Tuesday, March 27, 2012

தீர்மானத்தை பின்பற்ற முடியாது : இலங்கை திட்டவட்டம்

ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முதலே கடுமையாக பேசி வருகிறது இலங்கை. இதன் தொடர்ச்சியாக தற்போது தீர்மானத்தை பின்பற்ற முடியாது என இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் கடந்த வாரம் ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டது
அந்த தீர்மானத்தில் இறுதிக்கட்ட போர் குறித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசு முறையாக பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தீர்மானம் நிறைவேறினாலும் அல்லது நிராகரிப்பட்டாலும் அதை ஏற்றுகொள்ள கூடாது என்பது ஏற்கனவே எடுத்த முடிவு என இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்ததை நாட்டின் இறையாண்மையில் தலையிடுவதாக கருதுவதாகவும் அவர் கூறினார்.

மேலும்இஐ.நா மனித உரிமை குழுவில் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த மற்றும் தீர்மானத்தை புறக்கணித்த நாடுகள் இலங்கை அரசின் கொள்கையை புரிந்துகொண்ட நாடுகள் என பாராட்டிய வெளியுறவு அமைச்சர் பெரீஸ் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்ற கருத்தை மறுத்தார்.

மேலும்இ இதுவொன்றும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் முடிவு அல்ல என்பதை சுட்டிக்காட்டிய இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் தீர்மானத்தை ஆதரித்தது பற்றி இந்திய பிரதமர் எழுதிய கடிதத்திற்கு பதில் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.

இதனையடுத்து மே மாதம் 18ஆம் தேதி இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளிண்டனை நேரில் சந்தித்து பேச உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls