Thursday, March 29, 2012

உலகின் கண்டங்கள் அனைத்தும் இணைந்து புதிய அமேசியா கண்டம் உருவாகும் - விஞ்ஞானிகள் தகவல்

உலகில் உள்ள கண்டங்கள் அனைத்தும் இணைந்து அமேசியா என்ற புதிய பெரிய கண்டம் உருவாகும் என புவி யியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் அமெரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களின் வடக்கு பகுதி நீர் மற்றும் காற்றுப்போக்கினால் இணையும். இதனுடன் ஆர்டிக் கடலும் கரீபியன் கடலும் ஒன்றாக சேரும். இதன் மூலம் மிகப்பெரிய புதிய கண்டம் உருவாகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பூமியின் அடியில் உள்ள பிளேட்டுகள் தற்போது நகர்ந்த வண்ணம் உள்ளன.

இதனால் ஆசியா மற்றும் அய்ரோப்பிய கண்டங்களின் வடக்கு முனை பூமி பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கும் அபாயம் உள்ளன. அதுபோன்ற மாற்றங்களினால் ஆஸ்திரேலியா கண்டம் இந்தியாவுடன் இணையலாம். என தெரியவந்துள்ளதாக தகவல் வெளியிட்டு உள்ளார்

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls