Saturday, March 31, 2012

மனித நோய்களை கண்டுபிடிக்கும் ரோபோ

பலவிதமான ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் தற்போது மனிதர்களின் நோயை கண்டறியும் ரோபோக்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை ஒரு உயிரினம் போன்று தாங்கள் பணியை செய்ய முடியும்.
இதை இங்கிலாந்தில் உள்ள நியூகேஸ்டில் பல் கலைக்கழகத்தின் சர்வதேச நிபுணர்கள் குழு வடிவமைத்துள்ளது. மைக்ரோ ரோபோ என அழைக்கப்படும் இவற்றில் மைக்ரோ எலெக்ட் ரானிசுடன் சைபர் பிளாசம் கலக்கப்பட்டுள்ளது. இது அட்லாண்டிக் கடலில் ஆழ் பகுதியில் வாழும் 'லேம்பிரே' என்ற உயிரினத்தின் செயல்பாடு போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

சைபர் பிளாசத்தில் எலெக்ட்ரானிக்ஸ் நம்பு மண்டலம் கண் மூக்கு உள்ளிட்ட உணர்வு உறுப்புகள் உள்ளன. இவை பாலூட்டிகளின் செல்களில் இருந்து தயாரிக்கப்பட்டவை. இவற்றை செயற்கை தசை என்று அழைக்கின்றனர்

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls