Saturday, March 31, 2012

இந்தியாவில் கேள்விக்குறியாகிவிட்ட பாம்பாட்டிகளின் வாழ்க்கை

பாம்பாட்டிகளின் நாடு என்று வெளிநாட்டவரால் ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்தியாவில் இப்போது பாம்பாட்டிகளை வனத்துறையினர் தண்டிக்கும் நிலை உருவாகியுள்ளது.
தலைநகர் புதுடெல்லியை விட்டு ஒரு மணி தூரப் பயணத்தில் ஃபரிதாபாத் என்ற கிராமம் உள்ளது.
அங்கு புத் நாத்(வயது 65) என்பவர் பாரம்பரியமாக பாம்பு பிடித்து வித்தை காட்டி வாழ்பவர். இவர் பாம்பு பிடிக்கும் பேடியா இனத்தை சேர்ந்தவர் ஆவார்.

கடந்த 1972ம் ஆண்டில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் அறிமுகமானதிலிருந்து பாம்பு பிடிப்பது தடைசெய்யப்பட்டதால் இவரது அன்றாட பிழைப்பு கேள்விக்குறியாகிவிட்டது.

இவர் இப்போது தன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தாலும் பாம்பு பிடிக்கும் வித்தையை கற்றுக் கொடுக்கத் தவறுவதில்லை.

இந்தப் படத்தில் புத் நாத் தனது 2 வயது பேரன் சுமித்துக்குப் பாம்பு வித்தைகளைக் கற்றுத் தருகிறார். இவர் குடும்பத்தின் பிள்ளைகள் பாம்புகளை உடல் மீது படரவிட்டு விளையாடுகின்றனர்.

பள்ளிக் கூடத்துக்குப் போவதை விட பாம்புகளுடன் இருக்கவே அதிகம் விரும்புகின்றனர்.

ஆனால் இந்தியாவில் தற்போதைய சூழ்நிலையில் பாம்புகள் தனியார் நிறுவனங்களிடமோ அல்லது இது போன்ற பாம்பாட்டிகளிடமோ இருப்பதாக அறிந்தால் உடனே அவரைக் கைது செய்து ஏழாண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் அரசு விதிக்கிறது.


0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls