Tuesday, November 29, 2011

மக்கள் ஆட்சி வரலாறு

உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்ச்சியைக் கொண்ட நாடக சுவிசர்லாந்து (Switzerland) விளங்குகிறது. இங்கு அரச மொழிகளாக ஜெர்மன் , பிரஞ்ச் , இத்தாலி , ரூமேனிய மொழிகள் நடைமுறையில் உள்ளது. உலகில் நிலத்தினால் சூழப்பட்ட 43 நாடுகளில் சுவிசர்லாந்தும் ஒன்றாகும். பேஃர்ண் ( Berne ) ஐ தலை நகராக கொண்ட சுவிசர்லாந்து மிகப்பெரிய நகராக சூரிஸ் (Zஜrich ) இனை கொண்டுள்ளது. பேஃர்ண் சமஷ்டி அமைப்புகளின் தலைநகராகவுள்ள போதிலும் ஜெர்னிவா (Geneva ) உடன் குறிப்பாக சூரிச் வர்த்த உலகில் அறியப்பட்ட நகரங்களாகவும் உள்ளன. சர்வதேச தொண்டு நிறுவனமான செஞ்சிலுவை சங்கம் (Red Cross), உலக வர்த்தக அமைப்பு (WTO) , சர்வதேச நியம ஸ்தாபனம் (ISO) , ஐக்கியநாட்டுகள் சபை (UN) இன் காரியலயம் ஒன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 
ஐ.நா (UN) காரியாலயம் அந்நாட்டில் இருந்தபோதிலும் 2002ம் ஆண்டுவரை இதில் இணைந்திராத போதிலும் League of Nations (தேசிய நல்லிணக்கசபை) உறுப்பு நாடக ஆரம்பத்திலிருந்தும் வந்துள்ளது , ஐரோப்பிய ஒன்றியம் (EU)இல் இணைவதற்காக 1990 இல் சுவிசர்லாந்தில் நடாத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியுற்றதால் இணையும் அந்தஸ்து இல்லாத நாடகவும் உள்ளது (ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடாத்திய ஒரேஒரு நாடு சுவிசர்லாந்து மட்டுமே.).
இந் நாடு 1291 ம் ஆண்டு ஆகஸ்ட்டு 1ம் திகதி சுதந்திரம் அடைந்த செய்தி வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இன்று வரை சுவிசர்லாந்து ஆகஸ்டு 1ம் திகதியை தேசிய விடுமுறையாக கொண்டடுவதும் குரிப்பிடத்தக்க விடையமாகும். சுவிசர்லாந்து 1848 ம் ஆண்டு செப்ரம்பர் 12ம் நாளில் இருந்து இன்றய காலம் வரையுள்ள நடைமுறைக்கு வந்த சமஷ்டி கட்டமைப்பின் இடையில் நீண்ட வரலாறு கொண்டுள்ளது. 1291 இல் சுதந்திரமடைந்த போதிலும் இன்றய மத்திய சுவிசர்லாந்து நிலப்பகுதியை மட்டுமே நிலப்பரப்பாக கொண்டிருந்தது. பின்பு நாளடைவில் நில அபகரிப்பு கலம்காலமாக நடாத்தப்பட்டு 1848 இல் எல்லைகள் வரையப்பட்ட பரந்த நவீன சுவிசர்லாந்து தோன்றிய தாயிற்ரு. சுவிசர்லாந்தின் மொத்த நிலப்பரப்பு 41,285 சதுர கிலோமீற்றர் (15,940 சதுர மைல்கள்) களாகும். இது மற்றய நாடுகளுடன் ஒப்பிடும் போது 136 ம் இடத்தில் பரப்பளவில் உள்ளதுடன் அந்நாட்டின் நீர் பரப்பு நிலப்பரப்பிடன் ஒப்பிடும் பொழுது 4.2% மாகவும் உள்ளது. சுவிஸ் நாடானது எல்லைகளாக பிரான்ஸ் , ஜேர்மனி , இத்தலி , ஆஸ்த்திரீயா , லெஸ்ரென்ரைன் (Liechtenstein) வையும் கொண்டுள்ளது. சுவிஸ் நாடு நிலத்தினால் மட்டும் கூழப் பட்டுள்ளதால் கடற்படை என்ற பேச்சிற்கு இடமில்லாது உள்ளது. நீண்ட காலமாக நடுநிலையை கடைப்பிடித்து வரும் சுவிஸ் (சுவிசர்லாந்து) 1815 ல் இருந்து எந்த போர் (யுத்தம்) ஒன்றையும் சந்திக்கவும் இல்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.
1291ல் சுதந்திரமடைந்த சுவிஸ் 1499ம் ஆண்டு 22 செப்ரம்பரில் அங்கீகாரமற்ர கட்டமைப்புடன் ஆட்சி செய்த போதிலும் 1648ம் வருடம் ஒக்டோபர் 24 ல் அங்கீகரிக்கப்பட்டது. பின்பு 1798 ல் பிரஞ்சு நாட்டின் படைஎடுப்பினால் சிறிது காலம் ஆட்ச்சி மாறலாகி நெஃப்பொலியன் (Napoleon) வீட்சிவரை (1813வரை) நீடித்ததாயிற்று. பிரஞ்சு நாட்டின் விடுவிப்பின் பின்பு 1813 ல் இருந்து 1815 வரை பலரது ஆலோசனைகளையும் உள்ளடக்கியதான இன்றய சுவிஸர்லாந்து (Swiss) கட்டமைப்பு நடைமுறைக்குவந்து. 1815 ம் வருடம் ஆகஸ்டு7ம் நாள் நடைமுறைக்கு வந்த அமைப்பு முன்பில் இருந்த "கன்டொன்" (canton-இலத்தின் மொழியில் உப நில பிரிவுகளை குறிப்பதாகும்.) அமைப்பை அடிப்படையாக கொண்டிருந்ததாகும். 1884ல் உதயமான சமஷ்டி ஆட்சிமூலமாக 26 கன்டொன்கள் அமைக்கப்பட்டதுடன் இரு நாடளுமன்ற அமைப்புகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. இரண்டு பாரளுமன்றங்களில் ஒன்று கன்டொன் உறுப்பினர்களை பிரதிநிதிப்படுத்து வதாயும் (46உறுப்பினர்கள்) மற்றயது தேசிய அளவில் (200உறுப்பினர்கள்) மக்கள் தெரிவின் மூலமாக நியமிக்கப்படுவர். இந்த கன்டொன் அமைப்பானது சமஷ்டித்திட்டத்தில் 1848 இல் சேர்க்கப்படு முன்பாகவே முன்னய ஆட்சிகளில் இதை ஒத்த அமைப்பு 700 வருடங்களாக இருந்தமை குறிப்பிடதக்க வரலாறு.
கன்டொன்கள் ஒவ்வொன்றும் சுயமாக ஆட்சிசெய்யும் அமைப்பு சமஷ்டி திட்டத்தில் உள்ளபோதிலும் இவைகள் மத்திய நாடாளு மன்றத்தில் அவ்வப்போது கூடுகிறன. இந் நாட்டின் அரசியல் யாப்பின் பிரகாரம் சட்டம், ஒழுங்கு (பாதுகாப்பு) , வெளிவிவகாரம் , பொருளாதாரம் , நாணயம் , இவ்விடயங்களில் சுயநிர்ணயம் கொண்டபோதிலும் பொதுநாணயத்தை 1850 இல் இருந்து சுவிசர்லாந்து கடைப்பிடிக்கின்றது. 2005 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் சுவிசர்லாந்தின் மொத்த தேசியவருமானம் $264.1 பில்லியங்களாகவும் (இது உலகின் 39ம் இடம்) சனத்தொகை 7,2888,010 ஆக (அண்ணளவாக7.3 மில்லியன்கள்) இருந்தது. 2006ல் கணக்கெடுப்பில் சனத்தொகை 7.5 மில்லியன்களாகவும் தனிமனித வருமானம் $32,300 ஆகவும் இது உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது 10 ம் இடத்திலும் உள்ளதானது சுவிசர்லாந்து (Swiss) இன் சிறப்புக்கு சான்றுகளாகும்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls