Friday, March 30, 2012

வரலாற்றை நினைவுபடுத்தியதால் மீளப் பெறப்பட்ட முத்திரை

1956இல் 'விஜயனின் வருகை' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை(முத்திரை) ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும் கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இத் தபால் தலை அமைந்திருந்தது.
தபால் தலையைப் பார்த்த பெரும்பான்மையினத் தலைவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
"விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல. தவிரவும் விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப் பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால் இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகி விடும். எனவே இந்தத் தபால் தலையை வாபஸ் பெற வேண்டும்" என்று கூறினார்கள்.

இதன் காரணமாக இந்தத் தபால் தலையை இலங்கை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. ஆனால் அதற்குள் இத் தபால் தலை உலகம் முழுவதும் பரவி விட்டது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls