Tuesday, March 27, 2012

ஜேர்மனிக்கு இனி வசந்த காலம் ஆரம்பம்.........

ஜேர்மனியில் இந்த வார இறுதியில் வெயில் குறைந்து விடும் என்று வானிலை அறிவிப்பு மையம் (DWD) நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.
விண்கல் ஆய்வாளரான டா ரதியா பேட்ஸோல்டு ஜேர்மனி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அண்மையில் வெகு வேகமாகப் பரவி வந்த காட்டுத்தீக்கு ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக கூறி நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
இனி வெப்பம் குறிப்பிட்ட அளவுடையதாகவே இருக்கும் என்றும் கூறினார். உயர் அழுத்தம் காரணமாக வெப்பம் அதிகமாக இருந்தது. இனி அட்லாண்டிக் கடலில் இருந்து குளிர்காற்று புறப்பட்டு ஸ்காண்டிநேவியா வழியாக ஜேர்மனிக்குள் வரத் தொடங்கும். புதன்கிழமை வீசத் தொடங்கும் இந்தக் காற்று வார இறுதியில் ஜேர்மனியை வந்து குளிர்விக்கும்.


செவ்வாய் இரவு முதல் வெப்பம் குறையும் அதே வேலையில் நாட்டின் மேற்குப் பகுதியில் அதிகபட்சமாக வெப்பம் 7 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். செவ்வாயன்று பகல் பொழுதில் வானத்தில் முதல் மேகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பரவி இருக்கும். இந்த மேகங்கள் வார இறுதியில்தான் மழையாகப் பொழியும்.

கடற்கரையோரம் காற்று புதிதாகவும் குளிராகவும் மென்மையாக வீசும். நாட்டின் தென் மேற்குப் பகுதியில் இன்னும் கொஞ்சம் வெப்பம் நீடிக்கும். செவ்வாய் இரவில் வானத்தில் மேகங்கள் குழுமியதும் வெப்பநிலை 0 டிகிரி முதல் 1 டிகிரி செல்சியஸ் என்று குறையக்கூடும்.

புதன்கிழமை காலை மெல்ல மெல்ல குளிர்ச்சி பரவத் தொடங்கும். ஆனால் ரைன் நதியின் மேற்பகுதியில் ((Upper area) வெப்பம் 22 டிகிரி ஆக இருக்கும். ஜேர்மனியின் வடக்குக்கடற்கரையில் 12 டிகிரி வெப்பம் நிலவும். ஜேர்மனியின் வடபகுதியிலும் கடற்கரையிலும் குளிர்காற்று வேகமாக வீசத் தொடங்கும்.

புதன்கிழமைக்குப் பின்பு பொதுவாக வெப்பம் 7 டிகிரி முதல் 11 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதிகபட்சமாக 13 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று பேட்ஸோல்டு தெரிவித்தார்.

புதன் இரவில் வடக்கு ஜேர்மனியில் கார்மேகம் சூழ்ந்து மழை பொழியும். தென்பகுதியில் வானம் மேகங்கள் இல்லாமல் தெளிவாக இருக்கும். ஆல்ப்ஸ் மலையின் சிகரங்கள் பனியால் மூடப்பட்டு இருக்கும்.

வியாழன் காலை சூரியன் உதித்ததும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி மழைக்காற்று வீசும்இ மழை பெய்யும். வடக்கில் 10 டிகிரி செல்சியஸ் தெற்கில் 13 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும். அடுத்த வாரம் முழுவதும் இந்த மழை நீடிக்கும்

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls