Monday, March 26, 2012

செனல்4 ஆவணப்படம் போலியானது என்பதனை ஐ.நாவினால் நிரூபிக்க முடியும் - கோதபாய ராஜபக்ஷ!

பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட ஆவணப்படம் போலியானது என்பதனை ஐக்கிய நாடுகள் அமைப்பினால் நிரூபிக்க முடியும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான உண்மை நிலைமைகளை வெளிப்படுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
குறிப்பாக இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை எவ்வாறு மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது தொண்டு நிறுவனங்களுக்கு நன்கு தெரியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகளின் கட்டுப்பாட்டில் சிக்கியிருந்த தமது நிறுவன பணியாளர்களை மீட்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பு புலிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு சர்வதேச ரீதியாக அழுத்தங்களை பிரயோகித்திருந்தால் புலிகள் மக்களை மனித கேடயமாக பயன்படுத்தியிருக்க மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துரதிஸ்டவசமாக இன்று முதலைக் கண்ணீர் வடிக்கும் பலர் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழ் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு பணியாளர்கள் கடத்தப்பட்ட விடயம் தொடர்பில் மனித உரிமை அமைப்புக்களோ அல்லது சர்வதேச ஊடகங்களோ எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் n;தாடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் கடமையாற்றிய 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் யுத்த வலயத்திலிருந்து வெளியேறுவதனை புலிகள் தடுத்து நிறுத்தினர்.

எனினும் இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்போ அல்லது வேறும் அமைப்புக்களோ குரல் கொடுக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக செனல்4 பிரச்சாரம் செய்து வருவதாகவும் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுமாறு ஊடக நிறுவனத்திற்கு சவால் விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls