Sunday, March 25, 2012

ஒபாமாவின் உரையைக் குழப்பிய நபர்!

அமெரிக்காவின் ஒஹயோ மாகாணத்தின் கொலம்பஸ் நகரில் நடந்த கூட்டத்தில் அதிபர் பராக் ஒபாமா பேசியபோது கையில் புத்தகம் வைத்திருந்த ஒருவர் அடிக்கடி உரத்து கூச்சலிட்டுக் கொண்டே இருந்தார். இந்தப் புத்தகத்தைப் படியுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ஒபாமா தன்னுடைய பேச்சை நிறுத்திவிட்டு குறுக்கிட்ட நபரைப் பார்த்துப் பேசினார்.
"ஐயா நான் இங்கே இவர்களிடம் பேசுவதற்காக வந்திருக்கிறேன்; நீங்கள் வேண்டுமானால் தனியாகக் கூட்டம் போட்டு இவர்களை அழைத்துப் பேசுங்கள். ஏன் இவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறீர்கள்?" என்று கேட்டார்.

"உங்களிடம் இருக்கும் புத்தகத்தை நான் படித்துப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? நீங்கள் விரும்பினால் அதை எனக்குக் கொடுங்கள் நான் மகிழ்ச்சியோடு படிக்கிறேன். அதற்காக பேசும்போது இப்படிக் குறுக்கிடாதீர்கள் என்ன நான் சொல்வது சரியா?" என்றார் ஒபாமா.

பிறகு தன்னுடைய மெய்க்காவலர்களை அழைத்து"போங்கள் - அவரிடமிருந்து அந்தப் புத்தகத்தை வாங்கி வாருங்கள்" என்று கட்டளை இட்டார்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls