Saturday, March 31, 2012

டி20 உலகக் கிண்ண போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது

இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியுள்ளது.
நான்காவது டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் வருகிற செப்ரெம்பர் மாதம் நடைபெற உள்ளது. போட்டிக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான டிக்கெட்டை சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி) இணையதளம் மூலமாக பெறலாம். டிக்கெட் விலை மற்ற போட்டிகளை விட மிகவும் குறைவாக உள்ளது.

லீக் ஆட்டங்களுக்கான டிக்கெட் விலை 0.25 அமெரிக்க டொலரிலிருந்து (இந்திய மதிப்பிற்கு 12 ரூபாய்) தொடங்குகிறது. இறுதி ஆட்டங்களுக்கான டிக்கெட் 2.50 அமெரிக்க டொலரிலிருந்து 45 அமெரிக்க டொலர் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் 8 சுற்று ஆட்டங்களுக்கு ஒருவர் 4 டிக்கெட் வரையும் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களுக்கு ஒருவர் 6 டிக்கெட் வரையும் அதிகபட்சமாக வாங்கிக் கொள்ளலாம்.

ஆடவர் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை வைத்து மகளிர் கிரிக்கெட் ஆட்டங்களையும் இலவசமாகப் பார்க்க முடியும். ஆடவர் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நடைபெறும் நாளில் மகளிர் ஆட்டங்களும் நடைபெறுகிறது. அதனால் இந்த டிக்கெட்டை இரு ஆட்டங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls