Sunday, March 25, 2012

ஐரோப்பிய நாடுகளில் இலங்கைத் தூதரகங்களை மூடுகிறது அரசாங்கம்? - வாரஇதழ் தகவல்!!

ஐரோப்பிய நாடுகளில் செயற்படும் சில இலங்கைத் தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரபல வாராந்த பத்திரிகையொன்று செய்திவெளியிட்டுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரினை அடுத்து வெளிநாட்டு சேவைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை உரிய முறையில் முன்னெடுக்காத நாடுகளிலுள்ள தூதரகங்களை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பிரான்ஸ் ஜேர்மனி பிரித்தானியா போன்ற நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் தொடர்ந்தும் செயற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்கும் சிறிய தேசங்கள் அனைத்தையும் உள்ளடக்கும் வண்ணம் எதிர்காலத்தில் ஓர் தூதரகத்தை அமைக்கவுள்ளதாக உயர்மட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் மூடப்படும் தூதரகங்களுக்கு பதிலாக தென்னாபிரிக்க இலத்தீன் அமெரிக்க மற்றும் ஆசியாவின் நட்புறவு நாடுகளில் புதிய தூதுவராலயங்களை நிறுவவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உகண்டா மற்றும் கொங்கோ ஆகிய நாடுகளில் வெகுவிரைவில் இலங்கை தூதரகங்கள் நிறுவப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls