Monday, March 26, 2012

மடகஸ்கார் தீவில் புதிய காட்டு நாரை கண்டுபிடிப்பு

மடகஸ்கார் தீவில் புதிய காட்டு நாரை ஒன்றை பறவையியல் அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
மடகஸ்கார் தீவு ஆப்ரிக்க கண்டத்தின் தென்கிழக்கே இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள பெரிய தீவாகும்.
இத்தீவில் வாழும் விலங்குகளும் தாவரங்களும் மிகவும் அரியவை. உலகில் வேறெங்கும் காண இயலாதவை.
இந்நிலையில் இத்தீவில் வாழ்கின்ற புதிய காட்டு நாரை பறவையினத்தை முனைவர் ஸ்டீவன் குட்மன் தலைமையிலான பறவையியல் அறிஞர் கண்டுபிடித்து இதற்கு  No.69 Mentocrex beankaens என்று பெயர் சூட்டியுள்ளனர்.


இதுகுறித்து அவர்கள் கூறியதாவது பொதுவாக காட்டு நாரைக்குள் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று மடகஸ்கார் தீவின் குளிர் நிரம்பிய கிழக்குப்பகுதியிலும் நடுப்பகுதியிலும் வாழும். மற்றொன்று தீவின் வடகிழக்கில் உள்ள வெப்பமான இலையுதிர் காடுகளில் வாழும்.

அண்மையில் மத்திய மேற்குப் பகுதியில் ஒரு சுண்ணாம்புக்கல் பிளவிற்குள் ஒரு தாய்ப்பறவையும் அதன் குஞ்சையும் கண்டுபிடித்தோம். இதுவும் காட்டு நாரை வகையைச் சேர்ந்தது தான் ஆனாலும் இந்தப் பறவை ஏற்கெனவே அறியப்பட்ட பறவையாகத் தெரியவில்லை.

இது இருவகைக் காட்டு நாரைகளிலிருந்தும் வேறுபட்டுத் தோன்றியது. இதன் இறகுகளின் நிறம் வித்தியாசமாக இருந்தது. இதனை மலகாசி மொழியில் “ஹங்கா பி” என்றனர். இந்தப் பகுதியில் பரவலாக ஆந்தைகள் காணப்படுவதால் “ஹங்கா” என்ற சொல்லால் அழைக்கின்றனர்.

இங்கு பறவை என்றாலே அது பொதுச்சொல்லாக ஆந்தையைக் குறிக்கிறது. மடகஸ்காரில் பொதுவாக பறவைகளும் விலங்குகளும் அழிந்துவிடுவதுண்டு. இதனால் இருக்கும் சில பறவைகளின் விலங்குகளின் மரபு சார்ந்த இனப் பிரிவைக் கண்டுபிடிப்பது சற்று சிரமமான காரியமாகும்.

இறகு மற்றும் னுNயு வேறுபாடு கொண்டு அறிந்ததில் இந்தப் புதிய வகை காட்டு நாரை பெரிதாகத் தோன்றுகிறது. சூழலால் தனிமைப்பட்டு காணப்படுகிறது. இது பெமாரஹா மற்றும் பியாங்கா மலைப் பகுதிகளில் நூறு முதல் 320 மீற்றர் உயரத்தில் தனித்து வாழ்கின்றது.

மலகாசி மொழியில் ட்ஸிங்கி எனப்படுகின்ற பாறை உச்சிகளில் இந்த பறவை வாழ்கிறது. இங்கும் பாறைகளும் உலர்ந்த இலையுதிர் காடுகளுமே உண்டு. இந்த காட்டுநாரை வாழும் இடம் வரையறுக்கப்பட்ட குறுகிய இடமாக இருப்பதால் மேலும் விபரங்கள் அறிய இயலவில்லை.

ஆயினும் அதன் வாழிடம் பாதுகாப்பாக பகுதியாக இருக்கிறது. இந்தப்பகுதியை மடகஸ்காரின் பல்லுயிர்ம பாதுகாப்பு அமைப்பு கண்காணித்து பராமரித்து வருவதால் இந்தப் பறவைகளுக்கு ஆபத்தில்லை என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls