிக்காமலும் ஒளி நிழல் விழுவது இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

கி. பி. 1497 ல் உரோமில் இருந்தபோது பியேற்றா எனும் சிற்பத்தினை உருவாக்கினார். மரித்த ஏசு கிறிஸ்துவை மடியில் வைத்திருக்கும் கன்னி மேரியின் காட்சியை மிகத் தத்துரூபமாக செதுக்கியுள்ளார். இது மிக உணர்வுபூர்வமாக செதுக்கப்பட்டுள்ளது.

மரித்துக் கிடக்கும் ஏசு கிறிஸ்துவின் தொங்கிக் கிடக்கும் தலை, சோர்ந்து கிடக்கும் கைகள், நீண்ட -ஸிlழிu கால்கள் ஆகியன நிஜத்தில் இறந்த ஒரு மனிதரைப் பார்க்கும் உணர்வைத் தருகின்றது. கன்னி மேரியின் முகத்தில் சாந்தம், கருணை, சோகம் என்பன வெளிப்படும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது. ஆடைகளின் மடிப்புகளை மிக நேர்த்தியாகவும் உயிரோட்டமாகவும் செதுக்கியுள்ளார். மைக்கலாஞ்சலோவின் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் வளரும் கலைஞர்களுக்கு முன்மாதிரியாகவே அமைகின்றன.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls