Saturday, March 31, 2012

சென்னையை சேர்ந்த மாணவி உள்ளிட்ட முவர் - மிஸ் இந்தியா பட்டம் வென்றனர்!

சென்னையை சேர்ந்த 23 வயது இளம்பெண் ரோச்சல் மரியராவ் உள்பட 3 பெண்கள் 'மிஸ் இந்தியா' பட்டம் வென்றனர். 'மிஸ் இந்தியா-2012' அழகி போட்டியை பேன்டலூன்ஸ் யஅp பெமினா இணைந்து நடத்தின. இதில் நாடு முழுவதும் இருந்து அழகிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக போட்டிகள் நடத்தப்பட்டன.
அவர்களில் இருந்து இறுதிச் சுற்றுக்கு 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதி போட்டி நேற்று மும்பையில் நடந்தது. பிரம்மாண்டமாக நடந்த போட்டியில் பாலிவுட் நடிகைகள் சோனம் கபூர் சோனாலி பிந்த்ரே தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இயக்குநர் ரோகித் ஷெட்டி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பாடகர் சோனு நிகம் உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்றனர்.

முன்னாள் உலக அழகி இவியன் சர்கோசும் கலந்து கொண்டார். இறுதி போட்டியில் சென்னையை சேர்ந்த 23 வயது இளம்பெண் ரோச்சல் மரியராவ் மிஸ் இந்தியா சர்வதேச அழகி சண்டிகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் வன்யா மிஸ்ரா மிஸ் இந்தியா உலக அழகி புனேவை சேர்ந்த 24 வயது பிரச்சி மிஸ்ரா மிஸ் இந்தியா எர்த் அழகி ஆகியோர் பட்டம் வென்றனர்.

இவர்களுக்குஇ கடந்த ஆண்டு 'மிஸ் இந்தியா' அழகிகளாக தேர்வு செய்யப்பட்ட கனிஷ்தா தான்கர் ஹஸ்லின் கவுர் மற்றும் அங்கீதா ஷோரே ஆகியோர் கீரிடம் சூட்டினர். மிஸ் இந்தியா பட்டம் வென்றவர்களில் வன்யா மிஸ்ரா இந்தாண்டுக்கான உலக அழகி போட்டியிலும் பிரச்சி மற்றும் ரோச்சல் ஆகியோர் பூமி அழகி போட்டியிலும் இந்தியா சார்பில் பங்கேற்பார்கள். சென்னையை சேர்ந்த ரோச்சல் மரிய ராவ் எம்ஓபி வைஷ்ணவா பெண்கள் கல்லூரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.ஷ

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls