Sunday, March 25, 2012

தங்கத்தின் விலையை முந்திய சீனத் தேயிலை!

சீனாவில் விளையும் ‌தேயிலை வகைகளில் முக்‌கியமானதாகக் கருதப்படும் லோங்ஜிங் அல்லது ட்ரகன் வெல் தேயிலையின் ஒரு கிலோப விலை ரூபாய் 57024 டொலராக நிர்ணயிக்‌‌கப் பட்டுள்ளது. இது தற்போதைய தங்கத்தின் கிலோ5 ஒன்றிற்கான விலையை விட அதிகமாகும். தங்கம் ஒரு கிலோவின் தற்பாதைய விலை 53000 டொலர் மட்டும் தான். ஆனால் சீனத் தேயிலையின் விலையே அதைவிட சுமார் 4000 டொலர் அதிகம்.

உலக வியாபாரிகளால் அதிகமாக விரும்பி வாங்கப்படும் தேயிலை வகைகளில் இது முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த வகை தேயிலை சீனாவின் பாரம்பரிய திருவிழாவான கிங்மிங் விழா கொண்டாடப்படும் மாதமான ஏப்ரல் மாதத்தில் அறு‌வடை செய்யப்படு்கிறது. ஸேஜியாங் மாகாணத்தி்ல் உள்ள ஹாங்க்ஜோவ் பகுதியில் விளைவி்க்கப்படுகிறது.

ஜூபைசாங் என்ற வியாபாரி கூறுகையில் கடந்த ஆண்டு இந்த வகை தேயிலை சுமார் 10 ஆயிரம் யுவானிற்கு (சீனநாணயம்) விற்பனையானது. இந்தாண்டு இதன் விலை சுமார் 80 ஆயிரம் யுவான் வரை அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் மற்றொரு ‌வகை தேயிலையின் விலை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கிலோ ஒன்றிற்கு 600 யுவான் என விலை இருந்தது. அதன் தற்போதைய விலை சுமார் 2 ஆயிரம் யுவான் என நிர்ணயி்க்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls